Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yennai kondadaa pirandhavan....24..2

  • Thread Author
அத்தியாயம்….24…2

அந்த காவல் அதிகாரி சிறிது கூட நினைத்து இருந்து இருக்க மாட்டார்.. தன் மீது இத்தனை பெரிய பழி வந்து விழும் என்று… இரவு வீடு வந்து தூங்கும் போது கூட ஒரு ஆணிடம் இப்படி பேசி விட்டோமே… அதை நினைத்து தான் அவர் அசிங்கம் பட்டது.. அதோடு எத்தனை எளிதாக தன் கண்ணில் மண் தூவி விட்டும் சென்று விட்டான்… எப்படி அத்தனை சீக்கிரத்தில் அத்தனை கேமிரா புட்டேஜையும் அழிக்க முடிந்தது… இப்படி எப்படி எத்தனை என்று நினைத்து தான் குடித்து விட்டு படுத்து உறங்கியது..

ஆனால் விடியலில். நேற்று இரவு நடந்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போலான அந்த செய்தியில் அதிர்ந்து போய் விட்டார்…

நேற்று ஏன் அத்தனை சீக்கிரம் புட்டேஜ் கவரேஜை அவர்கள் கைப்பற்றினார்கள் என்பது இப்போது தான் அந்த காவல் அதிகாரி உணர்ந்தார்..

அதோடு நேற்று தன்னை அத்தனை பேச விட்டு… கடைசியில் காவல் நிலையம் வந்த பின்.. வாய் திறந்தது என்று அனைத்துமே சேர்த்து வைத்து பார்த்த அந்த காவல் அதிகாரிக்கு புரிந்து விட்டது.. தான் பெரிய இடத்தில் கை வைத்து உள்ளோம் என்பதும்.. இதில் இருந்து தன்னை விடுவித்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான விசயம் இல்லை என்பதும்.. ஆனால் யாரை பகைத்து கொண்டோம் என்பது கூட புரியாது அவங்க காலில் கூட விழ முடியாது தன் வீட்டில் தலை மீது கை வைத்து அமர்ந்து கொண்டு இருந்த அந்த காவல் அதிகாரியின் கை பேசி விடாது அடித்து கொண்டு இருந்தது…

அவருக்கு மேல் இருக்கும் மேல் அதிகாரி தான் அழைப்பது.. இனி அடுத்து என்ன விசாரணை கமிஷன்.. தன் வாய் கொண்டே பேசிய லஞ்சப்பணத்தில் தான் வாங்கிய சொத்துக்கு வருமான வரி சோதனை இதை அனைத்தையும் தான்டி அந்த பெண் எங்கு என்று கேட்பார்களே… அதற்க்கு நான் என்ன என்று சொல்வது …பாவம் அதை நினைக்கும் போதே அவர் விழி பிதிங்கி போய் விட்டது…

அவர் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு தான் அவர் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது…

இப்போது தான் ஆள் ஆளுக்கு ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து விடுகிறார்களே… அங்கு எள் என்பதற்க்குள் இவர்கள் அதை செக்கில் ஆட்டி எண்ணையாக மக்களிடம் கொண்டு வந்து சேர்த்து விட… அதை பார்க்கும் மக்கள்.. எது கடலை எண்ணைய் என்று ஒருவன் சொன்னால், என்றால் இன்னொரருவனோ.. இல்லை இது சுத்தமான அக்மார்க் ஆமணக்கு என்பது போலான பேச்சில், இந்த விசயம் காட்டுத்தீ போல பரவி விட்டது…

அது போலான பெண் என்றாலும், அவளும் பெண் தானே…. இந்த சமூகத்தில் அவர்களும் தானே வாழ வேண்டும்… ஓட்டு மட்டும்…. குடும்ப பெண்கள் மட்டும் போட்டால் மட்டும் போதும் என்று எந்த ஒரு அரசியல் கட்சியாவது சொல்கிறதா.. ஓட்டு கிடைத்தால் போதும் என்று அவர்களுக்கும் தானே ஓட்டு உரிமை இருக்கிறது..

அப்போ சட்டம். அவர்களுக்கும் தானே பேச வேண்டும். என்று கோஷம் முழங்கி அங்கு அங்கு போராட்டம் நடத்தியதில் அந்த காவல் அதிகாரிக்கு இடை கால பதவி நீக்கம் செய்யப்பட்டு வருமான வரி சோதனை செய்யப்பட்டு… அரசியல் கட்சி ஓட்டு உரிமை என்று பேசியதில், தன் கட்சியை காப்பற்றிக் கொள்ள.. அந்த காவல் அதிகாரியை அரெஸ்ட்டும் செய்தது…

இது அனைத்திற்க்கும் காரணமான குரு மூர்த்தி அவன் தனித்து வாங்கிய பங்களாவில் அவனின் ஈஸ்வரியோடு இருந்தான். இருந்தான் என்றால் தனித்து எல்லாம் இல்லை.. தன் தந்தை கிருஷ்ண மூர்த்தி, மகியின் அத்தை சாரதா.. மாமா ராம் சந்திரன். சித்தார்த் அத்தான் இவர்களோடு தான் இருந்தான்.

ஆனாலுமே அவன் மனது ஏகாந்தமாக இருந்தது.. இன்னும் கேட்டால் அவனின் ஈஸ்வரியோடு தனித்து அறையில் எல்லாம் இல்லை…

அவன் மாடி அறையில் இருக்க.. கீழ் அறையில் அவளின் அத்தையோடு தான் இருக்கிறாள்.. இருந்துமே அவள் தன் மனைவியாக இந்த வீட்டில் இருப்பதே.. கூட சேர்ந்து வாழும் நிறைவு தந்தது அவனுக்கு…

சொன்னார்கள்… ஈஸ்வரியின் அத்தை சாரதா அத்தையே சொன்னார்கள் மகியிடம்.

“நீ தம்பி ரூமில் இருந்து கொள்..” என்று அவரை மட்டும் அல்லாது அனைவரையும் அப்படி சொல்ல வைத்தது பத்து நாட்களுக்கு முன்பு குரு மூர்த்தியை அவர்கள் பார்த்த அந்த கோலம்..

வயதான ஒரு ஆண் மகன் கூட இப்படியான ஒரு கோலத்தில் மற்றவர்கள் முன் நிற்க அசிங்கப்பட்டு போய் விடுவான்… ஏன் சின்ன பையன் கூட இப்படி எல்லாம் இப்போது வேடம் கூட போடுவது கிடையாது…

ஆனால் குரு மூர்த்தி அன்று அவர்கள் வீட்டு பெண்ணுக்காக அத்தனை பேர் மத்தியில் அப்படியான ஒரு கோலத்தில் நின்றதோடு அதே கோலத்தில் மீடியா முன்பும் நின்றது…

அதோடு அதை வைத்தே அந்த காவல் அதிகாரியை மாட்டி வைத்தது என்று அதை எல்லாம் பார்த்த பின்.. சாரதாவுக்கு முன் என்ன செய்வது என்று இருந்த அந்த தயக்கம் முற்றிலுமாக மாறி போய் விட்டது.

சாரதாவுக்காகவது தாலி கட்டியதால் வாழ்ந்து தான் ஆக வேண்டுமா.? என்று ஒரு பக்கம் நினைத்தாலும் இன்னொரு பக்கம்… இனி மகிக்கு தான் வேறு ஒருவனை பார்த்து திருமணம் செய்து வைத்தாலுமே,, இதை சொல்லாது திருமணம் செய்து வைப்பது நல்லதா…? பொய்யில் ஆரம்பிக்கும் வாழ்க்கை பொய்த்து தானே போய் விடும்.. அதோடு மகியே ஒத்து கொள்ள மாட்டாளே… உண்மை சொல்லி தான் திருமணம் செய்ய வேண்டும் என்று தானே சொல்லுவாள்.. அதோடு தன் கணவனுமே அப்படி தான் சொல்வார் என்பது சாரதாவுக்கு தெரியும்..

அப்படி இருக்க மகியின் திருமணம் எளிதில் முடியுமா…? அப்படி அந்த சமயம் இதை பெரியதாக எடுத்து கொள்ளாது திருமணம் செய்து கொண்டு விட்டு,.. பின் இதை சொல்லி மகியின் மனதை வருந்தும் படி ஏதாவது பேசினால், அது தான் ஒரு பழ மொழி இருக்கிறதே.. ஊசி இடம் கொடுக்காது நூல் நுழையாது என்று.. மகியின் பக்கம் ஒரு சமிஞ்சை கூட இல்லாமலேயா… அவன் இவள் கழுத்தில் தாலி கட்டினான்.. என்று ஒரு வார்த்தை மகியின் கணவன் சொல்லி விட்டால், பின் அவளின் வாழ்க்கை நரகமாக தானே மாறி விடும்…

சாரதாவுக்கு இத்தனை யோசனைகள் தான் அவர் மனதில் ஒடிக் கொன்டு இருந்தது… சாரதா ஒருவனை விரும்பி.. பின் கடத்தி கொண்டு போய் பின் ராம் சந்திரனை திருமணம் செய்து கொண்ட போது. சாரதாவே நிறைய பிரச்சனைகளை சந்தித்தார்..

ஆனால் அந்த பிரச்சனைகள் எல்லாம் வெளியில் இருந்து வந்தது… ராம் சந்திரன் சாரதாவின் மனது புரிந்து அவ்வளவு அனுசரணையாக இருந்ததினால் தான் சாரதா அதை எல்லாம் கடந்து ஒரு வாழ்க்கையை வாழ முடிந்தது..

இதே கணவனும் அது போல இருந்து இருந்தால், கண்டிப்பாக சாரதா அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து இருக்கவே முடியாது..

மகிக்கும் தன் கணவன் போல கணவன் கிடைத்து விட்டால் பரவாயில்லை.. அப்படி இல்லாது போனால், சாரதாவினாக் அதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை..

அதனால் தான் தாலியை கழட்டாதே என்று சொன்னது.. அதற்க்கு என்று குரு மூர்த்தியோடு வாழ் என்றும் சொல்ல முடியாதும் தான் இருந்தார்.

காரணம் தன் அண்ணன் மரணத்தை அப்படியாக மாற்றியதில் குரு மூர்த்தியின் பங்கு தான் அதிகம் என்று தெரிந்த பின்… அப்படி சொல்ல சாரதாவினால் முடியவில்லை…

காய்ந்த கடாய்க்கு பயந்து கொதிக்கும் எண்ணை சட்டியில் தள்ளியது போல ஆகி விட கூடாது அல்லவா… மகியின் கழுத்தில் தாலி கட்டிய பின்.. அனைத்தும் நேர்மையாக செய்தாலுமே, குரு மூர்த்தி விசுவநாதனின் வளர்ப்பு என்றதில் சாரதா இன்னுமே தயங்கி போனவருக்கு..

என்ன தான் வளர்ப்பு விசுவநாதனாக இருந்தாலும். ரத்தம் நான் கிருஷ்ண மூர்த்தியின் ரத்தம் என்பதை அன்று மகியை காப்பற்றும் பொருட்டு… அவன் நின்ற கோலம் சாரதாவுக்கு உணர்த்தி விட்டது..

காரில் ஏறிய போது கூட தன்னிடம் தான் முதலில் பேசியது..

“கவலை படாதிங்க உங்க மருமகள் சேப்பா தான் இருக்கா.” தன் உடல் நிலையை கருத்திக் கொண்டு தன்னிடம் சொன்ன பின் தான் வசந்திடம் குரு மூர்த்தியின் மற்றோரு வீடான இந்த பங்களாவுக்கு மகியை அழைத்து வர சொன்னது..

அதுவும் அந்த சமயம் வசந்தோடு மகி தனியாக வந்தால், வழியிலும் ஏதாவது பிரச்சனை வர போகிறது என்று முன் ஏற்பாடாக வசந்தின் தங்கைகளையும் அம்மாவோடும் வரவழைக்க தன் காரையும் அதில் ஓட்டுனரையும் அனுப்பி கூட்டிக் கொண்டு வந்தது என்று குரு மூர்த்தி செய்யும் அனைத்துமே மகியையே முதன்மையாக கொண்டு இருக்க..

சாரதாவுக்கு இவனை விடுத்து தன் மருமகளை மற்றோருவன் கையில் கொடுப்பது என்பது.. அது தான் தன் மருமகள் மகிக்கு செய்யும் பெரிய அநியாயம் ஆகும்..

இருந்தும் தான் எடுத்த முடிவை உடனே குரு மூர்த்தியிடம் சொல்லவில்லை. ஏன் என்றால் சாரதாவுக்கு தெரியும்.. மகிக்கு குரு மூர்த்தியோடு தான் வாழ்க்கை என்று ஆன பின் கிருஷ்ண மூர்த்தியுடனான உறவு… தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்..

கணவம் மட்டுமே இருந்தால் கூட சாரதாவுக்கு ஒன்றும் கிடையாது.. ஆனால் மகன் சித்தார்த் வளர்ந்த மகன். அதோடு அவனின் வாழ்க்கை ஸ்ருதியுடன் இல்லை என்று முடிவு ஆகிய பின்.. அதுவும் குரு மூர்த்தி தன் மருமகளை விரும்பி தான் தாலி கட்டி இருந்தாலுமே, அது மகியின் விருப்பம் கேளாது கட்டப்பட்ட தாலி தான்.

அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து மகியை குரு மூர்த்தியோடு வாழ வைக்கும் போது சித்தார்த் ஸ்ருதியின் கழுத்தில் தாலி கட்டியது அவனின் விருப்பத்தோடு தானே.. அந்த திருமணம் இருவரின் சம்மதத்தோடு தானே அந்த திருமணம் நடந்து முடிந்தது.

விசுவநாதன் பொருட்டு தானே அந்த திருமணத்தை சாரதா முற்றிலுமாக தவிர்த்தது.. அப்படி இருக்க விசுவநாதனின் மருமகன் குரு மூர்த்தியை ஏற்று கொண்டால் சித்தார்த் தவறாக நினைத்து விட கூடாதே என்றும் சாரதா நினைத்தார்.

என்ன தான் மகன் தனக்கு தெரியாது ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டாலுமே, முதலில் மகன் மீது இருந்த கோபம் சாரதாவுக்கு இப்போது கொஞ்சம் குறைந்து தான் இருக்கிறது..

காரணம் மகனின் மனதை ஒரு தாயாக அவர் உணர்ந்ததினால், ஸ்ருதியை விலக்கி வைத்தாலுமே மகன் காதல் கொண்ட அந்த மனது ஸ்ருதியின் இந்த நிலையை பார்த்து வருந்துக்கிறது என்பதை அவர் உணர்ந்து தான் இருந்தார்..

அதுவும் தன் பொருட்டே ஸ்ருதி பைத்தியமாக மாறி போய் விட்டாளா..? அதில் குற்றவுணர்ச்சி கூட. சாரதாவுக்கோ… மகியை திருமணம் செய்து கொண்டு ஒரு நல்ல வாழ்க்கையை வாழும் இந்த வாழ்க்கையை மகனே அழித்து கொண்டு விட்டானே என்றதில் வருத்தம்.

இப்படி சித்தார்த் பற்றியும் சாரதா ஒரு தாயாக யோசித்து கொண்டு இருக்க. மகனிடமும் குரு மூர்த்தியோடு மகி வாழ்ந்தால் தான் என்ன என்று கேட்ட போது சித்தார்த் உடனே..

“கண்டிப்பா நம்ம மகியை குருவை தவிர வேறு யாருமே இது போல நல்ல மாதிரியாக பார்த்து கொள்ள முடியாது என்று கூறி விட்டான்…

பின் என்ன அவனுமே மகி அந்த இரவு நேரத்தில் கடத்தியதில், அடுத்து என்ன என்று தெரியாது முழித்து கொண்டு இருந்தவனால் ஒன்றும் செய்ய முடியாது… இருந்த சமயம் குரு மூர்த்தி சித்தார்த்திடம்.

அத்தனை நம்பிக்கை அளித்து.. “ நான் இருக்கேன்… கண்டிப்பாக என் ஈஸ்வரிக்கு ஒன்றும் ஆக விட மாட்டேன்…” என்று சொன்னதை சொன்னப்படியாக செய்து முடித்தவனிடமே மகி சேரட்டும் என்பது தான் அவனின் விருப்பம்..

அனைவருக்கும் விருப்பம்.. இருந்தால் போதுமா.. மகிக்கு.. விருப்பம் இருக்க வேண்டாமா…? விருப்பம் தான்.. மகேஷ்வரிக்கும் குரு மூர்த்தியை தன் கணவனாக ஏற்று கொள்வதில் விருப்பம். தான்…

சினிமாவில் தான் ஆபத்தான சமயத்தில் ஒரு ஆண் உதவி செய்தால் உடனே அந்த பெண்ணுக்கு காதல் வந்து விடும்.. ஏன் நிஜத்தில் அது நிகழ கூடாதா..? அதுவும் அன்று மகி மாட்ட இருந்த பிரச்சனை.. அதில் மட்டும் அவள் சிக்கி கொண்டு இருந்தால், கண்டிப்பாக அதில் இருந்து அவள் வெளியில் வந்து இருப்பாளா…

அன்று பெண் வேடத்தில் இருக்கும் குரு மூர்த்தியை தன்னை என்று நினைத்து மீடியா அப்படி அவதூறாக பரப்பிய விசயம்.

அதுவும் வாகனத்தில் கூட குரு மூர்த்தியை பெண் என்று நினைத்து பேசிய அந்த பேச்சுக்களை தன்னிடம் பேசி இருந்தால், நான் அதை தாங்கி கொண்டு இருந்து இருப்பேனா. இப்படி நினைத்தவளுக்கு. அதை தான் எதிர் கொள்ளாது தன்னை காத்த குரு மூர்த்தி தான் அவளின் கண் முன் வந்து நின்றான்..

அதுவும் குரு மூர்த்தி நின்றது தன் எதிரிலேயே அவன் தன் உடை கலைந்து.. முற்றிலுமாக இல்லை என்றாலுமே, ஆண்மையின் இலக்கணமாக அன்று தன் முன் நின்ற அந்த கோலமும், அதை தன் கண் எதிரிலேயே… பெண்ணாக மாற செய்த செயல்களையும் பார்க்கும் போது இப்போது நினைத்தாலுமே மகியின் கண்கள் கலங்கி தான் போய் விடுகிறது…

அதுவும் அங்கு இருந்த அந்த ஷேவ் செய்யும் அந்த மிஷினை கையில் எடுக்கும் போது குரு மூர்த்தியின் முகத்தில் தெரிந்த அந்த ஒவ்வாமை.. அதை அப்போது மகி நினைத்து கொண்டது.. ஒரு சில ஆண்களுக்கு மீசை தான் மிகவும் பிடிக்கும் என்பார்கள்.. அதனால் அந்த பிடித்தம் இன்மையினால் தான் குரு மூர்த்தியின் முகம் அப்படி ஆனது என்று நினைத்தவளுக்கு, இப்போது யோசித்து பார்த்த போது தான் மகிக்கு புரிந்தது.. இல்லை… அது அதனால் கிடையாது…

ஒரு ஆண் மகனுக்கு தெரிந்து இருக்கும்.. அது போலான இடத்தில் அந்த ஷேவ் மிஷின் எதற்க்கு பயன் பட்டு இருந்து இருக்கும் என்று.

அதை கொண்டு.. அதுவும் குரு மூர்த்தியை போன்ற. அந்தஸ்த்தில் உயர்ந்தவன். அவன் உடையின் நேர்த்தி அப்படி இருப்பவன்.. அதை அவன் உபயோக்கிறான் என்றால், அது யாருக்காக தனக்காக தானே… இப்படி அந்த நாளில் நடந்தவைகளையே தான் குரு மூர்த்தியின் வீட்டில் இருக்கும் இந்த பத்து நாளும் மகி மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்து கொண்டு இருக்கிறாள்…

அதை ஒரு சாதாரணமாக அதை அவளாள் கடந்து செல்ல முடியவில்லை.. அதோடு சாரதா அத்தை இங்கு வந்த மறுநாளே அனைவரும் முன் தான். அதுவும் குரு மூர்த்தி இருக்கும் சமயம் தான். அதை சொன்னது..

“நீ குரு ரூமில் தங்கு மகி குட்டி… நையிட் நான் சில சமயம் தூங்க நேரம் பிடிக்கும்.. அப்போ நான் லைட் போட்டுட்டு ஏதாவது படித்து கொண்டு இருப்பேன்…” என்று சொன்ன போது மகி குரு மூர்த்தியின் முகத்தை தான் பார்த்தாள்..

அவளுக்கு விருப்பம் தான். குரு மூர்த்தியோடு அவனோடு ஒன்றாக தங்குவதில் அவளுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை.. அதற்க்கு என்று விருப்பம் என்றால் அவனோடு இப்போதே வாழ ஆரம்பித்து விட வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை.

ஆனால் அது போல வாழ முதல் படியாக இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளலாம் என்ற எண்ணம்..

ஆனால் தான் அவனை பார்க்கும் போது அவனுமே தன்னை பார்த்தவன்.. பின் என்ன நினைத்தானோ தன் அத்தையிடம்…

“ ஈஸ்வரிக்கு தூங்க டிஸ்ட்டப்பா இருந்தா கீழேவே நிறைய ரூம் இருக்கு ம்மா… ஈஸ்வரி பார்க்கட்டும்.. அவளுக்கு பிடித்த ரூமில் தங்கட்டும்..” என்று சொன்னவனிடம் சாரதா அத்தை என்ன என்று சொல்லுவார்..

அவர் என்ன தனக்கு டிஸ்ட்டப்பா இருக்கு என்றால் என்னை குரு ரூமில் தங்க சொன்னது.. இதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு குரு மூர்த்தி ஒன்றும் மக்கு மந்நாந்தையும் கிடையாது என்பதும் அவளுக்கு புரியும்..

புரிந்தும் நாசுக்காக இப்படி சொல்லி இருக்கிறான் என்றால், கண்டிப்பாக வேறு காரணம் ஏதாவது இருக்கும் என்று தான் மகி நினைத்தது. ஆனால் கண்டிப்பாக அந்த வேறு காரணங்களில் அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று தவிர்க்கிறான் என்று கிடையாது.. அது அவளுக்கு அவ்வளவு நிச்சயம்.. இப்படி சொன்னது கூட தனக்காக தான் இருக்கும்.. அது என்ன என்று தெரியாத போதும் அதுவுமே அவளுக்கு நிச்சயம் தான்.

இதை எல்லாம் நினைத்து கொண்டு அலை மோதும் அந்த கடலை பார்த்து கொண்டே இருந்தவளின் கூந்தல் அந்த காற்றில் கலைந்து விளையாடியதில், அவளின் தலை மயிர் அவளின் கன்னம் தொட்டும்.. உதட்டு தொட்டும் விளையாடி சென்றது..

ஒரு முறை இரு முறை அதை எடுத்து எடுத்து விட்டவள்.. தன்னை எதுவும் யோசிக்க விடாது அது தடை செய்ததில் வெறுப்பாகி..

“சீ இது வேற…” என்று எரிச்சலாக சொல்லிக் கொண்டே எடுத்து விட முயல. அதற்க்கு முன் ஒரு வலிமையாக கை ஒன்று அந்த முடியை எடுத்து அவளின் கூந்தலில் விட்டதோடு மீண்டுமே அது போல அவளின் முகத்தில் மோதாத வாறு அவன் கையில் இருந்த ஹார் பின் கொண்டு நான்கு பக்கமும் குத்தி விட்டவனின் செயலையே மகி விழி விரித்து பார்த்து கொண்டு இருந்தாள்…

அத்தனை வலிமையான கைகள் எத்தனை மென்மையாக தன் கூந்தலை கைய்யாண்டு கொண்டு இருக்கிறது என்பதை நினைத்து பார்த்து கொண்டு இருந்தவளிடம் குரு மூர்த்தி…

“நான் இங்கு உன் கூட உன் பக்கத்தில் நிற்கட்டுமா…? உனக்கு ஒன்னும் டிஸ்ட்டப் இல்லையே…?” என்று அனுமதி கேட்டவனிடம்..

“ம்.” என்று தலையாட்டியவள். இத்தனை நேரம் கடல் அலைகளை பார்த்து கொண்டு இருந்த மகியின் கண்கள் இப்போது குரு மூர்த்தியின் முகத்தையே பார்வை இட்டு கொண்டு இருந்தது..

கடல் அலைகளை பார்த்து கொண்டு இருந்த போதாவது மகியின் கண்கள் தான் அந்த அலை கடல் மீது இருந்ததே ஒழிய.. அவளின் நினைவுகள் மொத்தமு குரு மூர்த்தியிடம் இருந்ததால், அவளின் அந்த பார்வையில் அத்தனை வலிமையும் இல்லை. அத்தனை ஆழமும் இல்லை..

ஆனால் இப்போது குரு மூர்த்தியின் முகத்தை பார்த்து கொண்டு இருந்த மகியின் கண்களில் இப்போது அது இரண்டுமே இருந்தது.

குரு மூர்த்தியோ அவனின் ஈஸ்வரியிடம் அனுமதி கேட்ட பின்.. அவன் கண்கள் அலைகடம் பக்கம் சென்று விட்டது தான். ஆனால் அவனின் மனம் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த அவனின் ஈஸ்வரியிடம் இருந்ததால், அவள் தன்னை வைத்த கண் விடாது பார்த்து கொண்டு இருப்பதை அவனால் நன்கு உணர முடிந்தது…

அதில் அவனின் முகம் ஒரு மாதிரி வெட்கமாக போய் விட… என்ன நினைத்தானோ அவனுமே அவனின் ஈஸ்வரியின் பக்கம் திரும்பி நின்று கொண்டு அவளை பார்த்தான்..

அப்போதுமே மகி தன் பார்வையை மாற்றது அப்படியே தான் குரு மூர்த்தியை பார்த்து கொண்டு இருந்தாள்.. இப்போது குரு மூர்த்தி தான் மீண்டுமே தன் பார்வையை அலைகடல் பக்கம் பார்த்தவன் பின் திரும்பி அவனின் கெஸ்ட் அவுசின் முகப்பு.. பின் தன் அறையில் பால் கனி என்று மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான்..

அப்போது கூட மகி தன் பார்வையை மாற்றுவதாக காணும்.. ஒரு நிலைக்கு மேல் முடியாது குரு மூர்த்தி தான் அவனின் ஈஸ்வரியிடம்..

“ஓய். என்ன இது இப்படி பார்க்குற…?” என்று கேட்டு விட்டான்.

“ஏன் நான் உங்களை பார்க்க கூடாதா..?” இந்த கேள்வி கூட மகேஷ்வரி அவனை பார்த்து கொண்டு தான் கேட்டாள்..

இதற்க்கு குரு மூர்த்தி என்ன சொல்வான்… உண்மையை சொல்ல போனால். அவன். “ நீ பார்க்க தானே நான் …” என்று தான் சொல்லி இருக்க வேண்டும்.. ஆனால் சொல்லவில்லை. அது மட்டுமா சொல்லவில்லை.. எதுவுமே சொல்லாது இப்போது அவனுமே அவனின் ஈஸ்வரியின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவனிடம்.

அவனின் ஈஸ்வரி மீண்டுமே… “ நான் உங்களை பார்க்க கூடாதா…?” என்று கேட்டவளிடம் இப்போது குரு மூர்த்தி…

“அப்போ நானுமே பார்ப்பேன்..” என்று விட்டான்..

மகி குரு மூர்த்தியை போல தயங்க எல்லாம் இல்லை… “ பாருங்க உங்களை யாரு வேண்டாம் என்று சொன்னது..” என்று சொல்லி விட்டாள்..

குரு மூர்த்திக்கு தொடக்கம் தான் பிரச்சனை போல… அதனால்… “ உங்களை யாரு வேண்டாம் என்ற இந்த பேச்சு பார்க்கிறதில் மட்டும் கிடையாது… எல்லாவற்றிலும் இருக்க வேண்டும்..” என்றவனின் இந்த பேச்சு மகிக்கு புரியவில்லை போல.

அது அவளின் முகத்தில் தெரிய. குரு மூர்த்தி இந்த முறை பேச்சாக மட்டும் சொல்லாது செயல் முறை விளக்கமாகவே செய்து காட்டி இருந்தான்.. அவளின் இதழில்.. இதழ் முத்தம் கூட குரு மூர்த்திக்கு ஆரமத்தில் தான் கொஞ்சம் தயங்கியது… பின் அவன் அதில் ஆழ்ந்து போகும் அளவுக்கு ஆழ்ந்து விட்டான்…
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
246
Aaha… Sharadha amma ku Shruthi mele soft corner ah???
Appo Sidhu kooda serhu vechiduveengala 🙄🙄
 
Top