Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yennai kondaada pirandhavan....15...2

  • Thread Author
அத்தியாயம்….15…2

கிருஷ்ண மூர்த்தி சாரதாவின் மனநிலையை கருத்தில் கொண்டு மகேஷ்வரியை அவள் வீட்டின் முன் விடாது.. ராம் சந்திரன் வசிக்கும் வீதியிலேயே விட்டு விட்டு வந்து விட்டார்..

மகியுமே… “வீட்டிற்க்கு வாங்க…” என்ற அழைப்பு எல்லாம் அவளிடம் இருந்து வரவில்லை… அவளுக்கு தான் அனைத்து விசயமும் தெரியுமே… தெரிந்து கிருஷ்ண மூர்த்தியை வீட்டிற்க்கு அழைத்து அவளின் அத்தைக்கு சங்கடத்தை கொடுக்க அவள் விரும்பவில்லை..

அதனால் ஒரு தலையசைப்போடு தன் அத்தை வீட்டிற்க்கு வந்தவளை அத்தையின் குடும்பமே கோபமாக அவளை வர வேற்றது..

தெரியும்.. தான் காவல் நிலையத்திற்க்கு சென்றது தெரிந்தால், அதுவும் அவர்களிடம் சொல்லாது சென்றதில் கோபப்படுவார்கள் என்று…

ஆனால் தான் சொல்லி தான் தெரியும்.. என்று நினைத்தவளுக்கு தான் சொல்லாத போதே தெரிந்து விட்டது என்பதை அவர்கள் தன்னை வர வேற்ற தினுசில் தெரிந்து கொண்டு விட்டாள்..

அவளின் அத்தான்… “நான் காதல் மயக்கத்தில் நியாயம் எல்லாம் பார்க்காது மாமாவுக்கு நடந்த அநியாயத்தை அப்படியே கண்டும் காணாது விட்டு விடுவேன் என்று நீ நினச்சிட்டியா மகி…” என்று கேட்ட சித்தார்த்தின் பார்வையில் கோபம் தான் அதிகம் இருந்தது.. ஆனால் பேச்சு.. ஆதாங்கமாக தான் இருந்தது.

ஓ கிருஷ்ண மூர்த்தி அங்கிள் சொல்லிட்டாங்க போல என்று சரியாக புரிந்து கொண்டு விட்டாள்..

ஆம் மகி கிருஷ்ண மூர்த்தியை அழைத்து தான் காவல் நிலையம் தான் சென்று கொண்டு இருக்கிறேன் என்று சொன்ன உடனே கிருஷ்ண மூர்த்தி தன் கார் சாவீயை எடுத்த உடனே ராம் சந்திரனுக்கு அழைத்து சொல்லி விட்டார்..

கேட்ட ராம் சந்திரனுக்கு… என்ன சொல்வது..? என்ன பேசுவது என்றே புரியவில்லை.. ராம் சந்திரனின் அந்த அமைதியில்..

“விசு. நம்ம வீட்டு பெண்ணு… அதோட நம்ம அய்யா பேத்தியை நான் பார்த்து கொள்கிறேன். நீ கவலை படாதே.” என்று தைரியம் சொன்ன கிருஷ்ண மூர்த்தியிடம் ராம் சந்திரன்..

“எனக்கு தெரியும் கிட்டு.. நீ பார்த்துப்ப.. ஆனா மகி.. ஏன் என் கிட்ட ஒன்னும் சொல்லலே….என் மீது நம்பிக்கை இல்லையா…? நான் மகன் இவங்களை பார்ப்பேன் என்று நினச்சிட்டாளா…? நம்ம ஐய்யா பேத்தியை விட எனக்கு என் மகனை பார்ப்பேனா சொல்லு கிட்டு…?” என்று கேட்ட ராம் சந்திரனின் குரலில் அத்தனை வேதனை தெரிந்தது..

அதில் கிருஷ்ண மூர்த்தி.. “ அப்படி எல்லாம் இருக்காது சந்திரா… மகி நம்ம ஐய்யா பேத்தின்னா.. சித்தார்த்துமே நம்ம ஐய்யா பேரன் தானே டா..” என்று சொல்லி கிருஷ்ண மூர்த்தி ராம் சந்திரனின் வேதனையை குறைக்க பார்க்க. அப்போது கூட விசுவநாதன்..

“என்னை மகி நம்பலையா..? நம்பலையா…? என்று இதையே ராம் சொல்ல..

பின் தான் கிருஷ்ண மூர்த்தி. “ மகிக்கு எத்தனை பெரிய இழப்பு சந்திரா… சின்ன பெண் தானே சந்திரா… ஏற்கனவே வீட்டில் தொடர்ந்து சித்து கல்யாணம் என்று பிரச்சனை மேல பிரச்சனை பார்த்தவள்.. கூடவே அந்த விசு அவள் அத்தைக்கு செய்த விசயம் தெரிந்து வீட்டில் சொன்னா போலீஸ் ஸ்டேஷனுக்கு போக விடாது செய்ய போறாங்க என்று கூட உங்க கிட்ட சொல்லாம

இருந்து இருக்கலாமே சந்திரா..” என்று கிருஷ்ண மூர்த்தி சொல்லவும் ராம் சந்திரன் அதை ஏற்று கொள்ளும் படி தான் இருந்தது..

காரணம். இதோ பேசியை வைத்த பின் ராம் சந்திரன் கிருஷ்ண மூர்த்தி தன்னிடம் சொன்னதை சொல்லவும்.

சாரதா “அவள் என் கிட்ட கோயிலுக்கு போறேன் என்று தானே சொன்னா.? என் கிட்ட ஏன் பொய் சொல்லனும்..” என்று முதலில் கோபத்துடன் பேசியவர் பின்,.. பயத்துடன்.

“அந்த குடும்ப சாவகாசமே வேண்டாமுங்க… அவங்க குடும்பத்து பார்வை என் மருமகள் மீது பட கூடாது… எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க…” என்று மீண்டுமே கணவனின் கை பற்றிக் கொண்டு அழுது கரைய.

சித்தார்த் ஒரு கைய்யாலக தனத்துடன் தான்… தன் அன்னை அழுவதையும் பயப்படுவதையும் பார்த்து கொண்டு இருந்தான்… அம்மாவின் இந்த அழுகையும், பயமும். தன்னால் தானே…

குறைந்த பட்சம் தன் காதலை சொல்லி இருந்தாள்… விசாரித்த போது யார்…? எவர்….? என்று தெரிந்து இருக்கும்… அம்மாவை தர்ம சங்கடமான இந்த நிலையை தவிர்த்து இருந்து இருக்கலாம்..

அதோடு ஸ்ருதியினால் தான் தன் மாமா அத்தைக்கு விபத்து ஏற்பட்டது.. என்ன தான் அவள் தன் நிலையில் இல்லை என்றாலுமே, எப்படி இனி… இதோ இப்போது எதற்க்கு எடுத்தாலுமே.

“அத்தான் அத்தான் என்று வந்து நிற்க்கும் தன்னை விடுத்து தனித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு… “குடும்பமே ஆடி போய் விட்டது… மகியின் இந்த செயலால்..

அதனால் தான் சித்தார்த் கேட்டு விட்டான்.. மகி அமைதியாக தான் நின்று கொண்டு இருந்தாள். அவளின் இந்த அமைதி கூட சித்தார்த்துக்கு மட்டும் அல்லாது அவளின் அத்தை குடும்பத்திற்க்கே புதியதாக தான் இருந்தது…

சாரதாவுக்கு மருமகளின் அந்த அமைதியில் மருமகளிடம் கோபப்படாது தன் மகனிடம் தான் கோபப்பட்டார்.

“எப்படி நம்பிக்கை வரும் சித்து.. எப்படி நம்பிக்கை வரும்…? இரண்டு நாள் முன்னே அவளை கல்யாணம் செய்துக்குற என்று சொன்ன. பின் நீ என்ன செய்த… அந்த பெண்ணை பார்த்ததுமே மகியை மறந்துட்டு அவள் கழுத்தில் தாலியை கட்டின. பெத்த எங்களையே அவளுக்காக மறந்தவனை அவள் எப்படி நம்புவா…” என்று கோபமாக கேட்ட அத்தையிடம்..

“அத்த விடுங்க அத்த. போனதை பேச வேண்டாம்..” என்று சாரதாவிடம் சொன்ன மகேஷ்வரி..

சித்தார்த் திருமணம் முடிந்ததில் இருந்து அவன் முகத்தை கூட பார்க்க மறுத்த மகி இப்போது சித்தார்த் முகத்தை பார்த்து.

“இப்போ தான் உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சே.. அடுத்து என்ன செய்யிறதா இருக்கிங்க…?’ என்று கேட்ட மகியின் குரலும் சரி… முக பாவனையும் சரி சித்தார்த்துக்கு புதியாக இருந்தது..

எப்போதுமே மகி தன்னை பார்க்கும் பார்வை இது இல்லை.. அதே போல் அந்த குரல்.. அவள் தன்னை அழைக்கும் அத்தான் என்ற அழைப்பிலேயே அத்தனை அன்பு இருக்கும்..

மகியின் இந்த மாற்றத்தில் சித்தார்த் தான் திண்டாடி போய் விட்டான்..

அதில் வார்த்தைகள் திக்க.. “ எ…ன்.. ன…? மகி..” என்று கேட்டவனிடம் மகி மீண்டுமே அழுத்தம் திருத்தமாக…

“உங்களுடைய அடுத்த மூவ் என்ன..?” என்று கேட்டேன்… மகியிடம் இருந்து அவளின் அந்த அத்தான் என்ற அழைப்பு முழுமையாக விடை பெற்று சென்று இருந்தது..

“மகி தங்கம்…” என்று அழைத்து கொண்டே அவளை தொட வந்த சித்தார்த்தின் கையை தட்டி விட்டவள்..

என் கேள்விக்கு பதில் சொல்லி விட்டு அடுத்து பேசு என்பது போன்ற பாவனையில் தான் மகி சித்தார்த்தை பார்த்து நின்றாள்..

அவளின் பார்வை சித்தார்த்தை தடுமாற செய்தது.. அவனின் அந்த தடு மாற்றம் அவனின் வார்த்தைகளிலும் தெரியும் விதமாக தான்..

“நான் என்ன மகி செய்யனும்..?” என்று சித்தார்த் அவளையே கேள்வி கேட்டான்..

அவனின் அந்த கேள்வியில் சாரதாவுக்கு கோபம் தான் வந்தது… ஏன் அமைதியின் திரு உருவம் நம் ராம் சந்திரன் கூட கோபமாக மகனை முறைத்து தான் நின்று இருந்தார்.

ஆனால் மகி கோபம் எல்லாம் படவில்லை.. ஒரு சின்ன சிரிப்பை சித்தார்த்தை பார்த்து சிரித்தவள்..

“நீங்க என்ன செய்யனும்…? என்று அது நீங்க தான் முடிவு செய்யனும்.. ஆனா நான் என்ன செய்யனும் என்று அதை நான் முடிவு பண்ணிட்டேன்…

அந்த பெண் இந்த வீட்டிற்க்கு வந்தா கண்டிப்பா நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்..

நான் இங்கு இருக்க மாட்டேன் என்று நான் சொல்ல காரணம்.. நீங்க என்னை கல்யாணம் செய்து கொள்ளாம அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிங்க என்ற காரணம் இல்ல..

என் அப்பாவை அசிங்கப்படுத்தியவளோடு தான் நான் இத்தனை நாள் பிரண்டா இருந்தேன்… என்று நினச்சாலே நிஜமா.. இந்த கண் தானே அவளை பார்த்தது என்று என் கண்ணை நானே குத்தி கொள்ளலாம் போல இருக்கு… அதே போல இந்த வாய் தானே… அவள் கிட்ட பேசுச்சி என்று இந்த வாய் மீது சூடு வைத்து கொள்ளலாம் போல இருக்கு…” என்று சொன்னவளின் பேச்சில் அத்தனை ஆவேசம்.

“ஆனா இனி தெரிந்தே… உண்மையா அவ கூட எல்லாம் என்னால இருக்க முடியாது.. அதே போல தான் என் அத்தை… அந்த பெண் இங்கு வந்தா அவள் அப்பா வருவார்..

என் அத்தை அந்த ஆளை எல்லாம் பார்க்கனும் என்று எந்த அவசியமும் இல்ல… என் அப்பா இல்ல… ஆனா என் அப்பா பெண் நான் இருக்கேன்… என் அப்பா அத்தைக்கு இந்த நிலையில் இருந்தால் என்ன என்ன செய்வாறோ..அது எல்லாம் நான் என் அத்தைக்கு செய்வேன்… என் அத்தைக்கு அம்மா வீடா நான் இருப்பேன்..” என்று தன்னிடம் கோபமாக பேசிய மகியையே புரியாத பார்வை பார்த்து கொண்டு இருந்த சித்தார்த்…

“நான் ஸ்ருதியை இங்கு கூட்டிட்டு வரேன் என்று சொல்லவே இல்லையே மகி..” என்றதற்க்கும் மகி சித்தார்த்தை முறைத்து தான் பார்த்து நின்றாள்..

“எனக்கு புரியல.. அப்போ எதுக்கு அவ்வளவு அவசர அவசரமா மேரஜ் பண்ணிட்டிங்க..” என்று கேட்டவளை சித்தார்த் ஆயாசமாக பார்த்தவன்..

“மகிம்மா என்னை என்ன தான் செய்ய சொல்ற…?” என்று கேட்டவனிடம் மகேஷ்வரி..

“எனக்கும் தெரியல.. ஒரு சில விசயங்கள் செய்வதுக்கு முன் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யனும்.. செய்த பின்.. ஒரு சிலதுக்கு தீர்வே இல்ல… கல்யாணம் பண்ணிட்டு விடுவதுமே பாவம் தான்.. ஆனால் விடாது விட்டா என் அத்தை பாவம்.. அவங்களுக்கு கடைசி வரை மகன் என்ற உறவே இல்லாது தான் அவங்க இருக்கனும்..” என்று சொல்லி விட்டு சென்றவளின் முதுகையே பார்த்து கொண்டு இருந்த சித்தார்த்துக்கு ஒன்று மட்டும் புரிந்தது.. அது தான் ஸ்ருதியை கல்யாணம் செய்து கொண்டு இருந்து இருக்க கூடாது..

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லுவாங்க… சமையல் தப்பா போயிட்டா ஒரு நாள் உணவு நஷ்டம்.. பயிர் நஷ்டம் ஆனா ஒரு வருடம் நஷ்டம். ஆனால் கல்யாணத்தில் மட்டும் தவறா போனா அவங்க வாழ் நாள் முழுவதுமே நஷ்டம் என்பதை காலம் கடந்து தான் சித்தார்த் புரிந்து கொண்டது…

***********************************************************************

எப்போதும் குரு ஒரு நாளில் ஒரு முறையாவது தன் மாமன் விசுவநாதனை பார்த்து விடுவான். ஊரில் இல்லாது வெளி ஊர் சென்று இருந்தால் பேசியிலாவது அழைத்து பேசி விடுவான்.

இதோ மூன்று நாள் கடந்து விட்டது.. குரு தன் மாமனை சென்று பார்த்து… தாமரை. வேறு தன் கணவனிடம்.

“என்னங்க. நீங்க இப்படியே இருந்தா நம்ம பொண்ணு வாழ்க்கை என்ன ஆகுறது.. படிப்பு வேறு முடிந்து விட்டது.. முன்னாவது நம்ம பொண்ணு காலேஜ் போயிட்டு வந்துட்டு இருந்தா . அங்கு நாளு பேரை பார்த்தது கொஞ்சம் மனசுக்கு இதமா இருந்து இருக்கும்.. கூடவே மாப்பிள்ளையையும் பார்க்க வாய்ப்பு இருக்கு… மாப்பிள்ளையும் நம்ம பெண்ணை பார்த்தா… மத்தது மறந்து நம்ம பெண் கூட வாழும் ஆசை வரலாம்..

ஆனால் இப்போ அதுக்கும் வழி இல்லாது படிப்பு முடிஞ்சு வீட்டில் அவள் அறையிலேயே முடங்கி போய் இருக்கா… நீங்களும் எனக்கு என்ன வந்தது என்பது போல காலையில் போனா நையிட் வர்றிங்க… இப்படியே இருந்தா நம்ம பொண்ணு வாழ்க்கைக்கு வழி தான் என்ன..?” என்று கேட்ட தாமரையின் பொறுமை இத்தனை நாள் இருந்ததை விட்டு கணவனிடம் கோபமாக கேட்டார்..

விசுவநாதனுக்குமே அடுத்து என்ன செய்வது என்று தான் இருந்தது… தன் முன் சிக்கிய நூல் கண்டு.. உள்ளது… சிக்கலை எடுத்தால் தான் அந்த நூலை கொண்டு புடவை நெய்ய முடியும்..

ஆனால் அந்த சிக்கலான நூல் கண்டின் முனை கண்ணுக்கு தெரிந்தால் தானே.. அந்த சிக்கலை எடுக்க முயற்ச்சியாவது செய்ய முடியும்.. நுனியும் தெரியாது.. முடிவும் தெரியாது என்பது போலான நிலையில் அவருமே அடுத்து என்ன செய்வது என்பது போல் தான் குழம்பி போய் சுற்றி கொண்டு இருக்கிறார்..

இதில் குரு வேறு… தன்னை பார்க்க வருவது இல்லை.. போனிலுமே கூப்பிடவில்லை. சரி என்று தான் அழைத்தாலுமே, அழைப்பை ஏற்பவன்..

“என்ன..? ஏது..? “ என்பது போலான பேச்சுக்கள் மட்டும் தான்.. பின் ஒரு வேலை இருக்கு மாமா அப்புறம் கூப்பிடுறேன் என்று சொல்லி பேசியை வைத்து விடுகிறவன் பின் அவனாக அழைப்பதே இல்லை..

விசுவநாதனை பொறுத்த வரை மனைவி மகள் இல்லாது கூட அன்றைய நாள் கடத்தி விடுவார்.. ஆனால் மருமகனை ஒரு நாள் பார்க்காது போனால், அவருக்கு அன்று முழுவதுமே என்னவோ போல் தான் இருக்கும்..

முதலில் குருவுக்கு விசுவநாதன் தான் எல்லாமாக இருந்தார் என்றால், இப்போது விசுவநாதனுக்கு குரு தான் எல்லாம்.. தனனை பார்த்து அவன் வளர்ந்து இருந்தாலும், இப்போது எல்லாம் அவன் சொல்வதை தான் விசுவநாதன் கேட்கிறார்..

ஏன் என்றால் வயதின் காரணமா என்று தெரியவில்லை. இப்போது எல்லாம் விசுவநாதனுக்கு மலையாக தெரிவதை எல்லாம். குரு அதை மடுவாக மாற்றி விட்டு விடுகிறான்.

இதன் தொட்டு அவருக்குமே ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை என்றால் கூட குருவை அழைத்து விடுபவர்.. ஏன் சில சமயம் தன் பிரச்சனையை தான் சொல்லாமலேயே தெரிந்து தீர்த்து வைத்து விடும் குரு,,

தன் மகளின் வாழ்க்கை எத்தனை பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது… இத்தனை நேரம் அவன் மனது வைத்தால் அவன் தீர்த்து வைத்து இருந்து இருக்கலாமே… அது என்னவோ விசுவநாதனுக்கு மருமகன் முதல் மாதிரி தன்னிடம் பேசி விட்டால் போதும்.. இது எல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை என்பது போல ஒரு எண்ணம்..

சரி அவன் வந்து தன்னை பார்க்கவில்லை என்றால் தான் சென்று அவனை பார்க்கலாம் என்று நினைத்து மனைவியின் கோபத்திற்க்கு..

“நான் குருவிடம் இதை பத்தி பேசுறேன் .. நீ இதையே நினச்சி மனசை போட்டு குழப்பி கொள்ளாதே. போய் ஸ்ருதி பக்கத்தில் இரு… அவள் சாப்பிடலேன்னாலும்.. சாப்பிட வை. அது போல நீயுமே வேளா வேளைக்கு சாப்பிடு… “ என்று சொல்லி விட்டு சென்ற விசுவநாதன் சொன்னது போல குருவை பார்த்தார் தான்..

எப்போதும் தன்னை பார்த்ததுமே குருவிடம் அப்படி ஒரு ஆர்ப்பட்டம் இருக்கும்.. இன்னும் கேட்டால் தினம் தினம் தான் இருவரும் பார்த்து கொள்வது… அப்படி இருந்துமே.

“மாமா.” என்று அழைத்து கொண்டே தன்னிடம் பேசும் அந்த துள்ளல் பேச்சு பார்வை இன்று குருவிடம் குறைந்தது போல தன் விசுவநாதன் உணர்ந்தது..

அதுவும் தான் அவனை தேடி அவன் இடத்திற்க்கு தான் சென்றால், அணைப்பு இல்லாது மாப்பிள்ளையின் வர வேற்ப்பு இல்லாது இருக்காது.

இன்றோ. தன் முன் இருந்த கணினியில் இரவு விடுதியின் நடவடிக்கைகளை கேமிராவின் மூலம் பார்வை இட்டு கொண்டு இருந்தவன்..

விசுவநாதனை பார்த்ததுமே… “மாமா வாங்க வாங்க…” என்று சிரித்து கொண்டே தான் குரு மூர்த்தி வர வேற்றான்..

ஆனால் அவன் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு எழாது இருந்தவனின் இந்த குருவின் வர வேற்பில் இருக்கும் வித்தியாசத்தை விசுவநாதனால் நன்றாகவே உணர முடிந்தது…

ஆனாலுமே அதை காட்டி கொள்ளாது விசுவநாதன்.. “என்ன மாப்பிள்ளை ஆளையே பார்க்க முடியல…?” என்று கேட்டார்… இதுவே இது போலான பேச்சுக்களுமே இருவருக்கும் புதியது தான்.. உள்ளதை உள்ளப்படி பேசுவது தான் இருவருக்கும் பழக்கம்.. இந்த ஒளித்து மறைத்து பேசுவது எல்லாம் கிடையாது..

இன்னும் கேட்டால் விசுவநாதனுக்கு தன் மகள் ஸ்ருதியை விட குருவின் மீது ஒரு படி அதிகமாகவே தான் அன்பு வைத்து இருந்தார்.

இது போலானே பேச்சுக்கள் விசுவநாதனுக்கு பிடிக்கவே இல்லை.. ஆனாலுமே குருவை பார்த்து.

“ஏன் என்னை பார்க்க வரவில்லை…?” என்று கேட்க பயமாக இருந்தது.

ஆம் பயமாக தான் இருந்தது.. உண்மை தெரிந்ததில் இருந்து.. அதாவது அவனின் அம்மா அப்பா திருமணம் நடந்த விதம்… அதை தான் நடத்திய விதம்.. தெரிந்ததில் இருந்து குரு இது வரை நேரிடையாக..

“என்ன மாமா…?” என்று ஒரு வார்த்தை தன்னிடம் குரு கேட்கவில்லை .. ஆனால் மறை முகமாக..

தான் செய்த அந்த திருமணத்தை வைத்து கிண்டலாக பேசுகிறான்… அதில் ஒரு நக்கலுமே கலந்து இருக்கிறது தான்… விசுவநாதனுக்கு அது தான் என்னவோ போல் இருக்கிறது.

குரு மனதில் என்ன நினைக்கிறான்.. என்று வளர்த்த அவராலேயே கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு தான் அவனின் செயல்கள் இருக்கிறது.

இதோ காலையில் தான் விசுவநாதனுக்கு விசயம் தெரியும்.. ஸ்ருதி விபத்து செய்த அன்று அதை விசாரித்த காவல் அதிகாரி குருவிடம் பேசியது..

அந்த அதிகாரியிடம் தானே மகியுமே ஸ்ருதிக்கு எதிராக கேஸை பைல் செய்து உள்ளது… அந்த அதிகாரி குருவை இதோ இந்த பப்பில் தான் வந்து பார்த்து உள்ளான் பேசி உள்ளான்…

ஆனால் அது என்ன என்று இது வரை தன்னை அழைத்து சொல்லவில்லை.. காலையில் இருந்து விசுவநாதனுக்கு இது வேறு மண்டையில் போட்டு குழப்பி கொண்டு இருக்கிறது..

முன் விசுவநாதன் தான் குருவுக்கு பலம். ஆனால் இப்போது எல்லாம் தன் பலமே குரு என்ற போது தன் மகள் விசயத்தை தன்னிடம் பேசாதது விசுவநாதனுக்கு ஒரு மாதிரியாக தான் இருந்தது.

ஆனால் அதற்க்கு என்று விசுவநாதன் குருவின் மீது கோபம் எல்லாம் படவில்லை.. அவரால படவும் முடியாது.. தன் தங்கையின் மீது இருக்கும் பாசத்தை அப்படியே தன் தங்கையின் மகன் மீது அப்படியே அதை கடத்தி விட்டதால் கூட இருக்கலாம்..

ஆனால் இதையும் தகர்த்து எரிவது போல தான் ஸ்ருதி மீண்டுமே தற்கொலை எனும் ஆயுதத்தை தன் கையில் எடுத்து விசுவநாதன் குருவுக்கு இடைவெளியை ஏற்படுத்தியதோடு இல்லாது.. விசுவநாதன் மகியை கடத்தவும் காரணமாகி போய் விட்டது…






 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
ennathu, thirumbavum tharkolai muyarchiya? Athai ku thappatha marumagal. Poi serattum. Life long she will be black mailing like this. Useless girl. Viswanathan, nee Mahi mela Kai vechu Guru vai seendi vittutae. Ini nee paarka porathu un ethiri Guru vai.

Eagerly waiting for next epi
 
Last edited:
Active member
Joined
May 12, 2024
Messages
199
Ivan thirunthave illa… thirunthavum maattan… intha Shruthi again drama pannira 😡😡😡
Siddarth ah Shruthi kooda serthu vechidatheenga plz 🙏🏻🙏🏻🙏🏻
Sharadha romba pawam
 
Top