Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yennal kondaada pirandhavan...14..2

  • Thread Author
அத்தியாயம்…14…2

மகியின் தாய் தந்தை விபத்து நடந்த போது குருமூர்த்தி சென்று அனைத்தும் சரிக்கட்டிய அதே காவல் நிலையத்திற்க்கு தான் மகேஷ்வரி சென்றது..

அதே துணை காவலர் அதிகாரியும் இருந்தார்… வயது பெண் காலையில் காவல் நிலையத்திற்க்கு வந்து நிற்கவும் அந்த அதிகாரி மகியின் வயதை கணக்கிட்டு ஏதாவது காதல் விவகாரமாக தான் இருக்கும்..

ஒருவன் காதலி என்று இந்த பெண்ணை லவ் டார்ச்சர் கொடுத்து இருக்க வேண்டும்.. இல்லை காதலித்து அனைத்தையும் முடித்து விட்டு இந்த பெண்ணை கழட்டி விட்டு இருந்து இருக்க வேண்டும்.. என் சர்வீசில் இது போல நான் எத்தனை கேஸை பார்த்து இருப்பேன் என்று மனதில் நினைத்து கொண்ட அந்த காவல் அதிகாரி.. மகியை தன் முன் இருந்த இருக்கையை கை காட்டி அமரும் மாறு சொன்னவர்.

“ம் சொல்லும்மா பையன் பேரு என்ன…? எங்கு இருக்கான்…? என்ன செய்யிறான்…?” என்று தன் மனதில் நினைத்தது தான் என்று முடிவு செய்து மகியை கேள்வி கேட்டார்..

ஆனால் மகியோ எதுவும் பேசாது தான் எழுதிக் கொண்டு வந்த பேப்பரை அவர் முன் வைத்தவள்.. சித்தார்த்திடம் டிடெக்டீவ் கொடுத்த விவரம் உள்ள கோப்பையும் அவர் முன் வைத்தாள்..

ஓ அப்போ காதல் விவாகாரம் இல்லையா.? என்று நினைத்து கொண்டு முதலில் மகி எழுதிக் கொண்டு வந்ததை ஏனோ தானோ என்ற ரீதியில் தான் தெனவெட்டாக படிக்க ஆரம்பித்தார்..

ஆனால் அதில் எழுதி இருந்த விவரத்தை படித்த அந்த காவல் அதிகாரியின் முகத்தில் இப்போது அப்பட்டமான ஒரு அதிர்ச்சி…

இப்போது டிடெக்டீவ் கொடுத்த கோப்பை ஒரு வித பதட்டத்துடன் தான் எடுத்து பார்த்தார்.. அதில் அன்று நடந்தது அனைத்தும் தெளிவாக அப்படியே கொடுத்து இருந்ததை பார்த்து அவர் முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள்..

இதை எப்படி சமாளிப்பது என்று விழித்து கொண்டு இருந்தான்.. மேல் இடத்தில் அடுத்து அந்த காவல் அதிகாரிக்கு தான் பதவி உயர்வு.. பார்த்து நடந்துக்கோ நான் தான் உன்னை ரெக்கமெண்ட் செய்து இருக்கேன். இன்னும் இரண்டு மாதத்தில் பதவி உயர்வுக்கு உண்டான ஆர்டர் வந்து விடும்.. அது வரை கொஞ்சம் அடக்கி வாசி.. என்று சென்ற வாரம் தான் தனக்கு சிபாரிசு செய்து இருந்த அந்த அதிகாரி இவரை அழைத்து எச்சரிக்கை செய்து இருந்தார்..

கடந்த ஒரு வாரமாக ஸ்டேஷ்னுக்கே வந்து கொடுக்கும் மாமூலை கூட கை நீட்டி வாங்காது.. அடக்கி வாசித்து கொண்டு இருந்தவர்..

போன வருடம் தான் செய்த செயல் இப்படி வந்து நிற்கும் என்று அந்த காவல் அதிகாரி நினைத்து கூட பார்க்கவில்லை..

மகேஷ்வரியோ இங்கு வந்தது முதல் அந்த காவல் அதிகாரியின் முகத்தை தான் உன்னிப்பாக பார்த்து கொண்டு இருந்தாள்.. அவர் முகத்தில் வந்து போன பாவனைகளை பார்த்து பெண்ணவளுக்கு புரிந்து விட்டது.. சதியில் இவருமே கூட்டு என்று..

அன்று தன் தாய் தந்தையரின் இறப்பின் போது அவ்வளவு அவசரமாக அந்த கேஸை இவர் முடிக்க தானே பார்த்தார்..

அன்று பெற்றோர் இறந்த துக்கத்தில் பெண்ணவள் இருந்ததால், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவள் கவனிக்கவில்லை.

இப்போது கூட்டி கழித்து பார்த்தால் கிடைக்கும் விடை அவள் முன் இருந்ததால் புரிந்து கொண்டு விட்டாள்.

தான் கொடுத்த ஆதாரத்தில் அதிர்ச்சியாகி இருப்பவரிடம்..

“நான் தான் அன்னைக்கே சொன்னேன் தானே சார்.. எங்க அப்பாவுக்கு ட்ரீங்க்ஸ் பழக்கம் இல்லை என்று.. நீங்க தான் வீட்டில் சொல்லிட்டா குடிப்பாங்க. அதுவும் பெண் கிட்ட சொல்லிட்டா குடிப்பாங்க என்று அன்னைக்கு என் கிட்ட கைய்யெழுத்து வாங்கும் போது சொன்னிங்க… இதோ உங்க முன் அது எங்க அப்பா குடிச்சிட்டு வந்து ஆக்ஸிடெண்ட் ஆகல.. ஒரு கார் என் அப்பா வண்டியின் மீது மோதி தான் அந்த விபத்து.. அதில் ரொம்ப தெளிவா இருக்கு பாருங்க சார். “ என்று சொன்னவள் கூடவே.

“என் அப்பா ரெகுலர் ப்ளட் டோனர்.. எனக்கு அப்போ இந்த விசயம் நியாபகத்தில் வரல… எங்க அப்பா க்ரூப் அவசரமா தேவைப்பட்டா எங்க அப்பா ப்ளட் கொடுத்து மூன்று மாசம் ஆகி இருந்தா என் அப்பாவை தான் கூப்பிடுவாங்க. அது எந்த சமயம் இருந்தாலுமே, எங்க அப்பா போய் ரத்தம் கொடுத்துட்டு வந்து இருக்காரு.. அதுக்கு உண்டான ஆதாரம் நீங்க கேட்டா கண்டிப்பா கொடுப்பேன்..” என்று தன் அப்பா குடிக்க மாட்டார் என்றதற்க்கு மற்றும் ஒரு ஆதாரத்தை சொன்னவள்..

பின்… “ எந்த ஒரு குடிக்காரனும். எந்த நேரமும் அழச்சாலுமே ப்ளட் கொடுத்து இருக்க முடியாது… குடி சப்ளை பண்றவங்க கூட எல்லாம் பழக்கம் வெச்சிட்டு இருக்கிறவங்களுக்கு இது நான் சொல்ல வேண்டியது இல்ல…” என்ற மகியின் இந்த பேச்சில்,

அந்த காவல் அதிகாரிக்கு கோபம் வந்து விட்டது.. ஒரு சின்ன பெண்.. தன்னை இப்படி பேசுவதா…?

“ என்னம்மா சின்ன பெண்… என்று நினச்சி நான் அமைதியா உட்கார வெச்சி பேசிட்டு இருந்தா நீ பாட்டுக்கு கண்டதை பேசிட்டு இருக்க..

டிடெக்டீவ் கொடுத்த கோப்பையை காட்டி… “இது தானே ஆதாரம்… இவங்க என்ன கவர்மெண்ட்டா.. இவங்க கொடுத்த ஆதாரம் எல்லாம் சரியா தான் இருக்க சொல்ல.. நீங்க காசு கொடுத்து கூட இதை வாங்கி இருப்பிங்க..”

இப்படி மிரட்டி பேசினால் மகி பயந்து கொண்டு சென்று விடுவாள். என்று நினைத்து அந்த காவல் அதிகாரி பேச..

ஆனால் மகி பயப்பட எல்லாம் இல்லை… “ அப்படியா..?” என்று கேட்டவள் பின்.. “ இதுல எனக்கு என்ன ஆதாயம் இருக்க போகுது.. அதுவும் இருக்கிறவங்களை எல்லாம் விட்டு விட்டு அவங்க மேல பழி போட…?” என்று கேட்டவளிடம்

அந்த அதிகாரி என்ன இது மிரட்டினால் பயப்படுவாள் என்று பார்த்தா இந்த பெண்.. நம்மளை கேள்வி கேட்கிறா.. மகியின் இந்த கேள்விகள்.. அந்த அதிகாரியின் ஈகோவை தொட்டு விட்டது …

சின்ன பெண் தன்னையே கேள்வி கேட்பதா. என்று தன் அதிகாரம் கொடுத்த திமிரில் அந்த காவல் அதிகாரி…

“தோ பாரும்மா சின்ன பெண்ணா இருக்க. என்று தான் உன் கிட்ட இப்படி நிதானமா பேசிட்டு இருக்கேன்… அம்மா அப்பா வேறு இல்ல… நீயே ஒருத்தவங்க ஆதரவில் இருக்க. போம்மா போய் படிச்சு முடிச்சு… கல்யாணம் செய்து குடும்பமா இருக்க பாரு…” என்று எரிச்சலுடன் பேசிய அந்த தோரணை…

நீ போகவில்லை என்றால் வேறு ஏதாவது செய்து விடுவேன் என்ற பாவனையை காட்டியது..

அதை மகியும் புரிந்து கொண்டு விட்டாள்.. “ போகலேன்னா…” அதே தைரியத்தில் பேசிக் கொண்டு இருந்த மகியை பார்த்த அந்த அதிகாரிக்கு கோபம் வந்து விட்டது..

அதில். “பிராத்தல் கேசுல உள்ள தள்ளுவேன்…” என்ற போது அந்த இடத்திற்க்கு கிருஷ்ண மூர்த்தி வந்து சேர்ந்தார்..

ஆம் குருமூர்த்தியின் தந்தை கிருஷ்ண மூர்த்தி தான். காவல் நிலையம் செல்ல வேண்டும்.. அத்தை மாமா என்று அழைத்தால், தன்னை அனுப்ப மாட்டார்கள்.. ஆனால் அவர்கள் போவார்கள் தான்.

ஆனால் பெண்ணவளுக்கு தன் தந்தைக்கு தான் சென்று தான் பேச வேண்டும்.. அதில் அன்று மருத்துவமனையில் தன் மாமாவிடம் கிருஷ்ண மூர்த்தி பேசியது மகியின் நியாபகத்தில் வந்தது…

“பெருமாள் குடிக்க மாட்டான்… நான் பார்க்கிறேன் விசாரிக்கிறேன்..என்று அன்று சொன்னது அவளின் நியாபகத்திற்க்கு வந்தது..

கூடவே குருமூர்த்தி கிருஷ்ண மூர்த்தியின் மகன் என்பதும்.. ஆனாலுமே ஒரு நம்பிக்கை கிருஷ்ண மூர்த்தி தனக்கு உதவி செய்வார் என்று,

பெண்ணவளுக்கு அந்த நம்பிக்கை வர காரணம் ஒன்று அவர் சர்வீஸ்சில் இருந்த போது அவர் மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தது.. அடுத்து அவளும் தானே கிருஷ்ண மூர்த்தியை பற்றி அனைத்தும் கேட்டு இருந்தால், அதாவது தன் சாரதா அத்தையின் காதல் முதல் கொண்டு..

தன் நம்பிக்கை சரி என்றால், காவல் நிலையத்திற்க்கு கிருஷ்ண மூர்த்தி வருவார்.. இவரும் மற்றவர்கள் போல் தான் என்றால் அவர் மகன் குரு மூர்த்தி வருவார். என்ற ஒரு கணக்கீடலில் தான் மகேஷ்வரி காவல் நிலையத்திற்க்கு வந்தாள்.. பரவாயில்லை அவளின் கணக்கீடல் சரியாக தான் போயின.

மகேஷ்வரி இங்கு வரும் முன் கிருஷ்ண மூர்த்தியின் கை பேசி எண் கிடைக்கவில்லை.. ஆனால் தொலைப்பேசி எண் தான் கிடைத்தது.. இவள் அழைத்த போது அந்த அழைப்பை குரு தான் ஏற்றது..

குரு மூர்த்திக்கு மகியின் குரல் தெரியவில்லை.. ஆனால் மகிக்கு குரலில் வயதை வைத்து இது கிருஷ்ண மூர்த்தியின் மகனாக தான் இருக்கும் என்று.. தன் பெயர் சொல்லாது கிருஷ்ண மூர்த்தியிடன் பேச வேண்டும் என்று சொல்லவும் அப்போது அங்கு செய்தித்தாளை வாசித்து கொண்டு இருந்த தந்தையிடம் கொடுத்த குரு மூர்த்தி..

“காலையிலேயே ஒரு பஞ்சாயத்து..” என்று சொல்லி சென்று விட்டான்..

இது போல நடப்பது தான்.. கிருஷ்ண மூர்த்தி தன் பதவி காலம் முடிந்து விட்டாலுமே, ஏதாவது உதவி கேட்டால், உதவி கேட்பவர்களிடம் உண்மை இருக்கும் பட்சத்தில் கிருஷ்ண மூர்த்தி சென்று உதவி செய்வார். அதன் தொட்டு தான் குரு மூர்த்தி இப்படி சொன்னது.

தொலை பேசியை வாங்கி பேச ஆரம்பித்த கிருஷ்ண மூர்த்தியுமே அது போல என்று தான் தன் பேச்சை தொடங்கினார்..

ஆனால் அந்த பக்கம் தன் ஐய்யாவின் பேத்தி என்றதிலும் அவள் சொன்ன விசயத்திலும் அதிர்ந்து தான் போய் விட்டார்.. அதோடு அவருமே மகியின் தந்தை இறந்த நாள் அன்று ஸ்ருதியை மகன் தூக்கி கொண்டு வந்தது.. என்று நடந்த விசயங்கள் அவருக்குமே முரணகா தானே பட்டது.

ஆனால் அந்த முரணில் மகியின் பெற்றோர் சம்மந்தப்பட்டு இருப்பார்கள் என்பது.. அனைத்தும் கேட்ட கிருஷ்ண மூர்த்திக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

இவர்கள் அந்த குடும்பத்திற்க்கு செய்தது எல்லாம் பத்தாதா.. இன்னுமா. என்று நினைத்தவர்.

இதோ வந்து விடுகிறேன் ம்மா.” என்று விட்டு உடனே சென்று விட்டார் தான்.

ஆனால் கிருஷ்ண மூர்த்தி தன் காரை எடுக்கும் போது.. குரு மூர்த்தி தோட்டத்தில் இருந்தவன் இவரை பார்த்து..

“ரொம்ப முக்கியமானவங்கலா.? காலையிலேயே கிளம்பிட்டிங்க…?” என்று கேட்ட மகனுக்கு பதில் அளிக்காது மகனை பார்த்து முறைத்த கிருஷ்ண மூர்த்தி பக்கத்து பங்களாவில் நடைப்பயிற்ச்சி செய்து கொண்டு இருந்த விசுவநாதனையும் பார்த்து முறைத்து விட்டு சென்ற காரையே பார்த்து கொண்டு இருந்த குரு மூர்த்தி..

தன் மாமனை பார்த்து… “ என்ன மாமா எனக்கு தெரியாமா அப்பாவை ஏதாவது கடுப்பு ஏத்திட்டிங்கலா என்ன…?” என்று கேட்ட குரு மூர்த்தியிடம்..

விசுவநாதன்… “ நான் ஒன்னும் செய்யலையே குரு… உங்க அப்பா ஏன் முறச்சி பார்த்துட்டு போறார் என்று தெரியலையே…” என்று பாவம் விசுவநாதன் பாவம் போல் தான் சொன்னார்.

அவருக்கு இப்போது எல்லாம் தன் மகளின் வாழ்க்கையை சரி செய்ய முடியவில்லையே என்ற கவலையும்.. தான் என்ன செய்ய வேண்டுன் என்ற பயமும்.. இப்போது எல்லாம் அவரின் தூக்கத்தை கெடுத்து கொண்டு இருக்கிறது.

வயதில் செய்தது எல்லாம் இப்போது அவருக்கு அனைத்துமே வினையாக நின்று விட்டது.

அதை தான் இப்போ குரு மூர்த்தியும் தன் மாமனிடம் சொன்னான்..

“ மாமா ஒன்னுமே செய்யலையா…? நீங்க என் அப்பாவுக்கு செய்தது இன்னும் ஏழு ஜென்மத்துக்கும் உங்க மீது இருக்கும் இந்த கோபம் போகாது மாமோ…” என்று கிண்டலாக பேசினாலும். குரு மூர்த்தி இப்போது எல்லாம் தன் மாமனிடன் இது போலான குட்டை தன் பேச்சின் மூலம் அவன் கொடுத்து கொண்டு தான் இருக்கிறான்..

விசுவநாதனின் இப்போதைய கவலையில் இதுவுமே அடக்கம்.. ஆனால் குரு மூர்த்தி முற்றிலுமே விலகவில்லை.. அது வரை தான் அவருக்கு நிம்மதி..

பாவம் விசுவநாதனின் இந்த நிம்மதி இன்னும் கொஞ்ச நேரத்தில் தொலைய போகிறது.. அதற்க்கு தான் கிருஷ்ண மூர்த்தி காவல் நிலையத்திற்க்கு செல்கிறார் என்று தெரியாது..

தன் அன்றாட வேலைகளை கவனிக்க சென்று விட்டார்.. குரு மூர்த்தியுமே தன் தந்தை எப்போதும் போல தான் வெளி பஞ்சாயத்துக்கு சென்று இருக்கிறார் என்று நினைத்து அவனுமே அவன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாலுமே காலையில் தொலை பேசியில் கேட்ட அந்த குரல் அவனை வேலைகளுக்கு இடையில் தொந்திரவு செய்தது தான்…
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Wow.. Krishna Magi ku help panna varrar… Guru ku therinja avanum odi varuwane mama va kapatha 😡😡😡
 
Top