Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yennai kondaada pirandhavan....14...1

  • Thread Author
அத்தியாயம்…14…1

சித்தார்த் சொன்னதை கேட்டு சாரதாவுக்கு அதிர்ச்சி மட்டும் தான்.. ஆனால் மகி மயங்கி கீழே விழுந்து விட்டாள்…

விழுந்தவளை தண்ணீர் தெளித்து எழ வைக்க.. எழுந்தவளின் சொல்லும் படியாக இல்லை.. தன்னை சுற்றி என்ன தான் நடக்கிறது…? பெண்ணவள் பயந்து போய் விட்டாள்..

தாய் தந்தை இறந்த போது பெற்றோர்களை இழந்த துக்கம் மட்டும் தான் அவளிடம் இருந்தது.. பயம் கிடையாது.. அடுத்து தன் எதிர் கால வாழ்க்கை பற்றிய பயம் அவளுக்கு இல்லவே இல்லை..

காரணம் தன் அத்தை மாமா அத்தான் மீது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது….ஆனால் இப்போது தன்னை சுற்றி நடப்பதை பார்த்தவளின் மனதில் இப்போது ஒரு புதியதான பயம் பெண்ணவளின் மனதில் பற்றி கொண்டு விட்டது..

அதற்க்கு ஏற்றது போன்று தான் அவளை சுற்றி நடந்த விசயங்கள் இருந்தன.. நடக்கும் விசயமும் இருக்கிறது.. ஆனால் பெண்ணவளுக்கு தெரியவில்லை.. இதற்க்கு மேலான பயம் தான் இனி அவள் வாழ்க்கையில் நடக்க உள்ளது என்று தெரியாது பயத்துடன் தன் அத்தையின் கையை பிடித்து கொண்ட மகி..

தன் பயத்தை பெண்ணவள் தன் அத்தையிடம் முதன் முதலாக சொல்லவும் செய்தாள்..

ஸ்ருதியோடு தன் அத்தான் திருமணம் நடந்து முடிந்ததில் மகிக்கு தெரிந்து விட்டது.. ஸ்ருதி எதற்க்கு அவளாக தேடி வந்து தன்னிடம் பேசினாள் என்பது… ஒரு காரணத்தோடு தன்னோடு நட்பு பாராட்டியதில், இனி தன்னிடம் பேசுபவர்கள் பழகுபவர்களை நான் கவனிக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு கூடவே பயமும் வந்து விட்டது..

இது வரை இது போலான விசயங்களை பெண்ணவள் சந்தித்தது கிடையாது.. அடுத்து தன் அத்தையின் உடல் சீர்கெட்டதில் அவளுக்கு இருக்கும் பொறுப்பு கூடவே.. அத்தைக்கு ஏதாவது ஆகி விடுமொ என்ற பயம். என்று அடுத்து அடுத்து அவள் சந்தித்த பிரச்சனையால், அவளின் மனதில் தன்னால் ஒரு பயம் பற்றிக் கொண்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

இப்போது சித்தார்த் சொன்ன செய்தியில் அவள் ஈர கொலையே நடு நடுங்கி விட்டது போலான நிலை..

அத்தையின் கையை கெட்டியாக பிடித்து கொண்டவளின் கைகள் நடுக்கமும்.. தன்னால் அவள் வாய்..

“அத்த பயமா இருக்கு..? பயமா இருக்கு..?என்ற இந்த பினத்தலை கேட்டு ராம் சந்திரன் சித்தார்த் அனைவரும் அவளை சுற்றி சூழ்ந்து கொண்டதோடு..

சித்தார்த் மகியின் இன்னொரு கையை பிடித்து கொண்டு… “ மகிம்மா பயப்படாதே நான் இருக்கேன் டா. நான் இருக்கேன்..” என்று தன் மாமன் மகளுக்கு தைரியத்தை கொடுத்தான்..

ஆனால் சாரதாகோ தன் மருமகளை பிடித்து இருந்த மகன் கையை வெடுக்கென்று பிரித்து எடுத்தவள்..

“நீ பேசாதேடா. எல்லாம் எல்லாம் உன்னால் தான். நீ முதல்ல இந்த வீட்டை விட்டு வெளியில் போல் வெளியில் போ…” என்று கத்த.

சித்தார்த் கோபமாக இருந்தாலும் தன்னிடம் அம்மா பேசி விட்டதில், அவன் மனதுக்கு ஒரு நிம்மதி ஏற்பட்டது தான்..

ஆனால் இப்போது தான் உடம்பு சரியிக்காது மெல்ல மெல்ல தேறி வருகிறார்கள்.. இப்போது இப்படி கோபப்பட்டால், மீண்டும் உடல் நிலை சரியில்லாது போய் விட போகிறது… என்ற பயத்தில்..

“ம்மா ம்மா நீங்க கோபப்படாதிங்க ம்மா.. நான் போயிடுறேன்.. ம்மா.” என்று சொன்னவனின் பேச்சில் சாரதாவுக்கு இன்னும் தான் கோபம் வந்தது..

“ஆமா ஆமா. நான் கோபப்பட கூடாது என்று தான் சார் போறார்.. அங்கு போக உனக்கு இது ஒரு சாக்குடா…” என்று திட்ட.

இப்போது சாரதாவின் இந்த பேச்சு ராம் சந்திரனுக்குமே புரியவில்லை… இவள் என்ன சொல்கிறாள் என்பது போல மனைவியை பார்த்தார்…

சாரதாவும் சொன்னார் யாரும் எதிர் பார்க்காத ஒரு விசயத்தை சொன்னார்..

“தோ பார் சித்து நீ எங்களுக்கு ஒரே மகன் … ஆனா எந்த ஒரு காரணத்திற்க்காகவும் அவன் பெண் இந்த வீட்டிற்க்கு வருவதை நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்.. அதுக்கு என்று நீ தனியாவா. இல்ல அந்த ஆள் வீட்டில் வீட்டோட மாப்பிள்ளையா இருந்து இங்கு வந்து போய் இருக்கலாம்.. உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாகி விடும் என்று நீ நினச்சி இருந்தா. இப்போ ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ..

அந்த பெண்ணுக்கு நீ கணவனா வாழ்ந்தா நீ என் பிள்ளையா எப்போதுமே இருக்க முடியாது.. உனக்கு எதுவும் தெரியாது இந்த கல்யாணம் நடந்து இருந்தா.. இன்னையோட அந்த கல்யாணத்தை மறந்து விடு… அதுவும் என் அண்ணன் அண்ணியை சாக அடிச்சவளை கண்டிப்பா என்னால ஏத்து கொள்ளவே முடியாது… நீ என்ன சொல்ற..?” என்று கேட்ட சாரதா தன் முன் கையை நீட்டிய அன்னையிடம் சித்தார்த்…

“நீங்க சொல்வதை கேட்கிறேன்..” என்று தன் தாய் கை மீது கை வைத்தான்..

உடனே சித்தார்த்… “ அப்போ மகியை நீ உடனே கல்யாணம் செய்து கொள்…” என்ற இந்த பேச்சில் சித்தார்த் மட்டும் அல்லாது மற்றவரும் தான் அதிர்ந்து போய் சாரதாவை பார்த்தனர்.

அதுவும்.. ராம் சந்திரன்.. “ சாரதா நீ கோபத்தில் இருக்க.. கொஞ்சம் போகட்டும் என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்.. இது சட்டுன்னு கோபத்தில் எடுக்கும் முடிவு கிடையாது.. இதில் நம் மகன் வாழ்க்கை மட்டும் கிடையாது நம்ம மகியின் வாழ்க்கையும் அடங்கி இருக்கு…” என்ற கணவன் பேச்சில்.

சாரதா… “ உங்க மகன் போல இல்ல என் தங்கம்…” என்று கணவனிடம் கூறிய சாரதா மீண்டும் மகனிடம்…

“ நீ சொல் சித்தார்த்…?” என்று கேட்ட சாரதா மகன் பதில் அளிக்கும் முன் சாரதா இரு ஒரு எச்சரிக்கையாக..

“ஆனா ஒன்னு சித்தார்த்… நான் இதை உன் கிட்ட பயம் முறுத்த என்று சொல்லலே… நீ அவன் பெண் கூட தான் உன் வாழ்க்கை என்றால் நீ எங்களை மறந்து விட வேண்டியது தான். நான் என் வாழ்க்கையில் பார்க்கவே பார்க்க கூடாது என்று நினச்சவன். உன்னால ஒரு தடவை பார்த்ததே.. இன்னும் என் அடி நெஞ்சி பத்தி எரியுது…” என்று சொல்லும் போதே சாரதாவுக்கு மூச்சு வாங்கியது.

அதில் சித்தார்த் அன்னையை மேலும் பேச விடாத சித்தார்.

“சரிம்மா…” என்று விட்டான்..

மகனின் பேச்சில் ராம் சந்திரன் அதிர்ந்தாலுமே உடனே… “ இது என்ன முட்டாள் தனமா இருக்கு…?” என்று கோபத்துடன் தான் கேட்டார்…

“ அப்போ நீங்க அந்த ஆளோட பெண்ணை மருமகளா ஏத்துக்க போறிங்கலா..? அதுவும் என் அண்ணன் அண்ணியை கொன்னவல. அவள் போக வேண்டியது வேற மாமியார் வீடு… “ என்ற சாரதாவின் பேச்சை ராம் சந்திரன் ஒத்து கொள்ளும் படி தான் போனது..

அவராலுமே.. ஸ்ருதியை மருமகளாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை. முன்னவே விசுவநாதன் பெண் என்ற ஒரு காரணமே ஸ்ருதியை மறுக்க காரணமாக இருக்க. இதில் இன்னொன்றாக தன் மச்சானை கொன்றவள்..

அது அவன் சுயநினைவோடு இல்லாது போதுமெ. கண்டிப்பாக அவரால் அது முடியாது..

பின் எப்படி திருமணம் இன்னுமெ விவாகரத்து இல்லை என்ற பேச்சில், இன்னுமே திருமணம் பதிவு செய்யவில்லை என்ற பேச்சு என்று அடுத்து அடுத்து பேசினார்களே ஒழிய மகியின் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை..

அவள் மீது அவ்வளவு நம்பிக்கையா.? இல்லை சித்தார்த்தை திருமணம் செய்து கொள்ள முதலில் சம்மந்தம் சொன்னவள் தானே என்ற நம்பிக்கையா.. அது தான் என்பது போல அன்று சித்தார்த் தான் தங்கி இருந்த அறைக்கு செல்லாது வீட்டிலேயே இருக்க.

இரவு உணவு சாப்பிடும் சமயம் சித்தார்த் தான் கேட்டான்..

“மகி உனக்கு ஒகேவா …?” என்று…

கேட்டவன் மனதில் அத்தனை பிராத்தனை மகி ஒத்து கொள்ள கூடாது.. ஒத்து கொள்ள கூடாது என்று..’ஸ்ருதியை தன் வீட்டிற்க்கு மருமகளா அழைத்து வர முடியாது தான்.. ஆனால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் மன நிலையில் சித்தார்த் இல்லை… இந்த திருமணம் ஏற்பாடு நிற்க மகி வேண்டாம் என்று மறுத்தால் மட்டும் தான் நிற்கும்.. அதனால் கேட்க.

மகி தயக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்த போதே சாரதா.

“முன்னவே உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னால் தானே டா.. நீ தான் பைத்தியக்கரா தனமா என்ன என்னவோ செய்து வெச்சிட்ட…” என்ற பேச்சில் அங்கு மகியின் சம்மதம் கேட்க படாதே.. திருமணம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது..

அன்று இரவு மனி தன் அறையில் தன் அன்னை தந்தையின் படத்தை வைத்து கொண்டு அமைதியாக பார்த்து கொண்டு இருந்தாள் பெண்ணவள்..

வாய் திறந்து எதுவும் பேசவில்லை.. ஆனால மனத்தில் அத்தனை பேசிக் கொண்டு தான் இருக்கிறாள்..

சித்தார்த் அத்தானை முதலிலேயே திருமணம் செய்ய சம்மதித்தேன் தான். அப்போ கூட சித்தார்த் அத்தான் மீது காதல் இல்லை தான்.. ஆனால் பாசம் இருந்தது.

இப்போதுமே மகிக்கு தன் சித்தார்த் அத்தான் மீது அந்த பாசம் இருக்கிறது தான்.. ஆனால் திருமணம்.. முன்பும் அத்தானுக்கு தன் மீது காதல் இல்லை தன்னை போல தன் மீது அத்தானுக்கு அன்பு பாசம் இருக்கிறது என்பது தெரியும்..

ஆனால் அத்தான் தன் போல் இல்லையே.. தனக்கு யாரின் மீதும் காதல் இல்லை.. ஆனால் அத்தானுக்கு காதல் மட்டுமா..? கல்யாணமே செய்து கொண்டு விட்டாரே.. என்ன தான் பதிவு செய்யவில்லை என்றாலும் கல்யாணம் நடந்தது நடந்தது தானே.. அது இல்லை என்று ஆகி விடுமா.?

அதுவும் நானே பார்த்த அந்த கல்யாணம்… ஸ்ருதியின் தந்தையினால் அத்தானுக்கு ஸ்ருதியை ஏற்க முடியாது போய் விட்டது..

இல்லை என்றால் இந்த நேரம் அந்த பெண்ணோடு அவர் வாழ்ந்து கொண்டு தானே இருந்து இருப்பார்.. என்று அத்தை மாமாவிடம் அத்தானிடம் பேச வேண்டியது அனைத்தும் தனக்கு தானே பேசி கொண்டு இருந்தவள்.. ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தாள்…

அது தன் தந்தை தாயுக்கு நியாயம் செய்வது.. விபத்து தெரிந்து செய்யவில்லை.. ஆனால் தன் தந்தை மீது போட்ட பழி அது தெரிந்து தானே போட்டது.

இரவு முழுவதும் தூங்காது இருந்தவள் விடிந்ததும் அவள் சென்ற இடம் காவல் நிலையத்திற்க்கு தான்…
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Shruthi venam than antha veetukku… Magi parents ku nyayam kidaikkanum…
Aanal ippo intha thideer kalyanam Sidhu & Magi ku avashiyama???
 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Great going Viji mam. Waiting for the twist. Everyone should get their justice, Mahi for her parents death, saradha for her suffering.
 
Top