Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yannai kondadaa pirandhavan...24.1

  • Thread Author
அத்தியாயம்….24…1

குரு மூர்த்தியை அழைத்து கொண்டு சென்ற அந்த காவல் அதிகாரி மீடியாவிடம்… “என்னப்பா எல்லாம் உங்க கண்ணால பார்த்தாச்சா… இது போல தான் படிக்கிறேன் என்று பேர் செய்து கொண்டு இது போல வேலையை பார்க்குதுங்க….” என்று பேசியவரிடம்..

“ஆமாம் ஆமாம்..” என்று அந்த மீடியாவும் பெண் வேடத்தில் இருந்த குரு மூர்த்தியை வலைத்து வலைத்து புகைப்படம் எடுத்து தள்ளியது..

அதை சுட சுட நியூசாக… “கல்லூரிக்கு போகும் பெண்கள் கட்டிலுக்கு போனால், என்று வாய்க்கு வந்ததை பரப்பி. டி ஆர் .பி ஏற்றி என்று அது ஒரு பக்கம் சென்றது என்றால், குரு மூர்த்தியை வாகனத்தில் அழைத்து கொண்டு வந்த காவலர் குரு மூர்த்தியின் புஜத்தை பிடித்து…

“ஆமா நீ தினம் தினம் உடற்பயிற்ச்சி செய்வீயா. இல்ல தினம் தினம் இது போல இடத்திற்கு வந்து பயிற்ச்சி செய்தே உடம்பு இப்படி வளர்ந்துடுச்சா…? “

பெண் வேடத்தில் இருந்த குரு மூர்த்தியை பார்த்து நக்கலாக கேட்டவனின் பார்வையும் எங்கு எங்கோ வலம் வந்தது..

அப்போது ராணி.. “ சார்…” என்று ஏதோ சொல்ல வர.

“நீ என்ன சும்மா சும்மா இப்படி செய்துட்டு இருக்க…? நீ பண்ண வேலைக்கு நான் மாட்டிட்டு இருந்து இருப்பேன்… நீ ஏன் அப்படி நடந்துக்குன என்று எனக்கு தெரியாது.. ஆனா இப்போ நீ சும்மா வாயை மூடிட்டு சும்மா இரு…” என்று ராணியை அடக்கியவர் மீண்டும் பெண் வேடத்தில் இருந்த குரு மூர்த்தியிடம்..

“தோ பாரும்மா நீ ரொம்ப நல்ல பெண் தான்.. அது எனக்கு தெரியும்.. ஆனா பாரு.. நீ என்ன தான் காட்டு கத்தலா கத்தினாலுமே யாரும் நம்ப போறது கிடையாது.. இனி உன் வீட்டவர்களே நம்புவாங்கலா என்பது சந்தேகம் தான்…

அதனால இனி உன்னை வீட்டில் சேர்த்து கொள்வது கூட சந்தேகம் தான்..அதனால நீ பர்மெண்ட்டா என் கூடவே இருந்து விடேன்.. எனக்கு சொந்தமா நிறைய வீடுகள் இருக்கு.. அதில் ஒரு வீட்டில் உன்னை வைத்து விடுகிறேன்..”

ராணி மகியை பார்த்து சொன்னதையே அந்த காவல் அதிகாரி வேறு மாதிரியாக சொன்னார்..

பெண் வேடத்தில் இருக்கும் குரு மூர்த்தி அனைத்தும் கேட்டு பொறுமையாக இருந்தானே தவிர வாய் திறக்க வில்லை.. அவன் பேசினால் தான் அனைத்தும் தெரியவில்லை என்றாலும், அவன் ஆண் என்பது தெரிந்து விடும் என்பதினால் அமைதி காத்தான்..

ஆனால் ராணிக்கு முதலில் இந்த பெண் யார் என்று குழன்பினாலும், பெண் வேடத்தில் இருந்த குரு மூர்த்தியின் கையில் பச்சை குத்தி இருந்த அந்த ஈஸ்வரி என்ற பெயரை பார்த்து ராணிக்கு தெரிந்து விட்டது.. அவள் கிடையாது அவன் என்று.. ஏன் என்றால் தன் கை துப்பாக்கியை ராணியின் முன் நீட்டும் போது குரு மூர்த்தியின் கையில் ராணி ஈஸ்வரி என்ற பெயரை பச்சை குத்தி இருந்ததை பார்த்து இருந்தாள்..

அதனால் தான் ராணி காவல் துறையை எச்சரிக்கை செய்ய முனைந்தது.. ஆனால் ராணியை வாய் மூடு என்றதில், உனக்கு எல்லாம் பட்டால் தான் புத்தி வரும் போல என்று நினைத்து அமைதியாகி போனாள்.. அதோடு அவளுக்கு எல்லாம் இது ஒரு பெரிய விசயமே கிடையாது…

நல்ல பெயர்.. நல்ல குடும்பம் இருப்பவர்களுக்கு தான் எல்லாவற்றையும் பார்த்து பயப்பட வேண்டும்… இது இல்லாதவர்கள் எதை பற்றியும் கவலைப்பட தேவை கிடையாது…

தன்னிடம் இருக்கும் பெண்களை பறித்து கொண்டால் கூட.. இந்த இடத்தை விட்டு தன்னை துறத்தி விட்டால் கூட வேறு ஒரு இடத்தில் வேறு பெண்களை வைத்து இதே தொழிலை அவளால் அமர்க்கலமாக செய்ய முடியும்..

முன்பும் வேறு ஒரு இடத்தில் இருந்து இங்கு வந்தவள் தான் ராணி… சபல புத்தி உள்ள ஆண்கள் உள்ள வரை… போலியை நம்பி ஏமாந்து வீட்டை விட்டு வரும் பெண்கள் இருக்கும் வரை ராணிக்கு கவலை கிடையாது..

அதனால் பெண் வேடத்தில் இருப்பது குரு மூர்த்தி தான் என்று தெரிந்த பின் ராணி ஒரு முறை தான் காவலனை எச்சரிக்கை செய்ய முயன்றது பின்.. அமைதியாக இருக்க.

நம் காவலனோ.. இங்கு இருந்து போலீஸ் ஸ்டேஷன் போவதற்க்குள் இந்த நாட்டுக்கட்டையை நாம் உஷார் செய்து விடும் முனைப்போடு பேசிக் கொண்டே இருந்தார்..

அதாவது அவருக்கு தெரியும் வி.ஐ.பிக்கள் கொண்டு அவர் வாங்கிய லஞ்சப்பணத்தை எங்கு எங்கு சொத்தாக… யார் பினாமி பெயரில் வாங்கி இருக்கேன்.. என்று அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களோடு சொல்லி கொண்டு வர… குரு மூர்த்தி அந்த காவல் அதிகாரி பேசுவதை அனைத்தையும் தன் கை பேசியில் பதிவும் செய்து கொண்டும் இருந்தான்.. கூடவே வீடியோவும் எடுத்து கொண்டு இருந்தான்.. தானும் அதில் தெரியாத வாறு பார்த்து கொண்டான்…

குரு மூர்த்திக்கு அந்த காவல் அதிகாரியை சும்மா விடும் எண்ணம் கிடையாது.. நல்ல வேளை ஈஸ்வரியை நான் தப்பிக்க வைத்து விட்டேன்… அனைத்தும் சரியாக நடந்து முடிந்ததால் இப்போது இந்த சமயம் ஈஸ்வரி வசந்த் வீட்டில் இருக்கிறாள்…

வசந்த் மட்டும் தன் ஈஸ்வரியை அங்கு பார்க்காது இருந்து இருந்தாள்.. . தன்னால் இந்த இடத்தில் தான் வைத்து உள்ளார்கள் என்று கண்டு பிடிப்பதற்க்குள் ஈஸ்வரியை இவர்கள் கண்டிப்பாக அசிங்கப்படுத்தி இருந்து இருப்பார்கள்.. அது தான் ஈஸ்வரியை அந்த வீட்டிற்க்கு வந்ததுமே காவல் வாகனமும் அந்த வீட்டின் முன் வந்து நின்று விட்டதே…

தங்கள் திட்டத்தில் ஒரு இம்மி அளவு தப்பி இருந்து இருந்தால் கூட இந்த இடத்தில் இந்த நேரம் ஈஸ்வரி தானே இருந்து இருக்க கூடும்.. அந்த மீடியா எத்தனை எத்தனை புகைப்படம்.. அது அத்தனையும் நாளை என்ன என்ன எல்லாம் செய்து விடுவார்கள் என்று குரு மூர்த்திக்கு தெரியுமே… தாங்கள் நினைத்தது நடவாது போய் இருந்தால் இது எல்லாம் ஈஸ்வரிக்கு நடந்து இருக்கும்.. அதை தன் ஈஸ்வரி தாங்கி இருந்து இருப்பாளா..?.

இதோ என்னையே இப்படி பேசுகிறவன். தொட்டு பார்க்க நினைக்கிறவன்.. ஈஸ்வரியிடம் என்ன என்ன பேசியிருப்பான்.. இருக்கு டா உனக்கு . கண்டிப்பா உன்னை நான் சும்மா விட மாட்டேன்…

ஏதோ ஒரு முடிவு எடுத்தவனாக தான் அந்த காவல் துறை அதிகாரியை ஏச விட்டு அதை அமைதியாக கேட்டு கொண்டு இருந்தான்..

பேசிக் கொண்டு இருந்த அந்த காவல் துறை அதிகாரி என்ன நினைத்தானோ..

“ஆமா நீ என்ன அப்போவில் இருந்து வாயை திறக்க மாட்டேங்குற…?” என்று கேட்டவனை பார்த்து குரு மூர்த்தி ஒரு மாதிரியாக சிரித்தான்.

அந்த சிரிப்பு ஏனோ அந்த காவல் அதிகாரிக்கு பிடிக்கவில்லை.. இந்த நேரத்தில் இந்த பெண் பதறி தானே இருக்க வேண்டும்… அதே போல் அழுது கொண்டு என் காலில் தானே இந்த பெண் விழுந்து கதறி இருந்து இருக்க வேண்டும்… இந்த பெண் தப்பான பெண் இல்லை என்பது தான் அந்த காவல் அதிகாரிக்கு தெரியுமே…

அப்படி இருக்க. இன்னுமே தானே இந்த சூழல் அடுத்து தன் நிலை என்ன என்று பயந்து இருக்காது.. ஏதோ நான் இவளை டூர் கூட்டிட்டு போவது போல வெளியில் வேடிக்கை பார்த்துட்டு வராள்… அப்போது தான் அந்த காவல் அதிகாரியின் மூளைக்கு ஒன்று தோன்றியது.. இந்த பெண் இது வரை ஒரு இடத்தில் கூட அழவே இல்லை என்பதும்..



அந்த காவல் அதிகாரி நினைத்தது போல குரு மூர்த்தியின் பார்வை அவ்வப்போது வெளியில் பார்த்து கொண்டு தான் வந்தது… அதற்க்கு காரணம் அவனின் தந்தை மற்றோரு காரில் இவர்கள் வந்து கொண்டு இருக்கும் காவல் வாகனத்தை பின் தொடர்ந்து வருவதால், மீண்டுமே தன்னை அவமானம் படுத்துவது போல தன் தந்தையின் காரையும், காவல் அதிகாரியையும் பார்த்த பெண் வேடத்தில் இருக்கும் குரு மூர்த்தியை பார்த்த அந்த காவலன்…

“திமிராவா இருக்க. இரு டி உன்னை வைத்து செய்ய போறேன்..” என்று சொன்ன அந்த காவல் அதிகாரியிடம் குரு மூர்த்தி..

“என்னை நீ என்ன டா வைத்து செய்யிறது…? உன்னை நாளைக்கு ஊரே வைத்து செய்ய போகுது பாரு.” என்று குரு மூர்த்தி சொல்லி முடிக்கவும்… காவல் நிலையம் வரவும்… இவர்களின் காவல் வாகனத்திற்க்கு முன் வழி மரித்து நின்றது போல கிருஷ்ண மூர்த்தியின் காரும் வந்து நிற்கவும் சரியாக இருக்க…

காவல் வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய குரு மூர்த்தி தன் தந்தை வாகனத்தில் ஏறி கொண்டவன். அந்த காவல் அதிகாரிக்கு ஒரு பறக்கும் முத்தத்தையும் பறக்க விட்ட பின் தான் அந்த வாகனம் அங்கு இருந்து சென்றது.

இத்தனையும் ஒரு நொடியும் அந்த காவல் அதிகாரின் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது… காவல் அதிகாரி குரு மூர்த்தியின் குரலை கேட்டதுமே.. என்ன இது ஆண் குரல்… என்று அதிர்ந்து அவனை பார்க்கும் போது தான் குரு மூர்த்தி காவல் வாகனத்தில் இருந்து கீழே இறங்கியது அந்த காரில் ஏறி சென்று விட்டது…

குரு மூர்த்தி காரில் இருந்து இறங்கிய வேகமும்.. இறங்கிய விதமும் பார்த்தவருக்கு அப்போது தான் சந்தேகமே வந்தது.. பெண் இல்லையா ஆணா… என்று.. அது உறுதியானது அந்த கார் வரை குரு மூர்த்தி நடந்து சென்ற விதமும். வேகமும் அந்த காரின் கதனை அரைந்து சாத்திய விதமும்…

அந்த கார் விலை உயர்ந்த. கார் என்பது மட்டுமே காவல் அதிகாரி கவனித்தது.. அதன் எண்… அது என்ன வகையான கார் என்பதை கூட அந்த காவல் அதிகாரி கவனிக்கவில்லை.

அந்த காவல் அதிகாரிக்கு தன்னை ஏமாற்றி விட்டார்கள் அந்த கோபம் மட்டும் தான் அப்போதைக்கு இருந்தது.. அதில் நான் உன்னை யார் என்று தெரிந்து பின் உன்னை பார்த்து கொள்கிறேன் டா… என்று கத்தியவன் ராணியை பார்த்து.

“உன்னை மட்டும் கூட்டிட்டு போய் நான் உன்னை ஆரதனையா பண்ண போறேன். போ .இறங்கி போ..” என்று கத்தியவரிடம் ராணி ஒரு மாதிரி குரலில்..

“என்னையும் ஒரு காலத்தில் ஆராதனை செய்தவங்க தான் இந்த ஆண்கள்..” என்று சொன்னவள்..

“பின் என்ன சாரே வரும் போது வண்டியில் கூட்டிட்டு வந்துட்டு இப்போ நடந்து போக சொல்றிங்க…” என்றும் கேட்டவளிடம் அந்த காவல் அதிகாரி…

“சீ போ ஓடி விடு… அது பொம்பளை இல்லை ஆம்பிள்ளை என்று என் கிட்ட சொன்னியாடி நீ…” என்று திட்டி ராணியை அனுப்பி விட்டு தன் காவல் நிலையத்திற்க்குள் நுழைந்த அந்த காவல் அதிகாரிக்கு ஒரு ஆணிடம் இப்படி பேசி விட்டோமே என்று ஒரே அவமானமாக அவர் மனது நினைத்தது… நீ யார் என்று தெரிந்து நான் உன்னை என்ன செய்யிறேன் பாரு..

அந்த கார். உள் இருப்பவரை வெளியில் இருப்பவர்கள் பார்க்க முடியாத வாறு வடிவமைக்கப்பட்ட கார்… அதனால் கிருஷ்ண மூர்த்தியை அந்த காவல் அதிகாரி பார்க்கவில்லை.. அப்படி பார்த்து இருந்தாலாவது ஏதோ ஒரு வகையில் குரு மூர்த்தியை கொஞ்சம் அடையாளம் கண்டு கொண்டு இருக்கலாம்..

அதனால் காவல் நிலையத்திற்க்குள் வந்த உடனே அந்த காவல் அதிகாரி.. இந்த தெருவில் இருக்கும் கேமிரா பதிவு எல்லாம் எனக்கு உடனே வேண்டும்… என்று இங்கு தன் கீழ் வேலை பார்க்கும் காவலர்களிடம் அந்த காவல் அதிகாரி சொல்லி முடிக்கும் முன் குரு மூர்த்தியின் ஆட்கள் அங்கு இருந்த கேமிராவின் பதிவுகள் மொத்தமும் அழித்து விட்டு இருந்தான்…

ஒரு சில வீட்டின் முன் இருந்த கேமிரா பதிவுகளையும் விட்டு வைக்கவில்லை… அதனால் அந்த காவல் அதிகாரி அனுப்பி வைத்த அந்த காவலர்..

இரண்டு மணி நேரம் கழித்து அவர் முன் வந்து நின்றவர்….

“சார் ஒன்னும் கூட இல்ல சார்.. நமக்கு முன்னவே யாரோ வந்து மொத்தத்தையுமே அழிச்சிற்று இருக்காங்க சார்..” என்று சொன்னவர் பின்..

“என்ன சார் வியசம் பெரியதா. இப்படி டென்ஷனா இருக்கிங்க. என்ன சார் விசயம்.?” என்றும் கேட்டவரிடம்..

“சொன்ன வேலையை செய்ய துப்பு இல்ல…. என்ன…? ஏது…? என்று என் கிட்ட வந்து கேளு…. போ அந்தான்டை…” என்று விரட்டி அனுப்பி விட்டார்..

பின் என்ன சொல்வார். நான் பொம்பளை என்று நினைத்து ஒரு ஆம்பிள்ளை கிட்ட இப்படி எல்லாம் பேசினேன் என்று சொல்லவா முடியும்..

அந்த சமயம் தான் அந்தமானுக்கு சென்ற தாமரை... அந்த காவல் அதிகாரிக்கு அழைத்து பேசியது..

“என்ன ஆச்சு எல்லாம் நல்ல படியா முடிந்ததா..? இல்லையா…?” என்று பதட்டத்துடன் கேட்டாள்..

இப்போது அந்த அதிகாரி மொத்த கோபத்தையும் தாமரையிடம் இறக்கி வைத்தார்..

“என்னது நல்லப்படியா முடிந்ததா…? நீ ஒரு பெண் அந்த வீட்டில் இருக்கும் என்று சொன்னியே… ஒரு போட்டோவை அனுப்பி வெச்சியா…?” என்று தாமரையிடம் பாய்ந்தார்..

காவல் அதிகாரிக்கு தாமரை போட்டவோடு இந்த பெண் தான் என்று சொல்லி இருந்தால், தனக்கு இந்த அசிங்கம் நடந்து இருக்காதே என்ற கோபம்.. அதனால் இப்போது அந்த காவல் அதிகாரி தன் கோபத்தை தாமரையிடம் காட்டினான்…

தாமரைக்கோ தன் கணவன் தன்னை அழைத்து பேசிய விசயத்தை கேட்டதில் இருந்து ஒரு பதட்டம்..

ஆம் தாமரையிடம் சிறையில் இருக்கும் விசுவநாதன் தானே அழைத்து பேசினார்.. இது வரை தாமரை சிறைக்கு சென்றும் தன் கணவனை பார்க்க முடியவில்லை…

பார்க்க முடியவில்லை என்று சொல்வதை விட விசுவந்தான் அதற்க்கு அனுமதிக்கவில்லை.. அப்போது மனைவியின் மீது கோபமா என்று கேட்டால், விசுவநாதன் இல்லை என்று தான் சொல்லுவார்… தானே அத்தனை தவறு செய்து இருக்கும் போது அவர் எப்படி மனைவியை குற்றம் சாட்டுவார்…



அதனால் அவர் தன்னை யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.. ஆம் யாரையும் தான்.. அந்த யாரில் குரு மூர்த்தியுமே அடக்கம் தான்..

குரு மூர்த்தி தாமரை போல எல்லாம் அடிக்கடி சென்று விசுவநாதனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தவில்லை…

ஒரு முறை சென்று விட்டு தன் மாமனை பார்க்க முடியாது போனதில் புரிந்து கொண்டவராக.

அந்த ஜெயில் சூப்பிரமெண்ட் இடம்.. தன் மாமாவை நல்லப்படியாக பார்த்து கொள்ளும் படி சொல்லி விட்டு அவருக்கு ஒரு சிலதை கொடுத்து விட்டு வந்ததோடு சரி..

அப்படி தங்களை பார்க்காது இருந்த தன் கணவனிடம் இருந்து தாமரைக்கு தொலை பேசியில் இருந்து அழைப்பு வந்ததிலேயே தாமரைக்கு தெரிந்து விட்டது தான். அங்கு சென்னையில் ஏதோ நடந்து இருக்கிறது என்று..

அதுவும் தான் அந்தமானுக்கு வந்தது.. தான் எங்கு இருக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது ரகசியமாக வந்த இடத்தை கண்டுப்பிடித்து தன்னை தன் கணவன் அழைக்கிறார் என்றால், அனைத்தும் தெரிந்ததினால் தான் என்று தாமரைக்கு தெரியாதா..?

அதில் தாமரைக்கு கோபம் கூட வந்தது.. எண் இப்படி இருக்க. தான் ஒரு மூலையில் தனித்து இருக்க. அப்போது எல்லாம் தன்னை அழைத்து ஆறுதலாக பேச தெரியாதவன். இப்போது தன் தங்கை மகனுக்கு ஒன்று என்றால் மட்டும் அழைத்து பேசுவதை பாரேன் என்று தான் கணவனின் அழைப்பை ஏற்றது..

தாமரை அழைப்பை ஏற்ற உடனே விசுவநாதன் எடுத்த உடனே… “ என்ன காரியம் செய்து இருக்க நீ… அந்த பெண்ணை கொல்ல ஆள் அனுப்பி இருந்து இருந்தா கூட நான் உன் பெண் மீது இருக்கும் அதிகப்படியான பாசத்தில் இப்படி செய்து இருப்ப என்று நான் நினச்சி இருந்து இருப்பேன்..

ஆனா நீ… நான் சாரதாவை கடத்தும் போது கூட அந்த பெண் மீது தப்பா கை பட கூடாது என்று சொன்னேன்.. அதே போல கிருஷ்ண மூர்த்தியிடம் என் தங்கை கழுத்தில் நீ தாலி கட்டலேன்னா அங்கு சாரதா கழுத்தில் அங்கு இருப்பவங்க ஒருத்தன் தாலி கட்டிடுவான் என்று தான் மிரட்டினேன்.. ஆனா அது செய்து இருந்து இருப்பேனா என்று கேட்டா கண்டிப்பா இல்ல…

ஏன்னா எனக்கு சாரதா மீது தனிப்பட்ட பிரச்சனை எல்லாம் இல்ல.. எனக்கு என் தங்கை காதன் நிறைவேறனும்.. அது தான். ஆனால் நீ இப்போ செய்ய நினைத்த விசயம் இருக்கே விசயம்..” என்று விசுவநாதன் சொல்லும் போதே தாமரை கணவன் சொன்னதை மற்றதை எல்லாம் விடுத்து..

“செய்ய நினைத்த விசயமுன்னா. அப்போ செய்து முடிக்கவில்லையா.?” என்று தாமரை கேட்டதுமே விசுவநாதன்.

“சீ.” என்றவர். பின்…

“ நான் வெளியில் வந்த பின்.. இந்த ஊரை விட்டு உன்னையும் ஸ்ருதியையும் எங்காவது அழச்சிட்டு போயிடலாம். ஸ்ருதிக்கு இடம் மாற்றம் கூட அவள் மனதுக்கு ஒரு நல்ல மாற்றம் கொடுக்கும் என்று குரு கூட சொன்னான்.” என்று சொன்ன போது தாமரை மீண்டும்..

“ஓ உங்க தங்கை மகன் நம்மை ஊரை விட்டு விரட்டி விட கூட திட்டம் போட்டானா…/ நம்மைளை அனுப்பி விட்டிட்டு, அவன் அந்த மகி கூட சந்தோஷம்மா குடும்பம் நடத்துவானா.. அதுக்கு நான் அவனை விட்டு விடுவேனா என்ன…?” என்று சொன்ன போது விசுவநாதன்..

“இனி உனக்கும் எனக்குமான உறவு ஒரு முடிவுக்கு வந்து விட்டது…” என்று சொன்னவர் கூடவே…

“அந்த பெண்ணை நீ ஒன்னும் பண்ண முடியாது.. அந்த பெண்ணை அவனுக்கு பிடிக்கும் என்று எனக்கு தெரியும் தான். ஆனா அது எந்த அளவுக்கு என்று இப்போது தான் எனக்கு தெரிந்தது…” என்றவர் போனை வைத்து விட.

அடுத்து தான் தாமரை அந்த காவல் அதிகாரிக்கு அழைத்து கேட்டது.. அவருமே இப்படி சொன்னதில்.

தாமரையும் விடாது.. “ பணம் மட்டும் எவ்வளவு.. பணமா கொடுப்பியா சொத்தா. என்று கேட்டியே போட்டோ கேட்டியா என் கிட்ட…? அந்த வீட்டில் அந்த பெண் யார் என்று ராணி கிட்ட கேட்டா சொல்லிட போகுது.. அதோட நான் தான் அந்த தடிமாடுங்க கிட்ட எல்லா விவரமா சொன்னேன் தானே என்ன ஆச்சு..? அந்த தீவெட்டியனுங்க போனும் எல்லாம் ஸ்வீச் ஆப் செய்து வைத்து இருக்கானுங்க.. வாங்கின பணத்துக்கு ஏதாவது செய்திங்கலா இல்லையா.? என்று விடாது தாமரை கத்திய கத்தலில் ..

அந்த காவல் அதிகாரிக்கு.. இது என்ன பொம்பளை என்று ஆகி விட்டது.. அதோடு இந்த பொம்பளை நம்மை சும்மா விடாது என்று…

“நான் ஆளை மாத்தி கூட்டிட்டு வந்துட்டேன்..” என்று மட்டும் கூறினார்.. அவருக்கு தான் ஒரு ஆணை பெண் என்று நினைத்து கூட்டி வந்தேன் என்று தான் ஏமாந்த கதையை சொல்ல விருப்பம் இல்லை அவருக்கு..

தாமரைக்கோ… “ ஆள் மாத்தியா..? நீ என்ன ஆளு… இதுல போலீஸ்ல வேற இருக்கே சுளையா ஒரு கோடி வாங்கி இருக்க.” என்று ஏகத்துக்கும் திட்ட.

காவல் அதிகாரியோ… “ இப்போ அந்த பெண் போட்டைவை அனுப்புங்க.. இந்த முறை ஸ்க்கேச் நான் போடுறேன்.. எங்குமே பிசிரு தட்டாது….” என்று சொன்னவனுக்கு புரியவில்லை.

தன்னை ஏற்கனவே ஸ்கெட்ச் போட்டு கட்டம் கட்டி தூக்க திட்டம் போட்டு விட்டான் என்பது..

அதில் தாமரை. “ இப்போ என் கிட்ட அவள் போட்டோ இல்ல… இப்போ நான் சென்னைக்கு கிளம்பிட்டு இருக்கேன்.. வந்த உடன் தருகிறேன்.. இந்த முறை.. சரியா செய்து விடனும்…” என்று சொன்ன தாமரையும் தன் கணவன் விசுவநாதன் சொன்னதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை .

அந்த காவல் அதிகாரியும்… இரவு இரண்டு மணிக்கு தன் வீட்டிற்க்கு சென்று இரவு முழுவதும் அலைந்த சோர்விலும்.. ஒரு ஆணை ஒரு பெண் என்று நினைத்து அவர் ஏமாந்த ஏமாற்றத்திலும் இரண்டு ரவுண்ட் அடித்து விட்டு குப்புற கவிழ்ந்து படுத்து தூங்கி விட்டார்.. நாளை இதே போல தான் அவர் மானமும் குப்புற கிடக்க போகிறது என்று தெரியாது…

கிருஷ்ண மூர்த்தி காரில் தன் மகன் ஏரிய கோலத்தை பார்த்து ஒரு தந்தையாக ஒரு மாதிரியாகி விட்டது..

கிருஷ்ண மூர்த்திக்கு தன் மகன் மீது ஆயிரம் மன வருத்தம் இருந்தது தான்.. ஆனால் ஒரு கம்பீரமான ஆண்மகனாக பார்த்த தன் மகனை இந்த மாதிரி ஒரு கோலத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்..

ஆனால் தன் மகன் எதற்க்கு இந்த கோலம் பூண்டான் என்று தெரிந்ததால், ஒன்றும் சொல்லாது போக…. அதே நிலை தான் அங்கு இருந்த மற்றவர்களுக்கும்…

ஆம் மற்றவர்கள் தான்.. அது ஒரு பெரிய கார். அதில் சாரதா ராம் சந்திரன் சித்தார்த் அனைவரும் தான் இருந்தனர்.

குரு மூர்த்தியை அப்படியான ஒரு கோலத்தில் பார்த்த அனைவரும் அதிர்ச்சியாகி தான் போயினர்… குரு மூர்த்தியை அவர்களும் தானே பார்த்து இருக்கின்றனர்…

கம்பீரமான தோற்றத்தில் பார்த்த குரு மூர்த்தியை இப்படி சேலையில் அவர்களுக்கே அவன் முகம் பார்த்து பேச முடியவில்லை..

ஆனால் குரு மூர்த்திக்கு தான் இருந்த கோலம் எல்லாம் பெரியதாக படவில்லை.. அடுத்து அடுத்து என்ன என்று தான் அவன் மனது யோசித்தது…

கிருஷ்ண மூர்த்திக்கு மட்டும் காவல் வாகனத்தில் இருந்தே கை பேசியில் மெசஜ் அனுப்பி விட்டான்.. வசந்திடம் தான் ஈஸ்வரி பாதுகாப்பாக இருக்கிறாள் என்று.. அதோடு தான் வந்து கொண்டு இருக்கும் வாகனம்.. பின் தன் கை பேசியில் தான் வரும் லோகேஷனை ஷேர் செய்தவன்.. இந்த காரில் பின் தொடருங்கள்.. நீங்க மட்டும் இல்லை… தன்னிடம் இருந்த நம்பிக்கையான ஆள் இரண்டு பேரை சொல்லி இவர்களோடு வாருங்கள் என்று சொல்லி இருந்தான்..

அதன் தொட்டு தான்… அத்தனை விரைந்து அனைத்து கேமிராவின் பதிவையும் அகற்ற முடிந்தது..

இதோ அடுத்த வேலையாக வசந்த் மகியை குரு மூர்த்தியின் மற்றும் ஒரு வீட்டிற்க்கு அழைத்து வர வழைத்து விட்டான்..

தெரியும் தாமரை எந்த நேரம் என்றாலும் அவர் வீட்டிற்க்கு வர கூடும் என்று… இனி வந்தாக் அவனின் ஈஸ்வரியை ஒன்றும் செய்ய முடியாது தான்..

ஆனால் அவனுக்கு இன்னொரு முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது.. அது செய்து முடித்த பின் தான் மற்றது எல்லாம் என்று முடிவு செய்து விட்டான்.

இதோ அவன் செய்த திட்டத்தின் முடிவாக விடியலிலேயே அந்த காவல் அதிகாரியின் கை பேசி விடாது அடித்து கொண்டு இருந்தது.

தூக்க கலகத்திலேயே அதை ஏற்று காதில் வைத்த காவல் அதிகாரிக்கு சொல்லப்பட்ட செய்தியில் கை பேசியை வைத்து விட்டு டிவியை ஆன் செய்தவன்.. அதில் ஒலிப்பரப்பு செய்து கொண்டு இருந்த செய்தியில் நேற்று தான் பேசிய அனைத்துமே ஒலியும்.. ஒளியுமாக வந்து கொண்டு இருந்தது..

அதோடு இடையில் செய்தி வாசிப்பாளர் வேறு.. நேற்று விபச்சார விடுதியில் இருந்து அழைத்து செல்லப்பட்ட அந்த பெண்ணை காவல் அதிகாரி என்ன செய்தார்…? என்று பெரிய கேள்வி குறியாக வேறு கேட்டு கொண்டு இருந்தது….




 
Active member
Joined
May 12, 2024
Messages
223
Oho… innoru murai vera neenga sketch poduveengalo… 🙄🙄🙄

Police ku oru sketch pottathu pola Thamarai kkum podunga…

Vishwanathan kooda Mahi ya kadatha plan pottavar thane
 
Active member
Joined
Jun 2, 2024
Messages
82
Semma ud maam, next epi ku eagerly waiting...police ku potatha vida Thamarai ku perya sketch ah potrunga maam...Guru and Eswari scenes ku waiting...
 
New member
Joined
Jan 18, 2025
Messages
6
Semma ud mam
Adi dhool 😍
Guru 's action
Summa adthiruthula
Eagerly waiting for eswari and guru reaction 😀 🙌
 
Top