Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yennai kondadada pirandhavan....13...1

  • Thread Author
அத்தியாயம்….13…1

அனைத்துமே நல்ல முறையில் செல்வது போல் தான் வெளிப்பார்வைக்கு தெரிந்தது.. ஆனால் எதுவுமே சரியாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

ஸ்ருதி சித்தார்த் திருமணம் முடிந்தது… அது திருமணம் அளவில் மட்டும் தான் நின்று விட்டது.. அந்த திருமணத்தை முறைப்படி பதிவு கூட செய்யவில்லை…

அதோடு ஸ்ருதிக்கு திருமணம் முடிந்து விட்டது என்று முதலில் கழுத்தில் தடித்த அந்த மஞ்சள் கயிறாவது அடையாளமாக இருந்தது… ஆனால் மூன்றாம் மாதம் தாலி கயிற்றை பிரித்து கோர்க்க வேண்டும்…

ஆள் ஆளுக்கு அப்படியே இருக்க தாமரை தான் ஒரு கோயிலில் வைத்து தாலியை ஒரு மெல்லிய ஜெயினில் கோர்த்து போட்டு விட்டது.. அதில் ஸ்ருதி கல்யாணம் ஆனதற்க்கு உண்டான எந்த ஒரு அடையாளமும் தெரியாது தான் ஸ்ருதி தினமும் கல்லூரிக்கு சென்று வந்து கொண்டு இருக்கிறாள்.

மகள் கல்லூரி விட்டு வரும் போது எல்லாம் தாமரை ஒரு எதிர் பார்ப்போடு தான் தன் மகளை பார்ப்பார்.. ஒரு சில முறை…

“மாப்பிள்ளை உன் கிட்ட பேசினாரா ஸ்ருதி..?” என்று கேட்கும் போது.

“ம்மா நீங்க வேற போங்கம்மா…” என்ற மகளின் இந்த பேச்சே சொல்லி விடும்.. மாப்பிள்ளை ஸ்ருதியிடம் பேசவில்லை என்பது..

ஆம் ஸ்ருதி கல்லூரிக்கு செல்கிறாள் தான். சித்தார்த் எப்போதும் போல அதே கல்லூரியில் தான் வேலை பார்க்கிறான்.. முன்னாவது பாடம் நடத்திய பின் மற்றவர்களை விட ஸ்ருதியிடம் கொஞ்சம் பார்வை அதிக நேரம் நிலைக்கும்.. ஆனால் இப்போது முற்றிலும் தகர்ப்பது போலான நிலையில் தான் சித்தார்த்தின் நடவடிக்கை இருந்தது..

மகியிடம் சித்தார்த் பேச முயல.. மகி சித்தார்த்தை தன் பார்வையினாலேயே தூரம் நிறுத்தி வைத்து விட்டாள்.. ஸ்ருதியிடம் சொல்லவே தேவையில்லை…

முன் தன் முன் வதனி ஸ்ருதி இவர்கள் பேசிய பேச்சின் அர்த்தம் முன் தெரியாதது எல்லாம் இப்போது தெரிந்தது…

சித்தார்த் முன் ஸ்ருதியிடம் பேசாததிற்க்கு காரணம் தன் அன்னையின் உடல் நிலையும், அவனுக்குள் இருந்த குற்றவுணர்வு மட்டும் தான்..

ஆனால் இப்போது தன் தந்தை இந்த கல்லூரியில் இருந்து ஒய்வு பெற்றதே.. அவனால் நம்ப முடியவில்லை… ஒரு நாள் செட்டில் மெண்ட் பணம் வாங்க ராம் சந்திரன் வந்த போது சித்தார்த்..

“ப்பா ப்ளீஸ்ப்பா.. ப்ளீஸ்ப்பா உங்களையும் அம்மாவையும் பார்க்காமல் என்னால இருக்க முடியலேப்பா ப்ளீஸ்ப்பா.. ப்ளீஸ்ப்பா மகிக்கு எல்லா விதத்திலும் என்னை விட பெட்டரான மாப்பிள்ளையை நான் கொண்டு வந்து அவளின் கல்யாணத்தை நடத்தி முடிக்கிறேன் ப்பா…

அப்போவாவது அம்மாக்கும் உங்களுக்கும் என் மீது இருக்கும் கோபம் குறையுமா ப்பா…?” என்று கேட்டவனிடம்..

ராம் சந்திரன் மகனின் பேச்சில் சிரித்து விட்டார்… “உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாது போனதற்க்கும் உன்னை வீட்டுக்கு கூப்பிடாததிற்க்கும் உன் காதலும் இந்த கல்யாணம் மட்டும் தான் என்று நீ நினைக்கிறியா.?” என்று கேட்ட தந்தையையே பார்த்து கொண்டு இருந்த சித்தார்த்….

“நீ கல்யாணம் செய்த வீட்டு பெண்… அந்த பெண் அப்பா செய்யும் தொழிலை வைத்து இதை நான் பேசல.. அந்த ஆளு உங்க அம்மாவுக்கு செய்தது… வேண்டாம் சித்தார்த்… ஒரு அப்பாவா இதை என்னால சொல்ல முடியல.ஆனா இதுல பாதிக்கப்பட்டது சாரதா மட்டும் இல்ல கிட்டூவுமே தான்.. அப்படி மத்த பெண் காதலை தட்டி பரிச்ச அந்த பெண்ணாவது கிருஷ்ண மூர்த்தி கூட வாழ்ந்துதா…

கேள்வி பட்டேன்.. நீ கல்யாணம் செய்த பெண் தற்கொலைக்கு முயன்றா.. நீ உடனே கல்யாணம் செய்து கொண்ட என்று.. இந்த டெக்னீக்கல் அந்த குடும்பதுக்கு புதுசு இல்ல சித்தார்த்.. ரொம்ப ரொம்ப பழைய டெக்னீக்கல்…

ஆ இன்னொன்னு நீ அந்த பெண் கூட இல்ல என்று கேள்விப்பட்டேன்… பார்த்துப்பா அன்னைக்கு அந்த வீட்டு பெண்ணுக்கு கல்யாணம் நடக்க அதுக்கு தடையா இருக்க இன்னொரு வீட்டு பெண்ணை தூக்குனவங்க..

இன்னைக்கு அவங்க வீட்டு பெண் வாழ்க்கைக்காக மகியை தூக்கிட போறாங்க. ஆனா அன்னைக்கு மாதிரி நானும் கிட்டுவும் சும்மா இருக்க மாட்டோம்..” என்று சொல்லி விட்டு ராம் சந்திரன் சென்று விட்டார்.

ஆனால் இதை அனைத்தும் கேட்ட சித்தார்த் யார் காதலை யார் பரித்து கொண்டது.. யாரை தூக்கினது… லேசாக ஒரு சந்தேகம்.. தன் அம்மா.. எது யோசித்தாலுமே, அதில் தன் அம்மா. கூடவே குருமூர்த்தியின் தந்தை கிருஷ்ண மூர்த்தி இருவர் மட்டுமே வர.

ஸ்ருதியை பார்க்கவே பயந்தான்.. தான் பெரிய தவறு செய்து விட்டோமோ.. என்று தான் நினைத்தது போல் இருந்தால், இனி நான் என்ன செய்ய வேண்டும்…? என்று அவன் அவனாக இல்லாது போனதில்..

இதற்க்கு மேல் தாளாது என்பது போல் தான் ஒரு நாள் குருமூர்த்தியை பேசியில் அழைத்தவன்..

“எங்கு இருக்கிங்க ப்ரோ…?” என்று கேட்டவனிடம் … குருமூர்த்தி.. “ வீட்டில் தான் இருக்கேன் சித்து..” என்ற பதிலில்..

“உங்க அப்பா..?” என்று கேட்டவனிடம் தன் முன் தன்னை கோபமாக பார்த்து அமர்ந்திருந்த தன் தந்தை கிருஷ்ண மூர்த்தியை பார்த்த வாறு…

“அவருமே வீட்டில் தான் இருக்கார் சித்தார்த்.. வாங்க நிங்களும் கேளுங்க… எனக்கு சொல்லத உண்மையை உனக்காவாது சொல்றாரா என்று பார்க்கலாம்…” என்ற பதிலில் சித்தார்த் டக் என்று பேசியை வைத்து விட்டான்..

இங்கு குருமூர்த்தியும் பேசியை வைத்தவன்.. “என்னை போல தான் அவனுமே மண்டை காய்ந்து போய் இருக்கான் போல… என்ன தான் பா நடக்குது…?” என்று கேட்டவன்..

“தப்பு தப்பு என்ன தான் பா நடந்தது…?”

இதையே தான் கடந்த ஒரு மணி நேரமாக குரு மூர்த்தி தன் தந்தையிடம் மாற்றி மாற்றி கேட்டு கொண்டு இருக்கிறான்..

சித்தார்த்துக்கும், ஸ்ருதிக்கும் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் முடிந்து விட்டது.. ஸ்ருதி இங்கு தான் இருக்கிறாள்.. அது கூட பரவாயில்லை.. ஆனால் சித்தார்த்.. தாலி கட்டிய உடன் மருத்துவமனைக்கு சென்றது தான்..

அதற்க்கு பின் இங்கு வரவில்லை. அது கூட பரவாயில்லை ஸ்ருதியிடம் பேச கூட மாட்டேங்குறான்.. காலையில் தன்னிடம் அப்படி ஒரு அழுகை…

“எனக்கு புரியல அத்தான்.. சித்து ஏன் இப்படி நடந்துக்குறார் என்று.. இந்த அப்பாவும் எதிலேயும் தலையிட மாட்டேங்குறார்…” என்ற இந்த வார்த்தை தான் குருமூர்த்தியை மிகவும் யோசிக்க வைத்தது…

தன் மாமா தன் மகளின் வாழ்க்கை பற்றி கூட கவலை படாது மெத்தனமாக இருக்கிறார் என்றால், நிச்சயம் ஏதோ ஒரு பெரிய விசயம்… நடந்து இருக்கிறது என்று குருமூர்த்தி நினைத்தது சரி தான் என்பது போல..

குரு மூர்த்தி அத்தனை முறை கேட்டும் சொல்லாத கிருஷ்ண மூர்த்தி… சித்தார்த் வந்து… கேட்டதுமே சொல்லி விட்டார் . அனைத்துமே சொல்லி விட்டார்.

அதை சித்தார்த் கிருஷ்ண மூர்த்தியோடு, தன் அறையில் பால் கனியில் நின்று கொண்டு.. எங்கோ இலக்கு இன்றி பார்த்து கொண்டு இருந்த ஸ்ருதி சித்தார்த் தன் அத்தான் வீட்டிற்க்குள் நுழைவதை பார்த்ததுமே, அவளுமே ஒடி வர.. அவள் காதிலுமே… கிருஷ்ண மூர்த்தி சொன்ன அவர் காதல் கதை அனைத்துமே கேட்டு விட்டாள்..

ஆம் அது ஒரு காதல் கதை தான்… கிருஷ்ண மூர்த்தி ராம் சந்திரன்.. சிங்கப்பெருமாள் அனைவரும் காஞ்சிப்புரம் தான்டி இருக்கும் பள்ளியில் தான் படித்தது..

என்ன ஒன்று சிங்கப்பெருமாள் இவர்கள் இரண்டு பேரை விட இரண்டு வயது சிறியவன்.. அதனால் இவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, பெருமாள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான்..

அந்த பள்ளியின் தலமை ஆசிரியராக இருந்தவர் தன் சிங்கப்பெருமாள் சாரதாவின் தந்தை கலியப்பெருமாள்… மிகவுமே நல்லவர்… படிக்கும் பிள்ளைகள் என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்கும்…

அதுவும் ஏழ்மை நிலையில் இருந்து படிக்க முடியாத பிள்ளைகளுக்கு அவர் அத்தனை உதவி செய்து படிக்க வைப்பார்.. ஏழை மாணவர்களுக்கு படிக்க வைக்கும் அளவுக்கு எல்லாம் அவர் பணக்காரர் எல்லாம் கிடையாது..

ஆனால் தன்னால் முடிந்த மட்டும் தன் பள்ளியில் படிக்கும் தனக்கு தெரிந்த பிள்ளைகளுக்கு உதவி செய்வார்.. அப்படி அவர் உதவியில் படித்து கொண்டு இருந்தவர் தான் ராம் சந்திரன்..

கலிய பெருமாளுக்கு ராம் சந்திரன் என்றால் அவ்வளவு பிடித்தம்.. தன் மனைவியிடம் தன் பிள்ளைகளுக்கு சமைக்கும் சாப்பாட்டில் ராமுக்கும் சேர்த்து கொஞ்சம் கூடுதலாக செய் என்று சொல்பவர்.

மதியம் தன் பிள்ளைகள் சாப்பிட வீட்டிற்க்கு செல்லும் போது ராமிடம்.

“ நீயும் பெருமாள் சாரதாவுக்கு துணையா போ ராம்…” என்று சொல்வார். பள்ளியும் வீடும் ஒரே தெருவில் இருப்பதால் சாரதாவும் பெருமாளும் மதியம் வீட்டிற்க்கு வந்து தான் சாப்பிடுவது.

இவர்களோடு இணைந்தவர் தான் கிருஷ்ண மூர்த்தி.. கிருஷ்ண மூர்த்தி ராம் சந்திரனை விட படிப்பில் இன்னும் நன்றாகவே தான் படிப்பான்..

ஆனால் கலியப்பெருமாள் எப்போதும் கிருஷ்ண மூர்த்தியை விட ராமிடம் தான் அதிக கவனத்தை செலுத்துவார்.. காரணம் கிருஷ்ண மூர்த்தி கொஞ்சம் இருக்க வீட்டு பிள்ளை.. ராம் பெற்றோர் இல்லாது தூரத்து உறவு வீட்டில் இடி சோறு சாப்பிட்டு படிக்கும் பையன்.

அவனுக்கு கல்வி மட்டும் தான் அவனை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்ல கூடியது.. அதனால் அதை அவனுக்கு நல்ல முறையில் கொடுத்து விட வேண்டும் என்பது கலிய பெருமாளின் எண்ணம்…

அதற்க்கு என்று கிருஷ்ண மூர்த்தியை பிடிக்காது என்பது கிடையாது.. மிகவும் பிடிக்கும்.. பணத்திற்க்கு மதிப்பு கொடுக்கும் அந்த வீட்டில் இத்தனை அன்பான படிக்கும் பையனா என்று அவனை நினைத்து வியந்து இருக்கிறார் தான். ஆனால் ராம் அவருக்கு எப்போதுமே தனி தான்.. அதுவும் தன் மகனை விட கொஞ்சம் கூடுதலாக கூட கலிய பெருமாளுக்கு ராம் சந்திரனை பிடிக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்கள்..

கிருஷ்ண மூர்த்தி கூட ராம்மிடம் சொல்வான்.. “என்ன தான் இருந்தாலுமே சாருக்கு உன்னை தான் பிடிக்கும் லே…” என்று.. அதற்க்கு ராம் சொல்வது இது தான்.

“ஓரு அம்மாவுக்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று தான் கிட்டு.. ஆனால் அந்த குழந்தை ஒன்றில் ஊனமாக பிறந்து விட்டால் அந்த தாய் அந்த குழந்தை மீது கூடுதல் கவனத்தை செலுத்துவாங்க.. அப்போ அந்த தாய்க்கு மத்த குழந்தையை பிடிக்காது என்று அர்த்தமா கிட்டு…” என்று சொன்ன ராம் சந்திரனின் வார்த்தை கிருஷ்ண மூர்த்திக்கு புரிந்தது தான்..

ஆனாலும் அது என்னவோ கிருஷ்ண மூர்த்திக்கு தங்கள் ஆசிரியர் கலியப்பெருமாளிடம் எப்படியாவது நல்ல பெயர் வாங்கி விட வேண்டும்.. அதுவும் ராமை விட அவருக்கு பிடித்தவனாக தான் ஆக வேண்டும் என்ற அவரின் ஆசை கடைசி வரை நிறைவேற வில்லை தான்..

ஆனால் தந்தையின் மனதில் இரண்டாம் இடத்தில் இருந்த கிருஷ்ண மூர்த்தி மகள் சாரதாவின் இடத்தில் முதல் இடம் என்ன அனைத்துமானவனாக மனதில் இடம் பெற்றான்..

வருடங்கள் ஒடின.. பிள்ளை பிராயத்தில் இருந்து குமரி வாலிபப்பிரயாத்தை தொட்டார்கள்…

கிருஷ்ண மூர்த்தி மாவட்ட அளவில் முதல் மாணவனாக வந்தான்.. ராம் சந்திரம் பள்ளி அலவில் இரண்டாவதாக பன்னிரெண்டாம் வகுப்பி தேர்ச்சி பெற்றார்கள்..



அடுத்த கட்ட படிப்பு என்று வரும் போது ராம் சந்திரன். கலியப்பெருமாளிடம்…

“நானுமே உங்களை போல ஆசிரியர் ஆகனும் ஐய்யா.. உங்களை போலவே நானுமே என்னை போல படிக்க முடியாத பிள்ளைகளுக்கு உதவி செய்யனும் ஐய்யா…” என்றவனின் பேச்சில் கலியப்பெருமால் கண்டிப்பா ராம். என்னை போல என்ன என்னை விட உயர்ந்த இடத்துக்கு நீ வருவ ராம்..” என்று வாழ்த்தியவர் கிருஷ்ண மூர்த்தியிடம்..

“நீ மூர்த்தி….?” என்று கேட்டவரிடம்..

“நான் ஆட்சியாளரா வரனும் ஐய்யா.” என்று சொல்ல படிப்புக்கு தேவையான அனைத்து உதவியும் இருவருக்கும் செய்து தந்தார்..

சில சமயம் கலியபெருமாள் வீட்டிலேயே படுத்து விட்டு அங்கேயே இரவு உணவையும் முடித்த வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிய நாட்களும் இருந்தது.

அடுத்து சிங்கப்பெருமாள்.. அடுத்து சாரதா என்று படிப்பு என்று அனைத்தும் நல்ல முறையில் சென்று கொண்டு இருந்த சமயம் தான்..

காதல் ஒன்று வந்து தான் விதி அவர்களுக்குள் ஒரு ஆட்டம் காட்டி விட்டு சென்றது.. அதை விதி என்று சொல்வதை விட மனித்தர்களுடைய சதி என்று சொன்னால் சரியாக இருக்கும்…

ஆம் சதியே தான்… அதுவும் கிருஷ்ண மூர்த்தியின் மூலம் கலியப்பெருமாள் வீட்டிற்க்குள் வந்தது.. அதற்க்கு காதலும் ஒரு அடித்தலமாக அமைந்து விட்டது.

சாரதா முதலில் கிருஷ்ண மூர்த்தியை ராம்மிடம் பேசுவது போல் தான் பேசினாள்.. அது எங்கு எப்போது காதலாக கிருஷ்ண மூர்த்தி பதிந்தான் என்று சொல்ல முடியவில்லை.

ஆனால் சாரதாவுக்கு கிருஷ்ண மூர்த்தியின் மீது காதல் மலர்ந்தது.. கிருஷ்ண மூர்த்திக்குமே சாரதாவை பிடிக்கும் தான்.. ஆனால் தனக்கு படிப்பித்தவரின் மகளை தான் அப்படி பார்ப்பது தவறு என்று தன்னை அடக்கி கொண்டு இருந்தவனுக்கு சாரதாவின் பார்வை புரிய ஆரம்பித்ததில், காதல் அனைத்தும் தகர்த்து எரியும் என்று சொல்வார்கள்.. அந்த நிலையில் தான் அன்று கிருஷ்ண மூர்த்தி இருந்தார்..

தான் படித்து முடித்து இந்த மாவட்ட ஆட்சியராக உன் அப்பா முன் வந்து நிற்ப்பேன் சாரதா.

“உன் அப்பா எப்போதும் போல உனக்கு என்ன வேண்டும்..? என்று கேட்கும் போது.

“நான் கேட்பேன் சாரதா உங்க மகளை எனக்கு கல்யாணம் செய்து கொடுங்க என்று கேட்பேன் சாரதா…?”

இருபத்தி ஒரு வயது இளைஞன் கற்பனை செய்தது இது தான். இவர்களின் காதல் மொழி இல்லாது விழுகளால் மட்டும் தான் காதல் மொழி படித்து கொண்டு இருந்ததினாலும், வெளியில் எங்கும் செல்லாது ஊர் சுற்றாத காதலினால் யாருக்குமே தெரியவில்லை…

ஆனால் கிருஷ்ண மூர்த்தியின் பாட்டி ஊரில் சீரியஸாக இருக்கிறார்கள் என்று ஒரு இரண்டு மாதம் கிருஷ்ண மூர்த்தி தன் குடும்பத்தோடு கட்டியாம்பந்தலுக்கு சென்றது பின் பாட்டி இறந்ததில் கிருஷ்ண மூர்த்தி குடும்பம் அங்கேயே இருக்கும் படியான சூழல் அமைந்ததில் , அந்த பாட்டிக்கு மட்டும் சங்கு ஊதவில்லை… கிருஷ்ண மூர்த்தி காதலுக்கும் சங்கு ஊதும் படி ஆகி விட்டது…

அத்தைக்கு அத்தை மகனுக்கு மாமனுக்கு மகனான கிருஷ்ண மூர்த்தியின் மீது விசுவநாதன் தங்கை காஞ்சனாவுக்கு காதல்.. அந்த காதல் எந்த அளவுக்கு என்றால் தன் உயிரை பணையம் வைத்தாவது தன் காதலஒ அடையும் அளவுக்கு காதல்.. ஆனால் கிருஷ்ண மூர்த்தி இது காதல் இல்லை வெறி என்று தான் சொல்லுவார்..

காஞ்சனாவுக்கு கிருஷ்ண மூர்த்தி காதல் என்றால், கிருஷ்ண மூர்த்தியின் தங்கை தாமரைக்கு விசுவநாதன் மீது காதல்.. அந்த காதலின் அளவு எந்த அளவுக்கு என்றால், எட்டையப்பன் வேலை பார்த்தாவது விசுவநாதனை கரம் பிடிக்கும் அளவுக்கு…

தாமரைக்கு தெரியும்.. காஞ்சனாவுக்கு தன் அண்ணன் என்றால் மிகவும் பிடிக்கும் என்று.. அதனால் காஞ்சனா இந்த வீட்டிற்க்கு மருமகள் ஆகி விட்டாள்.. தான் அந்த வீட்டிற்க்கு மருமகளாக செல்வது சுலபம் என்று தாமரை நினைத்து கொண்டு இருக்கும் போது தான்..

கட்டியாம்பந்தலில் இவர்கள் இருந்த போது சாரதா கிருஷ்ண மூர்த்திக்கு எழுதிய காதல் கடித்தம் அவள் கைக்கு கிடைத்தது.. சாரதாவின் புகைப்படத்தோடு…

கிருஷ்ண மூர்த்தி சாரதாவுக்கு எழுதிய கடிதத்திற்க்கு பதில் கடிதமாக தான் சாரதா கிருஷ்ண மூர்த்திக்கு எழுதி இருந்தாள்..

கிருஷ்ண மூர்த்தி இந்த இரண்டு மாதம் காலமாக உன்னை பார்க்காது என்னவோ போல் இருக்கு… உன் நிழல்படத்தை அனுப்பி வை என்றதற்க்க்ய் சாரதா தன் புகைப்படத்தை அனுப்பி இருக்க..

ஊரில் இருக்கும் போது அவர்கள் நிலைத்தை கிருஷ்ண மூர்த்தி தன் தந்தையோடு பார்வை இட சென்ற போது தாமரை கையில் சாரதா எழுதிய கடிதம் புகைப்படத்தோடு கிடைத்து விட்டது..

தாமரை அப்போது பதினொறாம் வகுப்பு படித்து கொண்டு இருந்த சமயம் அது… அனுப்புனரின் சாரதா என்ற பெயர் எழுதி இருக்க. பிரித்து படித்து விட்டாள்..

அதை அப்படியே தன் தந்தையிடமும் தந்து விட. வீட்டில் பூகம்பம் வெடித்து விட்டது… அதுவும் விசுவநாதனுக்கு தெரிந்ததில் கிருஷ்ண மூர்த்தியின் தந்தையோடு அவன் தான் அப்படி ஆடி தீர்த்து விட்டான்..

கலியப்பெருமாலை பற்றி அத்தனை இழிவாக பேசி விட்டார்… “ படிக்க வர பசங்க கிட்ட கூட்டி கொடுத்து..” என்று விசுவநாதன் சொல்லி வய் மூடவில்லை.. தான் படிக்கும் படிப்புக்கும் தான் பதவி ஏற்க போகும் பதவிக்கும் ஏற்ப நடக்கும் கிருஷ்ண மூர்த்தி விசுவநாதனை அடித்து விட்டார்..

விசுவநாதன் அப்போது தான் மது கடை புதியதாக திறந்த சமயம் அது..

“உன்னை போல நாத்தம் பிடிக்கும் வேலை பார்க்கல என் ஐய்யா. பார்த்து பேசு.. சாக்காடை வாயில் இருந்து வார்த்தை எல்லாம் இப்படி தானே இருக்கும்..” அடித்ததோடு மட்டும் அல்லாது இப்படியும் பேச..

விசுவநாதனோ தன் தங்கைக்காக தன்னை அடித்த விசுவநாதனை பதிலுக்கு அடிக்காது அமைதி காத்து இருந்தான்..

கிருஷ்ண மூர்த்தி முடிவாக.. “ நான் சாரதாவை தான் கல்யாணம் செய்து கொள்வேன்.. மிஞ்சி மிஞ்சி போனால் என்ன செய்வீங்க…? இந்த வீட்டில் என்னை சேர்க்க மாட்டிங்க. சொத்து கொடுக்க மாட்டிங்க பரவாயில்லை…” என்று விட்டார்.

ஆனால் அன்று இரவே காஞ்சனா தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல.. கிருஷ்ண மூர்த்தியுமே கொஞ்சம் பதறி தான் போய் விட்டார்..

ஆனால் அதற்க்கு என்று எல்லாம் சாரதாவை விடுத்து காஞ்சனாவை திருமணம் செய்ய எல்லாம் முடியாது.. அப்போதும் விசுவநாதன் தன் கை பிடித்து கேட்ட போது கிருஷ்ண மூர்த்தி மறுத்து தான் விட்டார்.

காஞ்சனாவோ… “ நான் அத்தானை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. அவர் இல்லை என்றால் நான் செத்து தான் போவேன்…” என்று திட்ட வட்டமாக சொல்லி விட்டாள்..

பின் தான் விசுவநாதன் சாரதாவை கடத்தி மூன்று நாட்கள் தனக்கு கீழ் வைத்து இருந்தான். ஆம் விசுவநாதன் சாரதாவை கடத்தி விட்டான்..






 
Active member
Joined
Jul 13, 2024
Messages
169
. Ivalavu kodumai seitha Viswanathanuku thandanai Vendum. Eppadi endru neengal decide pannunga mam.

Eagerly waiting for part2
 
Last edited:
Active member
Joined
May 12, 2024
Messages
204
Thamarai yum koottu… chaik… 😡😡😡
Kanchana alpa aayusula pona pola Thamarai Vishwanath um poai irukkanum
 
Active member
Joined
Jul 13, 2024
Messages
169
Ipadi irukara veetula dhan mahiyum marriage Pani vaika poringanu ninaikum pothu dhan rhomba kastama iruku
Not to this house . Kittu’s house. Hopefully Guru will cut the relationship with his mama or Mahi will make him do it. Sruthi’s accident is what we don’t know how it will turn to
 
Last edited:
Top