Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yannai kondaada pirandhavan...16.1

  • Thread Author
அத்தியாயம்…16…1

விசுவநாதனுமே குருவிடம் மனதில் பட்டத்தை பட்டென்று பேசி விடுபவன்.. இன்று அப்படி பேச முடியாது…

“இன்னைக்கு அந்த இன்ஸ் உன்னை வந்து பார்த்தான் போல…?” என்று கேட்டவரின் கேள்வியில் தன் முன் இருந்த கணினியில் பார்வை பதித்து இருந்த குரு நிமிர்ந்து தன் மாமனை பார்த்தான்..

பார்த்தவன் பார்வையில் என்ன இருந்தது…? அவனை வளர்த்த விசுவநாதனுக்கே… குருவின் இந்த பார்வையிக்கு அர்த்தம் தெரியவில்லை..

ஆனால் என்னவோ இருந்தது.. தன்னை எப்போதும் பார்க்கும் சாதாரண பார்வை கிடையாது அது..

அதனால் .. “என்ன குரு…” என்று கேட்டவரிடம் ஒன்றும் இல்லை என்று தலையாட்டி மறுத்தவனிடம் அடுத்து என்ன கேட்பது… என்று விசுவநாதனுக்கு புரியவில்லை..

தன் மாப்பிள்ளையிடம் இது போல பேசவே சங்கடப்பட்டு இருப்போம் என்று அவர் நினைத்தும் பார்க்கவில்லை..

இருந்தும் சங்கடமாக இருந்தாலுமே கேட்டு விட்டார்..

“அந்த இன்ஸ் நம்ம ஸ்ருதி விசயமா தான் விசாரித்தானா…?” என்று கேட்க..

குரு மூர்த்தி… “என்னை இன்ஸ் பார்க்க வந்ததா சொன்னவன்.. அந்த இன்ஸ் என் கிட்ட என்ன பேசினார் என்று சொல்லவில்லையா…? மாமா…” என்று குரு மூர்த்தி கேட்ட பின் தான் விசுவநாதனுக்கு மாப்பிள்ளை தன்னை பார்த்த பார்வைக்கு உண்டான அதன் அர்த்தம் புரிந்தது.

அதில் பதறி போனவராக.. அய்யோ மாப்பிள்ளை உன்னை நான் வேவு பார்ப்பேனா…?” என்று கேட்டவரிடம் குரு மூர்த்தி…

“அப்போ இதுக்கு என்ன அர்த்தம் மாமா…? என் கிட்ட வேலை பார்க்குற பாதி பேரை நீங்க தான் செலக்ட் செய்திங்க….ஆனா என் கிட்ட வேலை பார்க்குறவங்க.. என் கிட்ட சம்பளம் வாங்குறவங்க எனக்கு தான் விசுவசமா இருக்கனுமே தவிர. விசுவநாதனுக்கு விசுவசாமா இருக்க கூடாது..”

குரு மூர்த்தியின் இந்த பேச்சும்.. குரலுமே விசுவநாதனுக்கு… ஒரு மாதிரியாக போனது.. ஒரு மாதிரி என்றால் மாப்பிள்ளை தன்னை தள்ளி வைத்து பேசுவது போலான இந்த பேச்சு விசுவநாதனுக்கு சத்தியமாக பிடிக்கவில்லை..

அதனால்… “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல குரு.. நீயா ஏதாவது நினச்சி பேசிட்டு இருக்காதே…” என்று சொன்னவர் பின்..

“வீட்டில் உன் அத்தை புலம்பிட்டே இருக்கா குரு.. அதோட எனக்குமே ஸ்ருதி வாழ்க்கை நினச்சி கவலையா இருக்கு… இதில் அந்த பொண்ணு வேறு…? அந்த பொண்ணுக்கு எதற்க்கு இந்த வேண்டாத வேலை…. ?” என்று ஒரு மாதிரி எரிச்சலான குரலில் தான் பேசினார்.

ஆனால் எதற்க்கும் குரு வாய் திறக்கவில்லை. ஆனால் தன் மாமனையே பார்த்து கொண்டு இருக்க.

பின் விசுவநாதனே மீண்டும்.. “ அந்த இன்ஸ் என்ன சொன்னாரு குரு..?” என்ற கேள்விக்கு.

“அன்னைக்கு ஸ்ருதி ஆக்ஸிடெண்ட் பண்ண போது நான் தானே எல்லாம் மாத்தி செய்தது.. இப்போ உங்க அப்பாவே வந்து இறந்தவரோட பெண்ணுக்கு ஆதரவா இருக்காரு நான் என்ன செய்யிறது என்று கேட்டான்..

பின் அவனே.. “என்னை ரொம்ப குடஞ்சா நான் உங்களை காட்டி கொடுக்கும் படியா ஆகிடும் சார் என்று சொன்னான்…” என்று குரு மூர்த்தி அந்த இன்ஸ்பெக்ட்டர் தன்னிடம் பேசியதை சொல்லி கொண்டே வந்த போது..

“என்ன உன்னை காட்டி கொடுத்து விடுவானா..? அவனுக்கு அவ்வளவு தைரியம் வந்துடுச்சா.? காட்டி கொடுத்து தான் பார்க்கட்டுமே..” என்று வீர வேசமாக பேசி கொண்டு போனவரிடம் குரு மூர்த்தி..

“அது தான் மாமா நான் சொன்னேன்… என் பக்கம் கை காட்டு என்று…”

குரு மூர்த்தியின் இந்த பேச்சில் இத்தனை நேரம் வீரவேசமாக பேசிக் கொண்டு இருந்த விசுவநாதனோ… அதிர்ச்சியாகி தன் மாப்பிள்ளையை பார்த்து கொண்டு இருந்தவரின் கை பேசிக்கு அழைப்பு வர..

அதை எடுத்து பேசும் நிலையில் கூட விசுவநாதம் இல்லை. குரு என்ன அர்த்தத்தில் தன் பக்கம் கை காட்டு என்று சொல்கிறான் என்று புரியாது பார்த்து கொண்டு இருக்க. குரு மூர்த்தியோ. தன் மாமனையும், அவர் முன் அடித்து கொண்டு இருந்த அவரின் கை பேசியையுமே மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான்.. ஒரு வாறு அடித்து ஒய்ந்த பின்…

இப்போது குரு மூர்த்தியின் பேசிக்கு அழைப்பு வந்தது அழைத்தது யார் என்று பார்த்தன்.. தன் மாமனை பார்த்து கொண்டே..

“ம் சொல்லுங்க அத்த..” என்று இவன் பேச்சை ஆரம்பிக்கும் போதே. அழைத்த அவனின் தாமரை அத்தை என்ன சொன்னார்களோ.. குரு மூர்த்தி யோசனையுடன்..

“எப்போ எங்கே..? என்பது போலான கேள்விகள் கேட்டு கொண்டே இருக்கையை விட்டு எழுந்து கொண்டவன். தன் மாமனையும் எழும் மாறு சொல்லி கொண்டே. தன் கார் சாவீயையும் எடுத்து கொண்டான்..

குரு மூர்த்தி கடைசியாக பேசியில் கேட்ட… “ அதே ஆஸ்பிட்டலா…?ம் மாமாவும் இங்கு தான் இருக்கார்…” என்ற வார்த்தையில் விசுவநாதனுமே பதட்டமாகி விட்டார்…

அதே பதட்டத்தோடு “யாருக்கு என்ன ஆச்சு…?” என்று கேட்டார்..

குரு மூர்த்தி.. “ திரும்ப ஸ்ருதி சூசைட் அட்டம் பண்ணி இருக்கா..” என்று சொன்னவன் தன் மாமனை அழைத்து கொண்டு தன் காரில் மருத்துவமனைக்கு சென்றான்..

அன்றும் போல இன்றும் காரை குரு மூர்த்தி விரைவாக தான் செலுத்தினான்.. ஆனால் அன்று போல முகத்தில் பதட்டம் இல்லாது ஒரு யோசனையுடன் தான் காரை செலுத்தியது..

அந்த சூழ்நிலையிலும் விசுவநாதன் தன் மாப்பிள்ளையின் மாற்றத்தை கவனித்தார்… தன் மாமா தன்னையே பார்ப்பதை பார்த்த குரு மூர்த்தி காரை நிறுத்தி விட..

கார் நின்றதும் தான் தன் நிலை விட்டு வெளியில் வந்தவர்…

“என்ன மாப்பிள்ளை என்ன ஆச்சு..? ஏன் காரை நிறுத்திட்டிங்க…?” என்று இப்போது மகளுக்கு என்னவோ என்ற பதட்டத்தின் கேட்டார்…

மாமனுக்கு பதில் சொல்லாது, குரு மூர்த்தி காரை விட்டு கீழே இறங்கினான்… மருமகனை தொடர்ந்து மாமனுன் இறங்கிய பின் தான் விசுவநாதன் கவனித்தார்… மருத்துவமனையில் தான் குரு மூர்த்தி காரை நிறுத்தி இருப்பதை..

ஸ்ருதி எங்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறாள் என்று கேட்டு விசாரித்து ஸ்ருதி அனுமதிக்கப்பட்டு இருந்த தளத்திற்க்கு வந்த போது..

அன்றும் போல இன்றும் ஸ்ருதியை ஐ.சி..யூல் தான் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாள் போல.. ஏன் என்றால் ஐ.சி.யூ வார்ட்டிற்க்கு முன்பாக தான் தாமரையும் கிருஷ்ண மூர்த்தியும் நின்று கொண்டு இருந்தனர்..

தாமரை தான் விசுவநாதனை பார்த்ததும்… “என்னங்க…” என்று அழைத்து ஓடி வந்து கணவனின் கையை பிடித்து கொண்ட தாமரை..

“நான் தான் புலம்பிட்டே இருந்தேனுங்க.லே பார்த்திங்கலா. இப்போ பார்த்திங்க தானே. அவள் சரியில்லை.. சரியில்லை என்று.. பார்த்திங்கலே… பார்த்திங்கலே…” என்று அழுதவர்..

“எனக்கு தெரியாதுங்க. எனக்கு தெரியாது.. அந்த பையன் நம்ம மகள் கூட வாழ்ந்து தான் ஆகனும்.. நீங்க அதுக்கு என்ன செய்வீங்கலோ… ஏது செய்வீங்கலோ என்று எனக்கு தெரியாது… “ என்று முதலில் அழுகையில் பேச ஆரம்பித்த தாமரை முடிவில் தன் பேச்சை கோபத்தில் முடித்து வைத்தார்..

விசுவநாதன் பற்றிய மனைவியின் கை பிடித்து அங்கு இருந்த இருக்கையில் அமர வைத்தவர்…

“நீ முதல்ல அமைதியா உட்காரு.. “ என்ற கணவனின் பேச்சை தாமரை கேட்கும் நிலையில் இல்லை..

“அமைதியாவா… இத்தனை நாளா அமைதியா தானே இருந்தேன்..என் பொண்ணுமே அமைதியா தானே இருந்தா. இப்படியே அமைதியா இருந்தா அந்த பொண்ணு நம்ம மகள் தாலியை வாங்கி கொள்வாள் போலவே…” என்ற இந்த பேச்சியில் இது என்ன புதியதான பேச்சு என்பது போல மனைவியை பார்க்க.

அந்த சமயம் தான் ஸ்ருதிக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் வந்தார்.. வந்தவர் அனைவரையும் பொதுவாக பார்த்து..

முதலில். “இப்போ பரவாயில்லை…” என்று சொல்லி விட்டு பின்…

“என்ன இது.. திரும்ப திரும்ப இது போல சூசைட்க்கு ட்ரைப் பண்ணுவது… நீங்க என்பதினால் தான் நான் ட்ரீட்மெண்ட் பார்க்கிறேன்… இனி ஒரு முறை இது போல் வந்தால், நான் கண்டிப்பா போலீசுக்கு இன்பாம் பண்ணிடுவேன். ஆனா இனி இது போல கை அறுத்திக்கிட்டா இங்கு கூட்டிட்டு வரும் அளவுக்கு அவங்க இருக்க மாட்டாங்க...” என்று சொல்லி விட்டு செல்ல.

தாமரை மீண்டுமே… “பார்த்திங்க தானே டாக்டர்.. என்ன சொல்லிட்டு போறார் என்று.. திரும்ப ஒரு முறை என்றால்,ஏன்று சொல்லி கொண்டு வந்த தாமரையினால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை..

கணவனின் கை பிடித்து கொண்டு… “ எப்படியாவது அந்த பையனோடு நம்ம மகளை வாழ வெச்சிடுங்க. அந்த பையன் மீது இவள் பைத்தியமா இருக்கா..” என்று தாமரை தான் பைத்தியம் போல இதுவே திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருந்தார்…

விசுவநாதனுமே…. “ கண்டிப்பா தாமரை. இனி நான் அமைதியா இருக்க மாட்டேன்…” என்று தன் மனைவிக்கு தைரியம் அளித்து கொண்டு இருக்க.. அவர் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த குரு மூர்த்தி ஒன்றும் சொல்லாது அமைதியாக நின்று கொண்டு மட்டும் இருக்க..

தாமரை தன் கணவனுக்கு அடுத்த படியாக தன் அண்ணன் மகன் குரு மூர்த்தியை தான் அதிகப்படியாக நம்பினாள்… முன்னும் அப்படி தான்..

இப்போது இன்னுமே அதிகப்படியாக தன் அண்ணன் மகனை நம்பினாள்.. காரணம் அந்த பெண் மகிக்கு ஆதரவாக தன் அண்ணன் கூட துணை இருக்க.. தன் அண்ணனிடம்..

“என்ன அண்ணா. இது போல செய்யிறிங்க..?” என்று அவளாள் உரிமையாக கேட்க முடியாது.. காரணம் தன் அண்ணனுக்கு செய்து வைத்த காரியம் அத்தகையது.. தன் அண்ணன் மகன் தனக்கு துணை நின்றால், கண்டிப்பாக ஒரு வயதிற்க்கு மேல்.. அது என்ன தான் உயர் பதவியில் இருந்த போதுமே தன் மகனின் துனை கொண்டு தானே அவரின் கடைசி காலத்தை கடத்த முடியும்.

குரு. தன் தந்தையை அடக்கி வைத்து விடுவான் என்று நினைத்தும் தான் தன் அண்ணன் மகன் அருகில் இருக்கும் போது தன் கணவனிடம் இப்படி சொன்னது.. சொன்ன விசயம் உண்மையே.. ஆனால் தனித்து இருக்கும் போது தன் கணவனிடம் சொல்லாது குரு இருக்கும் போது சொல்ல காரணம்.

அவன். “ நான் பார்த்து கொள்கிறேன் அத்த.” என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்.. இத்தனை நாள் குரு அது தான் சொல்லி கொண்டு இருந்தான்.

ஆனால் இன்று அவன் வாயில் இருந்து அந்த ஒத்த வார்த்தை வராது போக. தாமரை தன் அண்ணன் மகனையே பார்த்து கொண்டு இருக்க.. அவன் அண்ணன் மகனின் பேச்சை எதிர் பார்த்த தாமரைக்கு அவள் அண்ணனே..

“ எப்போவுமே நீ நினைத்ததே நடக்கும் என்று எதிர் பார்க்க கூடாது தாமரை… இனியுமே உங்கள் எண்ணப்படி தான் எல்லாம் நடக்கும் என்று நினைக்காதே… காதல். அந்த காதலுக்காக தானே.. ரத்தப்பந்தத்திற்க்கு கூட துரோகம் செய்ய வைத்து தன் காதலை அடைய என்ன எல்லாம் செய்ய வைத்தது.”

கிருஷ்ண மூர்த்தி சாரதாவின் காதலை தாமரை தானே வீட்டில் போட்டு கொடுத்தது..அதற்க்கு காரணம் தாமரை விசுவநாதனின் மீது வைத்து இருந்த அந்த காதலால் தானே காரணம்…

அதை எடுத்து சொன்னவர்… “ இப்போதுமே அதே காதல் தான் அனைத்துமே செய்ய போகிறது தாமரை.. என்ன ஒன்னு… இப்போ அந்த செயல்கள் எல்லாம் உனக்கு எதிரா செய்ய போவது தான் நாம் போட்டது தான் முளைக்கும். அது தான் உனக்கும் நடக்கும் .” என்று கிருஷ்ண மூர்த்தி சொல்லி விட்டு சென்றது விசுவநாதன் தாமரைக்கு புரியாது போனாலுமே குரு மூர்த்திக்கு புரிந்தது.. தான் சொன்ன அந்த ஈஸ்வரி என்ற பெயர் அழைப்பை கொண்டே.. தன் தந்தை தன் மனதை புரிந்து கொண்டு விட்டார் என்பது….
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Intha marukka drama va start pannitta… 😡😡😡
Siddharth Shruthi kooda serave koodathu…
Thamarai 🙄🙄🙄
Vishwanathan Magi ya kadathiruwana…

Guru ku Krishna hint koduthuttar… ippo avan thalai kattiduwana?
 
New member
Joined
Dec 18, 2024
Messages
2
Intha marukka drama va start pannitta… 😡😡😡
Siddharth Shruthi kooda serave koodathu…
Thamarai 🙄🙄🙄
Vishwanathan Magi ya kadathiruwana…

Guru ku Krishna hint koduthuttar… ippo avan thalai kattiduwana?
Enakkum siddarth shruthioda serurathu konjam kooda not convincing at all
How can siddarth able live with Shruthi, knowing that his mother’s losses
 
Top