Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru jodi. 23.1

  • Thread Author
அத்தியாயம்….23.1
துகிலனுக்கு மனைவியின் பேச்சில் இருந்த உண்மையில் ஆமாம் இதை நாம ஏன் சொல்லி இருக்க கூடாது… நம்மூ எத்தனையோ முறை அவளுக்குள் அவனாக போராடி கொண்டு இருப்பதை கடந்த மூன்று ஆண்டுகளாக அவன் பார்த்து கொண்டு தானே இருக்கிறான்… என்று நினைத்து கொண்டே நிமிர்ந்து தன் மனைவியை துகிலன் பார்த்தான்…
அவளோ இத்தனை நேரம் ஆவேசமாக பேசியதற்க்கு எதிர் பதமாக மிகவும் சோர்வாக தலையை தாங்கி அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து துகிலன் அனைத்தும் மறந்து…
தன் மனையின் பக்கம் அமர்ந்தவன்… “என்ன பண்ணுது சில்க்கி/ ரொம்ப டையாடா தெரியிற…?” என்று கேட்டான்..
துகிலனின் இந்த கேள்வியில் தலையை தாங்கி அமர்ந்து இருந்த மஞ்சுளா பக்க வாட்டாக திரும்பி கணவனை பார்த்தவள்..
“அது தான் நீங்கலே டையாடா தெரியிற என்று சொல்லிட்டிங்கலே அப்புறம் என்ன…?” என்று கோபமாக கேட்டாள்…
மஞ்சுளாவுக்கு இந்த மசக்கை போலான சமயத்தில் இருக்கும் சோர்வு.. அதை விட காலையில் இருந்து அத்தனை தூரம் பயணம்.. பின் மருத்துவமனையின் அனைத்து பரிசோதனையும் எடுத்து ரிசல்ட் வர காத்திருந்து மருத்துவரை பார்த்து விட்டு என்று அத்தனை நேரம் மருத்துவமனையில் இருந்தது.. பின் இதோ கணவனிடம் இத்தனை நேரம் அமர்ந்து கொண்டு பேசியதில் என்று அவளின் உடல் கொஞ்சம் எங்காவது படுத்து கொண்டால் தேவலை என்பது போலான நிலையில் அவள் உடல் இருந்தது என்றால், உள்ளம்.. இதை முதலிலேயே சொல்வதற்க்கு என்ன குறைந்த பட்சம் தன்னிடமாவது நர்மதாவை பற்றிய இந்த உண்மையை சொல்லி இருந்து இருக்கலாமே..
அத்தனையா தன் மீது நம்பிக்கை கிடையாது… அப்படி நம்பிக்கை இல்லாதவன் தன்னோடு எப்படி குடும்பம் நடத்தினான். அப்போ அதுக்கு மட்டும் நான் தேவையா..? என்று அவள் மனது குழம்பி தவித்து போனதில் உடல் சோர்வு இன்னுமே அவளுக்கு அதிகமாக தெரிந்தது..
இதில் கணவன் சோர்வா இருக்க என்று கேட்டதில் அவனை வெட்டவா…? குத்தவா..?என்று ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.. திருமணம் ஆனதில் அந்த நாளுக்கு உண்டான மகிழ்ச்சியை தான் தனக்கு கணவன் கொடுக்கவில்லை.. அதற்க்கு மாறாக மன உளைச்சலை தான் தனக்கு அவன் பரிசாக கொடுத்தது….
அதே போல இப்போதுமே குழந்தை உண்டாகி இருக்கும் இந்த தருணத்தில் எப்படி இருக்கும் என்று கூட இவனுக்கு தெரியாதா…? இதில் எற்கனவே ஒரு குழந்தையின் தந்தை வேறு… இது எல்லாம் நினைத்து தான் மஞ்சுளா கணவனை முறைத்து பார்த்தது..
இத்தனை நாள். இத்தனை நாள் என்ன…? இத்தனை நாள்…? கணவனோடு சேர்ந்து இருந்த அந்த பத்து நாட்களில் கணவனை இது போல அவள் தைரியமாக எல்லாம் முறைத்தது கிடையாது..
அது என்னவோ பெண்களுக்கு கணவன் தாலி கட்டி மனைவியாக கிடைக்கும் உரிமையை விட அவன் குழந்தையை சுமக்கும் போது கிடைக்கும் அந்த தொப்புள் கொடி கொடுக்கும் அந்த உரிமையானது கணவனிடம் அதிக உரிமையும் எடுத்து கொள்ள வைக்கிறது.. அதே போல இது போல தைரியத்தையுமே சேர்த்து கொடுத்து விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்…
மனைவியின் பார்வையில்.. “என்ன டி முறைக்கிற…?” என்று கேட்ட துகிலனின் கேள்வில் கோபம் இல்லை.. ஒரு உல்லாசம் தான் இருந்தது…
ஆனால் அதற்க்கு எதிர் பதமாக மஞ்சுளாவின் முகத்தில் கோபத்தை மீறிய சோர்வு தெரிய…
“ என்னம்மா.. சில்க்கி.?” என்று கேட்டது தான்.
மஞ்சுளா. “ நான் குழந்தை உண்டாகி இருப்பது தெரியும் தானே… வீட்டில் இயர்லியா எழுந்து.” என்று மனைவி சொல்ல ஆரம்பிக்கும் போதே துகிலனுக்கு தன் தவறு புரிந்தது….
அதில் …” சாரி சாரி..” என்று மன்னிப்பு கேட்டவன்..
மனைவியை அலுங்காது குலுங்காது தன் ஆடி காரை ஆடாது மஞ்சுளாவின் தாய் வீடு வரை செலுத்தினான். அந்த பயணத்திலும் அத்தனை அமைதி.. காரணம் மனைவி காரில் ஏறியதுமே தூங்கி விட்டாள்.
அவளை தொந்தரவு தராது மிதமான வேகத்தில் காரை செலுத்தி கொண்டு இருந்த துகிலனின் மனதிலோ வெளியில் இருக்கும் அமைதி இல்லை…
தான் செய்த முட்டாள் தனம்.. அதனால் பாதிக்கப்பட்ட மஞ்சுளாவின் குடும்பம் என்று சிறிது நேரம் அதிலேயே துகிலனின் மனது சுழண்டது.. அடுத்து தான் என்ன செய்ய வேண்டும்.. அதுவும் செய்ய வேண்டியதை எத்தனை விரைவாக செய்ய வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவனின் கண்கள் தன்னால் தூங்கி கொண்டு இருந்த மனைவியின் முகத்தை பார்த்தது….
பின் மெல்ல மெல்ல கீழே இறங்கி மனைவியின் வயிற்று பகுதிக்கு அவனின் கண்கள் சென்ற நொடி… உடையவன் தான் பார்க்கிறான் என்று அந்த காற்றுக்கும் தெரிந்ததா…..? இல்லை அவள் கட்டி கொண்டு இருந்த அந்த மெல்லிய சேலைக்கு தெரிந்ததா….?
இது இரண்டில் எது என்று தெரியாது போனாலும் துகிலனின் கண்கள் மனைவியின் வயிறுக்கு வரும் சமயம்..
காரில் ஏறும் போதே மஞ்சுளா சொன்ன..” ஏசி வேண்டாமுங்க… எனக்கு ரொம்ப தலை வலிப்பது போல இருக்கு.” என்று சொன்னதினால் ஏசியை அணைத்ததுமே காரின் ஜன்னல் கதவை திறந்து விட்டது…. அதன் வழியே வந்த காற்றானது…. மஞ்சுளாவின் சேலையை விலக்கி விட்டதில்,.. ஒட்டிய அவள் வயிற்று பகுதி பளிச் என்றே அவன் கண்ணுக்கு தெரிந்தது.
பார்வை மனைவியின் அந்த வயிற்று பகுதி மீதே கொஞ்சம் நிலை பெற்று விட்டது.. பின் சாலையை பார்த்து ஓட்ட ஆரம்பித்த துகிலனால் தொடர்ந்து சாலையில் கவனத்தை வைத்து அவனால் காரை செலுத்த முடியவில்லை..
அவன் மட்டும் தனித்து இருந்து இருந்தால் தொடர்ந்து காரை செலுத்தி இருந்து இருப்பானோ என்னவோ… கூட மனைவி.. அதுவும் இப்போது தான் கர்ப்பம் என்று உறுதி செய்து வந்த இந்த நிலையில் ஒரு சின்ன அசம்பாவிதம் நிகழ கூட அவன் விரும்பவில்லை..
கூடவே தெரிந்தோ தெரியாமலோயோ.. ஏற்கனவே அவளுக்கும் அவள் குடும்பத்திற்க்கும் போதிய மட்டும் மன உளைச்சலை கொடுத்து விட்டோம்… இனி தன்னால் தெரியாது கூட அவர்கள் தன்னால் பாதிக்கப்பட கூடாது என்று நினைத்து யாரும் அற்ற அந்த சாலையில் ஒரு மரத்திற்க்கு கீழே தன் காரை நிறுத்து விட்டான்..
கார் நின்றது கூட தெரியாது மனைவி சுகமாக உறங்கியதை பார்த்தவனுக்கு நேற்று மனைவி உறங்கி இருக்க மாட்டாள் என்று தான் தெரிந்தது..
கூடவே தன்னையும் நம்மூவையும் ஒரே அறையில் ஒன்றாக பார்த்ததில், மொட்டை மாடிக்கு சென்றேன் என்று மனைவி சொன்னதும். துகிலனின் நியாபகத்தில் வந்தது…
கண்டிப்பாக இரவு சரியாக உறங்கி இருந்து இருக்க மாட்டாள்.. இதில் இது போலான சமயத்தில் இத்தனை தூர பயணம்.. என்று அனைத்தும் நினைத்து தன் மனைவியையே தான் துகிலன் பார்த்து கொண்டு இருந்தான்..
அவனை எப்போதுமே மனைவியிடம் ஈர்க்கும் அந்த சிறிய ஜிமிக்கியை தான் இன்றுமே மஞ்சுளா அணிந்து இருந்தாள்..… மிக மிக சின்னது தான்…
அதுவும் பழையதுமே..அவன் வசதிக்கு துகிலன் தன் மனைவிக்கு வைரத்தினாலேயே உடல் முழுவதுமே அணிகலண்களாக அணிவித்து இருந்து இருக்கலாம்… வாங்கியும் இருக்கிறான் தான்..
ஆனால் இந்த சிமிக்கி… அது என்னவோ.. அவளை இந்த சிமிக்கியில் பார்க்கும் போது அவளிடம் இன்னுமே பெண்மை மிளர்வது போல அவனின் மனதில் ஒரு நினைப்பு… எப்போதுமே தன்னிடம் ஒன்று இல்லாத போது தான் அதன் மீது இன்னுமே ஈர்ப்பு அதிகரிக்கும்… அது போல தானோ… ஆண்மை உணர்வோடு இருக்கும் நர்மதாவை மட்டுமே பார்த்து பழகி பேசி… இணைந்த துகிலனுக்கு அதற்க்கு எதிர் பதமாக சில்க்கியாக இருக்கும் மஞ்சுளாவை தனக்கு மிகவும் பிடித்து விட்டதா..? என்ற நினைப்பு துகிலனுக்குள் ஓடும் போதே.
அப்போ அப்போ நான் வெறும் உடல் சுகத்துக்காக தான் மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டேனா… மனைவியின் முகத்தையே பார்த்து கொண்டு இதை எல்லாம் யோசித்து கொண்டு இருந்த துகிலனின் மனதானது இதை நினைத்த நொடி.. அவனின் உடல் நாண் போல சட்டென்று அவன் உடல் விரைத்து கொண்டது.
இல்ல இல்ல அப்படி இல்ல. உடலுக்காக என்றால் தன் ஓட்டல் விளம்பர படத்திற்க்கு நடிக்க வந்த பெண்களையே தான் நாடி இருந்து இருக்கலாமே… அதுவும் பட்ட வர்த்தனமாக…
“உங்க ஓட்டல் ஆட் எல்லாத்துக்குமே நானே வரனும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்…? நீங்க என்ன செய்ய சொன்னாலுமே நான் செய்ய தயார்…” என்று அனைத்து பெண்களுமே இல்லை என்றாலுமே ஒரு சில பெண்கள் சொன்னதை நான் எனக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டு இருந்து இருக்கலாமே..
அதுவும் அப்போது எல்லாம் அவனுக்கு ஒரு பெண்ணின் துணை தேவையாக இருந்தது.. படிக்கும் காலத்தில் பசலை நோயால் பெண்களின் வளையல் கழண்டு விழும் அளவுக்கு உடல் இளைத்து போய் விட்டார்கள் என்று படிக்கும் போது… இது எல்லாம் சும்மா… இது எல்லாம் கற்பனை தான். கற்பனை என்பது அனைத்தையுமே அதிகப்படுத்தி காட்டுவது தானே என்று எல்லாம் அவன் ஒரு காலத்தில் நினைத்தது உண்டு…
அது எல்லாம் அதை அவனே அனுபவிக்கும் காலம் தொட்டு தான். ஆம் திருமணம் நடவாது இருந்து இருந்தால் கூட பரவாயில்லை..
ஆனால் நடந்து முடிந்து ஒரு குழந்தைக்கும் தந்தை ஆன பின்னும் கூட. அதில் முழு திருப்தி அடையாது இருப்பது என்பது கொலை பசியில் இருப்பவனுக்கு ஒரு சிறு துண்டு ரொட்டி கொடுத்தால் அது இன்னுமே பசியின் வேகத்தை கூட்டி விடுமாம்.. அது போலான நிலையில் தான் துகிலன் அப்போது இருந்தான்…
இவன் பெண் இல்லை என்பதினால் வளையல் கழலாது கோபம் அதிகரித்தது.. தூக்கம் கெட்டது… சின்ன தவறுக்கு கூட அப்படி கத்தி விடுவான்.. அத்தனை மன அழுத்தத்தில் இருந்த சமயம் அது…
சோஷியல் ட்ரிங்கஸ்… போய் அது இல்லாது இருக்க முடியாது என்ற நிலைக்கு கூட இருந்த நாட்களும் அது…. சைக்கரிஸ்ட்டை கூட பார்த்து விட்டான்…
ஏன் ஒரு முறை தனக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறேன் என்று சொன்னவளை கூட ஓட்டலில் தன் அறைக்கும் அழைத்து விட்டான்.
ஆனால் அந்த நிலையில் இருந்த போது கூட அவனால் அந்த பெண்ணை தவறாக தொட முடியவில்லை….
நர்மதாவுக்கும் துகிலன் நிலை தெரிந்து விட்டது.. அவன் அறைக்கு ஒரு பெண் சென்று சென்ற வேகத்தோடு மீண்டும் திரும்பி வந்ததும்..
“ என்ன துகி..” என்று கேட்ட போது தான்.. அனைத்தும் சொன்னது…
“நீ முறை தவறி…. காதல் இல்லாது காமம் மட்டுமே இருந்து எல்லாம் உன்னால ஒரு பெண்ணை தொட முடியாது துகி.” என்று நர்மதா சொன்ன போது.
“உன்னை…” என்று துகிலன் சொல்ல. அதற்க்கு நர்மதா சொன்னது…
“சின்ன வயசுல இருந்து தான் நாம பழகிட்டு இருந்தோம்… துகி… அப்போ எல்லாம் என்னை நீ தப்பாவாது பார்த்து இருக்கியா.? இல்லை தானே…. கல்யாணம் ஆன பின் தானே… நீ உனக்கு உண்டானது சரியா செய்வ துகி… அது தான் கணவனின் கடமையும் இது தானே… ஆனா நான் தான் உனக்கு மனைவியா இருக்கல…
என் கடமையை என்னால் செய்ய முடியல…………. கண்டிப்பா என் நிலை அப்போ நான் உணரலே துகி..
அப்படி நான் உணர்ந்து இருந்தால் , கண்டிப்பா உன்னை இல்ல யாரையுமே நான் மேரஜ் செய்து அவங்க வாழ்க்கையை நான் வீண் அடித்து இருக்க மாட்டேன்…
உன் நிலைக்கு நான் தான் காரணம் துகி நாம உடனே டைவஸ் செய்துக்குவோம்.. வேண்டாம்.. இது போல இருந்தா.. உன் மனநிலை மட்டும் இல்ல.. உன் பெயர் கூட பாதிக்கப்படும் துகி…” என்று அனைத்தும் பேசி தான் விவாகரத்து செய்து.. மஞ்சுளாவை தேர்ந்தெடுத்து அவன் குடும்பம் நடத்தியது…
மஞ்சுளாவை நான் வெறும் செக்ஸ் அதுக்காக மட்டும் எல்லாம் மேரஜ் செய்துக்கல. என் லைப் அவள்… எனக்கு அது தோனுச்சி அது தான். நான் அவளை மேரஜ் செய்தேன்.. ஆனா இந்த மிடில் க்ளாஸ் பிப்பிள் பேசுறது உண்மையில் நான் புரிஞ்சிக்கல. இல்லேன்னா நான் மஞ்சுவை இப்படி எல்லாம் பேச்சு வாங்க வைத்து இருந்து இருக்க மாட்டேன்….” என்று துகிலன் தனக்குள்ளாகவே அனைத்தையும் சரி பார்த்து கொண்டவன் அடுத்து மனைவிக்கு கொடுக்கு வேண்டிய அங்கிகாரத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவனாக.. மஞ்சுளாவின் வயிற்றின் மீது கை வைத்த துகிலனுக்கு அத்தனை மகிழ்ச்சி… அத்தனை ஒரு நிம்மதி…
“வயிறே இல்லையே… இத்தனை சின்ன வயித்துல.. எப்படி ஒரு குழந்தை வளர முடியும்…” அதிசயத்து தான் போனான்.. அதை நினைத்து…
ஒரு சில கடவுள் படைப்புகள்… நம் அறிவியலுக்கும் அப்பார்ப்பட்டது தானே…
இத்தனை நேரம் கார் நின்றது கூட தெரியாது அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தவளை அவளின் வீடும் வரை தூக்கம் கெடாது மஞ்சுளாவின் தாய் வீட்டில் விட்டவன்…
மஞ்சுளாவின் பெற்றோர்களிடம்… “ கண்டிப்பா நான் என் மனைவிக்கும் குழந்தைக்கும் உரிய அங்கிகாரத்தை கொடுப்பேன்.” என்று சொன்னவன்..
அதை செய்து முடிக்க தன் வீட்டிற்க்கு சென்ற போது அங்கு ஒரு பூகம்பமே வெடித்து கொண்டு இருந்தது.. நர்மதா உண்மையை சொன்னதினால்…
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
130
வசந்தி நிலை பாவம் தான் 🥺🥺🥺🥺 எந்த அம்மாவாலும் இதை தாங்க முடியாது தான் 😕😕😕😕

வைஷு கூட புரிஞ்சு நடந்துக்கிறா 🙃🙃🙃

இனி இந்த பிரச்சினை முடிஞ்சா தான் ரிஷப்ஷன் பத்தி யோசிப்பாங்களா 🤔🤔🤔🤔🤔🤔

மஞ்சு கர்ப்பத்தை பத்தி சொல்லணும் 😑😑😑 தங்கச்சி புருஷன் பத்தி சொல்லணும் 😑 😑 😑 துகி நிலை பாவம் தான் 😏😏😏
 
Last edited:
Well-known member
Joined
May 12, 2024
Messages
286
Mara mandai kku ippo than puriyutha…. Adhenna cheap middle class mentality..??? 😒😒😒
Unga Elite menta than eppadi irukkum nu engalukku theriyume
 
Top