Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi....21...1

  • Thread Author
அத்தியாயம்….21….1

மகனிடம் பேசிய பின் நர்மதா துகிலனை பார்த்தாள்.. துகிலன் தான் இந்த உலகிலேயே இல்லாதது போலான ஒரு பாவனையில் வீடியோ காலில் பேசிக் கொண்டு இருந்தவனையே மனம் நிறைவோடு பார்த்து கொண்டு இருந்தாள்..

மஞ்சுளாவின் முகத்தில் தெரிந்த சோர்வை கவனித்து விட்டு… “ ஆஸ்பிட்டல் போனியா…?” என்பது போலான பிற விவரங்கள் மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்த போது நர்மதாவின் பார்வை அவனுக்கு உணர்த்தியது போல.. நிமிர்ந்து நர்மதா நின்று கொண்டு இருந்த பால் கனி பக்கம் தன் பார்வையை செலுத்தினான்…

நர்மதாவும் துகிலன் தன்னை பார்க்கவும்… “ நான் என் ரூமுக்கு போறேன்…” என்று சைகையில் சொல்ல… துகிலன் அப்போது தான் அவளை போக விடாது தடுத்ததே உணர்ந்தான்…

எப்போதும் தன் மகிழ்ச்சியை நர்தாவிடம் சொல்வது போல.. இதையுமே அவளை பார்த்த நொடி…

“நம்மூ வா இங்கு வா…. நம்ம நர்த்தகனுக்கு சிஸ்டரோ இல்ல பிரதரோ வர போகுது….” என்றதும் நர்மதாவுக்குமே மகிழ்ச்சி..

அதில்.. “ வாவ் கங்கிராஜ்லேஷன் துகி…” என்று சந்தோஷத்தில் கத்தியவள்.. எதை பற்றியும் யோசிக்காது துகிலன் அருகில் நின்று அவள் தோளின் மீது ஒரு கை போட்டவள்… துகிலன் கையில் இருக்கும் போனை பார்க்க ஏதுவாக குனிந்து..

“மஞ்சு கங்கிராஜிலேஷன்…” என்று முகம் முழுதும் புன்னகையுடன் உண்மையான மகிழ்ச்சியுடன் தான நர்மதா மஞ்சுளாவை வாழ்த்தியது…

ஆனால் பேசியில் இருவரையும் ஒரு சேர… அதுவும் அத்தனை நெருக்கமாக. இருவரின் உடையையும். ஒரே அறையில் அந்த நேரத்தில் அவர்கள் ஒன்றாக இருப்பதை திக் பிரம்மையுடன் பார்த்த மஞ்சுளா நர்மதாவின் வாழ்த்துக்கு நன்றி சொல்லாது இருவரையுமே மாறி மாறி பார்த்தவள்.. இத்தனை நேரம் இருந்த சந்தோஷம் துணி கொண்டு தொடைத்தது போலான ஒரு மனநிலையை கொடுத்தது அவர்களின் அந்த நெருக்கம்…

ஒன்றும் பேசாது தன் கை பேசியை கணவனின் இணைப்பில் இருந்து துண்டித்தவள் மொத்தமாகவும் தன் கை பேசியை அணைத்து விட்டாள்…

கை பேசியை அணைத்து விட்டாலுமே, அந்த கை பேசியின் மூலம் அவள் செவியில் கேட்ட…

நம்மூ நர்த்தகனுக்கு சிஸ்டரோ பிரதரோ… வர போறாங்க.. என்று துகிலன் பேசிய அந்த வார்த்தை மட்டுமே திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருந்தது…

உண்மை தான்.. தனக்கு பிறக்கும் குழந்தை நர்த்தகனுக்கு தங்கையோ தம்பியோ தான்.. அதை மறுப்பதற்க்கு இல்லை ..

ஆனால் இதை தன்னிடம் அவன் சொல்லி இருக்க வேண்டிய வார்த்தை… ஆனால் ஆனால்…

மறுநாள் மாலினி முன் பதிவு செய்த மருத்துவமனைக்கு தன் மகளை அழைத்து சென்றார்.. ஷண்முகம் பெண்களை தனியாக அனுப்பாது கூட சென்றார்..

ஆட்டோ வேண்டாம் என்று தெரிந்த காரில் தான் அந்த மருத்துவமனைக்கு சென்றது.. விசயம் தெடிந்த சந்தீப்பும் மஞ்சுளாவுக்கு வாழ்த்து தெரிவித்தான்..

இப்போது மஞ்சுளா எதையும் காண்பித்து கொள்ளவில்லை. ஏதோ மனதில் ஒரு உறுதி… ஏதோ ஒரு முடிவு எடுத்தவளாக தெளிந்த மனதோடு தான் தன் பெற்றோர்களுடன் மருத்துவமனைக்கு சென்றாள்…

அனைத்து பரிசோதனைகளும் முடித்து… மஞ்சுளா நினைத்தது போல குழந்தை தான்… நார்பத்தி ஐந்து நாட்கள் ஆகிறது… நல்ல அரோக்கியமாக தான் குழந்தை இருக்கிறது என்று சொன்ன மருத்துவர்..

அடுத்து சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள்… என்று சொன்னவர்.. பின் சத்து மாத்திரைகளையும் எழுதி கொடுத்தார்.. மஞ்சுளாவுமே தனக்கு இருந்த ஒரு சில சந்தேகத்தை கேட்டு தெளிவு படுத்தி கொண்ட பின் தான் அந்த மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தார்கள்..

அந்த மருத்துவமனைக்குள்லேயே ஒரு உணவமும் இருந்தது… நல்ல முறையில் தான் அங்கு உணவு இருக்கும்.. இவளின் அக்கா ஜெய மாலிக்கு இங்கு தான் பார்த்தது என்பதினால் விவரம் தெரிய.

மஞ்சுளா தான்.. “ ம்மா சாப்பிட்டு விட்டு செல்லலாம்..” என்று சொன்னது..

உடனே மாலியும் ஷண்முகமும்.. “ சரிடா சரிடா.” என்று விட்டு தெரிந்த காரில் வந்ததால் அந்த ஓட்டுனரையும் அழைத்து தான் சாப்பிட்டனர்…

சாப்பிட்டு முடித்த பின் காரில் ஏறும் சமயம் இவர்கள் காரை ஓட்டினார் போல மற்றோரு கார் வந்து நின்றது… அந்த காரை பார்த்ததும் தெரிந்து விட்டது… யாருடையது என்று… மஞ்சுளா அலட்டி எல்லாம் கொள்ளவில்லை.

மிக நிதானமாக தான் இருந்தாள்… ஷண் முகமும் மாலினியும் தான். மாப்பிள்ளை மகளை பார்க்க மருத்துவமனைக்கே வந்ததில் அத்தனை மகிழ்ச்சி…

அதில் பட படத்த மாலினி…. “ இப்போ தான் மாப்பிள்ளை டாக்டர பார்த்துட்டு வரோம்.. குழந்தையும் மஞ்சுவும் நல்ல மாதிரியா தான் இருக்காங்க என்று டாக்டர் சொன்னாங்க. நிரை பழம் கீரை காய்கறிகள் எல்லாம் சாப்பிட சொல்லி இருக்காங்க.. கொஞ்சம் விட்டமின் மாத்திரையும் எழுதி கொடுத்து இருக்காங்க…” என்று மாப்பிள்ளையை பார்த்த சந்தோஷத்தில் அனைத்தும் சொல்லி முடித்தார்…

துகிலன் தன் மாமியார் சொன்னது அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்தாலும், அவன் பார்வை தன் மனைவியிடம் தான் இருந்தது…

இதை எல்லாம் இவள் எனக்கு சொல்ல வேண்டும் என்று மனதில் நினைத்தவன் ஒன்றும் அதை பற்றி சொல்லவில்லை..

அவனுமே தன் மாமியார் மாமனாரை பார்த்து தான்… “ நான் மஞ்சுவை கூட்டிட்டு போகிட்டு விட்டிற்க்கு கொண்டு வந்து விடுறேன்…” என்று சொன்னவன் பின் என்ன நினைத்தானோ…

தன் மாமியாரிடம்… “ ட்ரவல் எல்லாம் பிரச்சனை இல்லை தானே…?” என்று தன் சந்தேகத்தை கேட்டான்..

“அது எல்லாம் இல்ல மாப்பிள்ளை.. ஆனா கொஞ்சம் பார்த்து மெதுவாக ஓட்டுங்க..” என்று மாலினி தன் கருத்தையும் சேர்த்து சொன்னார்..

“ம்.” என்று மட்டும் சொன்னவன்… காரின் முன் பக்க கதவை திறந்து வைக்க. மஞ்சுளாவும் எந்த பிகுவும் செய்யாது… காரில் அமர்ந்து கொண்டாள்..

அவளுக்கு கணவனிடம் ஒரு சிலதை பேசி தெளிவு படுத்தி கொள்ள வேண்டி இருந்தது.. இந்த சமயத்தில் மனது நிம்மதி தான் மிக முக்கியம். இப்போது மஞ்சுளாவுக்கு அனைத்தையும் விட அவள் குழந்தை தான் முதன்மையாக தெரிந்தது… அதனால் அவளுமே கணவனிடம் பேசி விடலாம் என்ற ஒரு முடிவோடு தான் காரில் ஏறி அமர்ந்தது..

காரை எடுத்த துகிலனும் யோசனையுடன் தான் வந்தான்.. இடை இடையே மனைவியை இரண்டு முறை அதே யோசனை படிந்த முக பாவனையுடன் திரும்பி பார்த்தான் அவ்வளவே…

ஆனால் மஞ்சுளா அப்படி கூட கணவனை திரும்பி பார்க்காது நேர் கோட்டில் சாலையை பார்த்து கொண்டு வந்தாள்… ஆனால் அவள் முகத்திலுமே சிந்தனையின் சாயல் தான்..

மனைவி இது போல இருப்பதால் நீண்ட தூரம் அல்லாத இடமான ஒரு உயர்தர தங்கும் விடுதியும், உணவகமும் சேர்ந்தால் போல இருக்கும் ஒரு ஓட்டலிலன் முன் தான் தன் காரை நிறுத்தியது.

மஞ்சுளா காரில் ஏற எப்படி கதவை திறந்தானோ. அதே போல காரை நிறுத்திய நொடி இறங்கி துகிலன் மறுப்பக்கம் வந்து மனைவிக்கு கார் காதவை திறந்தான்.. மஞ்சுளா இப்போதும் எந்த பிகுவும் செய்யாது பெண்ணவள் இறங்கி கொண்டாள்…

காரை ஒழுங்கு படுத்தும் அந்த ஓட்டலின் பணியாளர் துகிலனின் காரை நிறுத்த வேண்டி அவனிடம் சாவீயை கேட்க வேண்டி கை நீட்ட அவனிடம் தன் கார் சாவீயை கொடுத்த பின் மனைவியோடு… நடந்தவன்..

“இங்கு ரூம் கூட இருக்கு… டையாடா இருந்தா சொல்.. ரூம் எடுத்துடலாம்….ஏன்னா நான் உன் கிட்ட பேசி தெளிவு படுத்த நிறைய பேச வேண்டி இருக்கு…” என்று சொன்ன கணவனின் முகத்தை பெண்ணவள் இப்போது தான் திரும்பி பார்த்தாள்…

பார்த்தவளின் முகம் துகிலன் முகத்தில் இருக்கும் அந்த துளி பதட்டம் கூட இல்லாது ஒரு தெளிவு இருந்தது.

அதே தெளிவு அவள் பேச்சிலும் எதிர் ஒலித்தது…. “ம் பரவாயில்லை இங்கேயே பேசலாம்.. நானுமே உங்க கிட்ட நிறைய பேச வேண்டி தான் இருக்கு… முடியலேன்னா ரூம் புக் பண்ணுங்க…” என்று சொன்ன மனைவியையே தான் துகிலன் பார்த்தான்…

அவன் மனைவியாக உணர்ந்த அந்த பத்து நாட்களில் ஒரு முறை கூட இது போலான ஒரு தெளிவான பேச்சை அவளிடம் இருந்து அவன் கேட்டது இல்லை…

அதை கொண்டு கூட அவன் மனைவியை கடிந்து கொண்டு இருக்கிறானும் கூட.. ஆனால் இன்றைய மனைவியின் இந்த தெளிவு… அதுவும் தன் கண்ணை பார்த்து பேசிய அந்த தன்மை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை…

இன்னும் கேட்டால் துகிலனுக்கு பெண்கள் இது போல தான் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவன் ..

ஆனால் இன்று தன் மனைவி இது போலான பேச்சை அவன் ரசிக்கவில்லை.. தன்னை பார்த்தாளே பட படக்கும் அந்த கண்களும்.. தான் ஒரு நிமிடம் அவளை உத்து பார்த்தாலே கன்னங்கள் இரண்டும் சிவந்து போய் தன்னை பார்க்க முடியாது தலை குனிந்து கொள்ளும் பெண்ணவளை தான் அவன் மனம் அவளிடம் இருந்து எதிர் பார்த்தது.

மனிதர்களின் மனமே ஒரு வித்தியாசமானது தானே…. கிடைக்காததிற்க்கு ஏங்குவதும்.. கிடைத்த பின்… அதை சட்டை செய்யாது இருப்பதும் தானே மனதின் இயல்பு..

முன் வேண்டாம் என்ற பெண்ணவளின் அந்த குணம் தான் இப்போது ஆணவனுக்கு தேவையாக இருந்தது.. அதுவும்ம் குழந்தை உண்டாகி இருக்கும் இந்த சமயத்தில் அதை தந்தவனிடம் பெண்ணவள் நாணி கோணி ஏன் நேற்று இரவு கூட வீடியோ அழைப்பில் மனைவியை அது போல தானே கண்டது…

நேற்று வீடியோ அழைப்பில் என்று துகிலன் நினைத்த நொடியே.. ஆணவனுக்கு நேற்று தன்னையும் நர்மதாவையும் மாறி மாறி பார்த்தது பின் பேசியின் தொடர்பு துண்டித்து கொண்டது.. பின் மொத்தமாக அணைத்து விட்டது இதுவும் சேர்ந்து நியாபகத்தில் வர..

பேசி ஆக வேண்டும்.. இவள் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள் என்ற வேகம் தான். மஞ்சுளா சொன்னது போல் அந்த உணவகத்தில் இருக்கும் வெட்ட வெளியில் தான் எதிர் எதிராக அமர்ந்து கொண்டனர்..

அது காதலர்களுக்கு என்று இருக்கும் உணவகம் போல. அதுவும் அவர்கள் அமர்ந்து இருக்கும் அருகில் ஒரு நீச்சல் குளமும் இருக்க. அதில் இளம் ஜோடிகள் தங்களை மட்டும் அல்லாது அக்கம் பக்கத்தவர்களையும் மறந்த நிலையில் தான் அவர்கள் இருந்தது…

அதே போல் தான் ஒரு சில ஜோடிகள் அங்கு அத்தனை இருக்கைகள் இருக்க. ஒருவர் மடி மீது ஒருவர் அமர்ந்து கொண்டு ஒருவரின் மூச்சு காற்றை மற்றவர்கள் சுவாசிப்பது போல தான் அத்தனை நெருக்கத்தில் இருந்தனர்.

முன் என்றால் மஞ்சுளா கணவன் இருக்க.. இது போலான காட்சியை பார்த்ததில் அவளுக்கு ஒரு மாதிரியாக தான் ஆகி இருக்கும்.. ஆனால் இப்போது எந்த மாதிரியும் ஆகாது அதே நிர்மலமான முகத்தோடு தான் மஞ்சுளா தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்..

அதாவது… “ கொஞ்சம் தொண்டை காய்ந்தது போல இருக்கு… ஏதாவது ஒரு பழச்சாறு வேண்டும்…” என்று சொல்ல.

துகிலன் உடனே மாதுளை பழச்சாற்றை வர வழைத்து கொடுத்தவன்..

“ஏதாவது சாப்பிட ஆர்டர் செய்யட்டுமா….?” என்றும் கேட்டான்..

மஞ்சுளா. “ இல்ல வேண்டாம் இப்போ தான் சாப்பிட்டேன்…” என்று சொல்லி விட்டு வர வழைத்த பழச்சாற்ற குடித்து முடித்தாள்.

இவர்கள் இருவரின் பேச்சுக்களும் கணவன் மனைவி பேசுவது போல இல்லை.. எதோ தொழில் ரீதியாக சாப்பிட வந்தவர்கள் பேசுவது போல ஒரு இயந்தர தன்மையாக தான் இருந்தது.. இது போல பேச்சு மஞ்சுளாவுக்கு எப்படியோ ஆனால் ஆணவனுக்கு பிடிக்கவில்லை..

மனைவியை ஒரு மாதிரியாக தான் பார்த்து கொண்டு இருந்தான். மனைவி பழச்சாறை குடித்து முடித்தது… துகிலன் ஏதோ பேசும் முன்பே மஞ்சுளா….

“நீங்க எங்க எக்ஸ் மனைவியை எதற்க்காக டைவஸ் செய்திங்க….?” என்று கேட்டு விட்டாள்…

இது வரை மனைவியின் இந்த ஓட்டாத நடவடிக்கையில் ஏதோ குறைவது போல இருந்த துகிலனின் மனது மனைவியின் இந்த கேள்வியில்..

கோபம்… அது அவன் முகத்திலும் தெரிந்தது…. குரலிலுமே வெளிப்பட்டது தான்.. ஆனால் கத்தவில்லை.. கத்தாது தான்..

“ஏன் கேட்கிற…?” என்று கேட்டான்.. அந்த இரண்டு வார்த்தை கூட அவன் பல் இடுக்கில் இருந்து தான் வெளி வந்தது…

கணவனின் இந்த கோபமான முகத்தை பார்த்தோ… கோபமான குரலை கேட்டோ எல்லாம் பெண்ணவள் பயந்து விடவில்லை..

அதற்க்கு மாறாக இது வரை இருக்கையில் பின் பக்கம் சாய்ந்தது போல இலகுவாக அமர்ந்து கொண்டு இருந்த பெண்ணவள்…

நேர் கொண்டு அமர்ந்தவளாக…. “ நீங்க டைவஸ் பண்ண உங்க எக்ஸ் ஒய்ப்… உங்க கூட இல்லாம வேறு எங்காவது இருந்து இருந்தா… உங்க இரண்டு பேருக்கும் பேச்சு வார்த்தையே இல்லாது இருந்து இருந்தால், நான் உங்க கிட்ட கேட்டு இருந்து இருக்க மாட்டேன்..

ஆனால் நான் கேட்காம போனாலுமே… நியாயமா இப்போ மனைவியா இருக்கும் என் கிட்ட நீங்க சொல்லி இருக்கனும் தான்.. ஆனால் அதை விடுங்க… இப்போ நீங்க இரண்டு பேரும் நகமும் சதையுமா இப்படி இருக்கிறிங்கலே…. எதுக்கு டைவஸ் பண்ணிங்க..? புரியல.. அத நீங்க தானே நீங்க எனக்கு விளக்கம் கொடுக்கனும்…” என்று கேட்டாள்..




 

grg

Well-known member
Joined
Oct 18, 2024
Messages
195
😍😍😍
மஞ்சு சரியான கேள்வி கேட்டுட்டா... மஞ்சு ஏதோ முடிவு பண்ணி தான் கேள்வி கேட்க ஆரம்பித்து இருக்கா..இப்போ பதில் சொல்லு ராசா.... சும்மா கோபப்பட்டு பேசி விஷயத்தை பெருசு பண்ணாம....
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
259
சூப்பர் 👌 சரியா கேட்டா தெளிவாகுற வரை விடாத மஞ்சு 😎
எத்தனை நாளா மண்டை காய விடுறாங்க 🥴🥴🥴
 
Top