அத்தியாயம்….4
தன் மகனின் பிடிவாதத்தை பற்றி தெரிந்த வில்சன், அதற்க்கு அடுத்து வேறு ஒன்றும் சொல்லாது, தன் மனைவியின் கன்னத்தில் தன் இதழை ஒற்றி எடுத்து விட்டு…
“பைடா பேபி…” என்று விடைபெறும் கணவனுக்கு பதிலாய் மலர்விழி “சரி.” என்று வழி அனுப்பி வைத்தாலும், வளர்ந்த மகனுக்கு முன் தன் கணவர் இப்படி நடந்துக் கொள்கிறாரே என்று, அந்த வயதிலும் மலர்விழியின் கன்னம் இரண்டும் வெட்கத்தால் சிவந்து விட்டது.
அதை பார்த்த வில்சன் .தன் டையை தளர்த்திய வாறே… “பேபி நீ இப்படி வெட்கப்பட்டா நான் எப்படி என் வேலையில் கவனம் செலுத்த முடியும்.” என்று தன் மனைவியின் தோள் மீது கை போட்டு, தன்னுள் இன்னும் இறுக்கிக் கொண்டவரை திட்ட முடியாது…
“என்னங்க இது பையன் முன்னாடி.” என்று கணவனின் செயலில் இன்னும் வெட்கம் கூடிப்போய், கணவரின் பிடியில் இருந்து நெளிந்த வாறே வெளியேற முயன்றார்.
சாப்பிட்ட தன் கையை கழுவி விட்டு தன் அன்னையின் மறுப்பக்கம் வந்து நின்ற ஜான் விக்டர், அவர் உடுத்தி இருந்த சேலையின் முந்தியில் தன் கையை துடைத்ததோடு, தந்தை முத்தமிடாத கன்னத்தில் தன் இதழ் பதித்து எடுத்த ஜான்…
“டாடி உங்களுக்கு தொந்தரவா நான் இருக்க விரும்பல. நீங்க உங்க ரொமன்ஸை கன்டினியூ பண்ணுங்க.” என்று சொல்லி விட்டு , தான் பணியாற்ற விரும்பிய கல்லூரியில், இன்று முதல் நாள் தன் வேலையை தொடங்க எண்ணி தன் காரை கல்லூரி நோக்கி செலுத்தி கொண்டு இருக்கும், ஜானின் நினைவு முழுவதும் தன் தந்தை, தாயின் காதல் வாழ்க்கையே நிறைந்து இருந்தது.
ஜான் விக்டருக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஒட்டல் கலிபோனியா, நீயுயார்க் நகரம், லாஸ் ஏஞ்சலஸ் போன்ற இடத்தில் அவருக்கு சொந்தமாக இருக்கிறது.
இந்த நட்சத்திர ஓட்டல் வில்சனின் தந்தை முதலில் தொடங்கும் போது மிக சாதரண அந்தஸ்த்து கொண்ட ஓட்டலாக தான் ஆராம்பித்தார். பின் வில்சன் கைக்கு அந்த ஒட்டல் வந்து தான்,அந்த ஒட்டல் ஐந்து நட்சத்திர அந்தஸ்த்தை ஏற்றியதோடு, ஓட்டலின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தியது.
வில்சனின் குடும்பம் இந்தியாவில் இருந்து மூன்று தலைமுறைக்கு முன்னவே அமெரிக்கா வந்து குடியுறுமை பெற்றுக் கொண்டவர்கள். வில்சன் தந்தை எப்போதும் தன் மகனிடம் நம் வேற் இந்தியா என்று சொன்னதாளோ என்னவோ…
இந்தியாவில் இருந்து தன் ஒட்டலுக்கு, ஒரு சாதரண பணிப்பெண்ணாய் வேலைக்கு வந்த, மலர்விழியின் அழகிலும், அடக்கத்திலும், பண்பாட்டிலும் கவரப்பட்டு அவளை விரும்பி தன் பெற்றோரின் ஒப்புதலோடு கை பற்றியவர், மலர்விழியை முதல் முதலாய் கரம் பற்றும் போது எவ்வளவு காதல் இருந்ததோ...அதில் சிறிதும் குறையாது இன்றும் காதல் வாழ்க்கை வாழ்கின்ற தன் பெற்றோர்களின் நினைவில் புன்னகை மலர…
அந்த புன்னகை முகம் வாடாது தான் பயின்ற கல்லூரியில் தானே வகுப்பு எடுக்கும் ஆசானாய் தன் வகுப்பறையில் நுழைந்த ஜானை பார்த்து அனைவரும் வாய் பிளந்து பார்த்தவர்கள், ஜான் அனைவரையும் பார்த்து சொன்ன…
“ஹாய் ஹான்சம் கைய்ஸ், பியூட்டிபுல் கேல்ஸ்.” என்ற அவனின் பேச்சில், மொத்தமாய் வீழ்ந்து விட்டனர். ஜான் கல்வி கற்றுக் கொடுக்க வந்த கல்லூரி கலிபோனியாவிலேயே புகழ் வாய்ந்த கல்லூரி ஆகும்.
அங்கு பயில அனைத்து நாட்டு மாணவ மாணவிகளும் ஆர்வம் காட்டுவதால், அங்கு இடம் கிடைப்பது என்பது சாதரண விசயம் கிடையாது. அப்படி இடம் கிடைத்து கல்வி பயல வருபவர்கள், அனைத்து நாட்டை சேர்ந்தவர்களாய் தான் இருப்பார்கள்.
அங்கு தங்கும் வசதியும் இருப்பதால், பெரும் பாலோர் அந்த கல்லூரி வளாகத்திலேயே தங்கியும் கொண்டனர்.அங்கு சென்ற இந்தியர்களுக்கு இந்தியாவில் இருந்து வந்த ஒரு முகத்தை பார்த்தால் போதும், நட்பு பாராட்டிக் கொள்வார்கள்.
அங்கு இந்த நார்த், சவுத், இந்து முஸ்லீம், கிரிஸ்ட்டியன் என்ற வேறு பாடு எல்லாம் கிடையாது. . இந்தியா இதுவே அங்கு நட்பு ஏற்படுத்திக் கொள்ள போதுமானதாக இருந்தது.
அப்படி பலதரப்பட்ட இடத்தில் இருந்து வந்த, வேறுப்பட்ட கலாச்சாரத்தை கொண்ட மாணவிகளுக்கு, ஒன்றில் மட்டும் ஒற்றுமை இருந்தது என்றால், அது ஜான் விக்டர். ஆம் பார்த்த முதல் நாளே அனைத்து பெண்களின் மனதையையும் விக்கட் எடுத்து விட்டான் நம் ஜான் விக்டர்.
“அப்போ உனக்கு வீரா மச்சான் வேண்டாம்.” என்று வசுந்தரா கேட்டதற்க்கு,
“எனக்கு அந்த வட்டி காரன் வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்.” என்று தன் தலையை, வலது பக்கம், இடது பக்கமாய் ஆட்டி மறுத்து விட்டாள்.
“அது என்னடி உன் வீரா மச்சானை வட்டிக்காரன் வட்டிக்காரன்னு சொல்ற…” என்று வசுந்தரா மணிமேகலையிடம் கேட்டதற்க்கு,
“வட்டிக்காரனை வட்டிகாரன் என்று தானே சொல்வாங்க.” என்று மணிமேகலை மிக தெனவெட்டாக பதில் அளித்தாள்.
“ஏன்டி அவர் பைனான்ஸ் கம்பெனி வெச்சி நடத்துறார் டி. நீ என்னவோ கந்து வட்டிக்காரன் ரேஞ்சுக்கு சொல்ற.”
“கந்து வட்டிக்காரனுக்கும், பைனான்ஸ் காரனுக்கும் பெருசா என்ன என்ன வித்தியாசம் இருக்கு…?” என்ற மணிமேகலையின் கேள்விக்கு…
“என்ன வித்தியாசம்…?” என்று வசுந்தரா நீயே சொல்லி விடேன் என்பது போல் சொன்னாள்.
“வட்டிக்காரனும் வட்டிக்கு நம்ம கிட்ட கைய்யெழுத்து வாங்கிட்டு தான் துட்டு கொடுக்குறான். அதே தானே பைனான்ஸ் காரன் செய்யுறான். வட்டிக்காரன் கிட்ட நம்மால பணம் திருப்பி கொடுக்க முடியலேன்னா, நம்ம கிட்ட இருக்கும் சொத்தை அவன் எடுத்துப்பான்.
இந்த பைனான்ஸ் காரன் முன் எச்சரிக்கையா நம்ம கிட்ட இருக்கும் சொத்து மீது தான் கடனே தர்றான். கடன் சொன்ன தேதிக்கு இவனும் மிரட்டுறான். அவனும் மிரட்டுரான். இவனுங்க கிட்டயும் அடியாள் இருக்காங்க. அவங்க கிட்டயும் அடியாள் இருக்காங்க.” என்று சொல்லிக் கொண்டே வந்தவள் ஏதோ நினைவு வந்தது போல் ….
“ஆ இரண்டு பேர் கிட்டேயும் ஒரு வித்தியாசம் இருக்குது. பைனான்ஸ் காரனுங்க ப்ராப்பரா ஒரு இடத்தில் உட்கார்துட்டு நம்ம பணத்தை கரக்குறாங்க. வட்டிக்காரனுங்க அந்த ப்ராப்பர் பார்ப்பது இல்ல.” என்று தனக்கு உதவி செய்த வீராவை வீதியில் நிற்க வைப்பது போல் பேசி வைத்தாள் மணிமேகலை.
“நீ என்ன வேணா சொல்லு. நீ இருப்பதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசை படுறியோன்னு தோனுது. அப்புறன் உன் விருப்பம்.” என்பது போல் வசுந்தரா சொன்னாள்.
அவளின் பேச்சை அசட்டை செய்வது போல் தன் தோளை சாதரணமாக ஏற்றி இறக்குவது போல் செய்த மணிமேகலை… “நீ சொன்னது சரியா கூட இருக்கலாம். ஆனா நீ இன்னொன்று சொன்னியே பறப்பதற்க்கு, அதுக்கு தான் ஆசை படுறேன்.
என் விருப்பமா...என்னுடைய சுயமரியாதை நசுக்கப்படாத ஒரு இடமா தான் எனக்கு வேண்டும். அந்த இடம் இது கிடையாது.” என்று தன் ஊரை சுட்டிக் காட்டி சொன்னாள்.
அதற்க்கு மேல் இதை பற்றி வசுந்தரா பேசவில்லை. இன்றும் அவள் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.
இன்னும் கேட்டால், முதலோடு மணிக்கு வெளிநாடு படிக்க வீட்டில் அனுமதி கிடைத்த பிறகு, இன்னும் இவளின் அப்பத்தா பேச்சு அதிகமாக தானே இருக்கிறது.
இதோடு இரு சித்திமார்களும் மணியின் காதில் விழும் மாறு… “இதை தான் நல்ல வாயன் சம்பாரிப்பதை, நார வாயன் செலுவு செய்வதுன்னு சொல்றாங்களோ அக்கா.”
மணிமேகலையின் தந்தை தங்கள் தொழிலை எதுவும் பார்த்துக் கொள்ளாது, அவள் மகள் வெளிநாடு படிக்க போக போவதை தான் இப்படி குத்தி காட்டுகிறார்கள் என்று தெரியாத பேதை இல்லையே மணிமேகலை.
அனைத்தும் காதில் வாங்கி அமைதியாக போக காரணம். அவர்கள் சொல்வதில் ஒரு உண்மையும் இருக்கிறதே…அது தான் தன் தந்தையால் இக்குடும்பத்திற்க்கு சம்பாத்தியம் ஈட்டி தரவில்லை தானே…
அதனால் பொறுத்து போய் கொண்டு இருக்கிறாள்.பார்க்கலாம் இவர்களின் பேச்சு எது வரை என்று. மணிமேகலை அமைதி காத்துக் கொண்டு இருந்தவளுக்கு கூடுதலாய் ஒரு நன்மை கிட்டியது என்றால், அவளின் மேல் படிப்புக்கு உண்டான பயிற்ச்சி பள்ளியில் சேர்ந்து அதில் தேர்வு எழுதி வெற்றியும் கிட்டியதோடு, வீரா அவளுக்கு பாஸ்போர்ட்டை அவனே அழைத்து சென்று அனைத்தையும் செய்து முடித்து கொடுத்து விட்டான்.
அவ்வப்போது அவன் பேச்சான… “அங்கு போனா தைரியமா இருக்கனும். எதுன்னாலும் எனக்கு போன் போடு.” என்று சொன்னவன்…
மணிமேகலையிடம்… “உன்னிடம் என் போன் நம்பர் இருக்கா…?” என்ற கேள்விக்கு, மணிமேகலை திரு திரு என்று அவள் முழித்து நிற்க, அவள் முழித்த முழியிலேயே தன் எண் அவளிடம் இல்லை என்பதை அறிந்துக் கொண்டவனாய்…
தன் கைய் பேசியில் இருந்து அவள் கைய் பேசிக்கு ஒரு அழைப்பை விடுத்து… “இது தான் என் நம்பர். சேவ் பண்ணிக்க.” என்று சொன்ன வீரா …
“அங்கு போன உடனே அங்க வேறு நம்பர் வாங்குவலே… எனக்கு அதை மெசஜ் பண்ணு.” என்று வீரா சொன்ன அனைத்திற்க்கும் …
“சரி...சரி…” என்று தலையைய் ஆட்டியவளின் மனதில்.. “நம்ம நம்பர் இவங்களுக்கு எப்படி தெரியும்.” என்று மணிமேகலையின் மனதில் கேள்வி எழுந்தாலும், அதை வெளிப்படையாக வீராவிடம் கேட்காது அமைதி காத்தாள்.
இதோ அதோ என்று மணிமேகலையின் வெளிநாட்டு படிப்பு சம்மந்தமாக அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வந்து, இதோ அடுத்த வாரத்தில் அவளின் மேல் படிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் கலிபோனியாவில் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் அவளின் மேல் படிப்புக்கு இடம் கிடைத்து விட்டது.
விசாவில் இருந்து, மணிமேகலைக்கு அங்கு தேவைபடும் பொருட்கள் அனைத்தையும் வீரா பார்த்து பார்த்து வாங்கி வந்து கொடுத்தான்.
மணிமேகலைக்கு மேல் படிப்பு படிக்க ஆசை இருந்த அளவுக்கு, விவரம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மணிமேகலை எப்போது வீட்டில் தன் விருப்பத்தை சொன்னாளோ...அப்போதில் இருந்து அனைத்து ஏற்பாட்டையும் வீரா தான் பார்த்துக் கொண்டான்.
மணிமேகலை எவனை வட்டிக்காரன் என்று கிண்டல் செய்தாளோ...அவனே தான் தன் பைனான்ஸ் மூலம் அவள் மேல் படிப்பின் பணத்திற்க்கு ஏற்பாடு செய்தது. அரசாங்கத்தின் மூலம் செல்வதற்க்கு ஆயிரம் கண்டிஷன் இருந்ததால், தன் வேலை நடுவில் அதை இப்போதைக்கு தன்னால் பார்க்க முடியாது என்று தன் பைனான்ஸின் மூலமே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மணிமேகலையில் படிப்பு தேவையான பணத்தை அவனே கொடுத்து விட்டான்.
தெய்வநாயகி கூட… “இது எல்லாம் உனக்கு தேவையா ராசா…” என்று வீராவின் முடிக் கோதி அவனிடம் கேட்டதற்க்கு, …
“நான் வட்டிக்காரன் அம்மத்தா...என் பணம் வீண் போகாது.” என்று சொல்லி விட்டான்.
அதோடு தெய்வநாயகி வீராவிடம் இது போல் கேட்பதை விட்டு விட்டார். வீரா ஒரு முறை தான் தன் நிலையை சொல்வான். திரும்ப திரும்ப அதை பற்றி கேட்டால், அவனிடம் இருந்து பதில் வராது. ஒரு முறைத்த பார்வை மட்டுமே பார்ப்பான்.
வீரா எவ்வளவுக்கு எவ்வளவு நல்லவனோ...அவ்வளவுக்கு அவ்வளவு கண்டிப்பானவனும். அவனின் வாழ்க்கையில் அனைத்தும் அவன் திட்ட மிட்டபடி தான் சரியாக நடந்துக் கொண்டு இருக்கிறது, என்று சொல்வதை விட… வீரா நடத்திக் கொண்டு இருக்கிறான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
அதனால் வீராவிடம் குடும்பம் மட்டும் அல்லாது அவனின் அம்மத்தா குடும்பம் கூட அவன் ஒன்று சொன்னால், அதற்க்கு அடுத்து அதை பற்றி பேச மாட்டார்கள். அதன் காரணத்தால் தெய்வநாயகி தன் பேரனிடம் பேச முடியாததையும் சேர்த்து வைத்து, தன் பேத்தியிடம் பேசி தீர்த்தார்.
“உனக்கு அவன் என்ன என்ன செய்து இருக்கான். உங்க அய்யன் கூட அவன் சொன்னதால் தான் உன்னை படிக்க வெளிநாட்டுக்கு எல்லாம் அனுப்ப ஒத்துக் கொண்டார்.
இம்மா பணம் எல்லாம் செலவு செய்யுறான். எல்லாம் பணத்தையும் ஒழுங்கா கொடு. அங்க படிச்சிப்புட்டு ஒரு வருஷம் சமபாதித்தா போதுமாமே செலவு பண்ண அம்புட்டு பணமும் எடுத்துடலாமுன்னு வீரா சொன்னான்.
ஏமாத்தாம அவன் கிட்ட பணத்தை கொடு. அவனை ஏமாத்த பார்க்காதே….” என்று இன்னும் என்ன என்னவோ தெய்வநாயகி வாய் ஓயாது சொல்லிக் கொண்டே இருந்தார்.
அனைத்திற்க்கும் சேர்த்து வைத்தது போல்… “அப்பத்தா நான் அவங்கல ஏமாத்த மாட்டேன். பணத்தை ஒழுங்கா கொடுத்துடுவேன்.” என்று தெய்வநாயகியிடம் சொன்ன மணிமேகலை
வசுந்தராவிடம்… “பார்த்தியா வட்டிக்காரன்னு நிரூப்பிக்கிறான். என் அப்பத்தா கிட்ட பணம் போட்டதை ஒரு வருடத்தில் எடுத்துடலாமுன்னு சொல்றான்.” என்று அவனை தாளித்து விட்டாள்.
வசுந்தரா இதை அனைத்தும் ஒரு புன்னகையுடனே கேட்டுக் கொண்டு இருக்க… “என்னடி நான் அவனை திட்டிட்டு இருக்கேன். நீ சிரிச்சிட்டு இருக்க…” என்று மணிமேகலை தன் கோபத்தை வசுந்தராவிடம் காண்பித்தாள்.
“இல்ல வெறுப்புக்கும், விருப்பத்திற்க்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம் இருக்கும் என்று யாரோ சொல்லி கேட்டேன். அதான் இந்த வெறுப்பு எப்போ விருப்பமா மாறுமுன்னு நினச்சிட்டு இருக்கேன்.” என்று சொல்லி மணிமேகலையிடம் நல்ல நாளு வார்த்தைகளை வாங்கி கட்டிக் கொண்டு தான் வசுந்தரா சென்றாள்.
தெய்வநாயகி என்ன தான் மணிமேகலை மீது அவ்வளவு வெறுப்பை கட்டினாலும், ஏனோ இனி அவள் பார்க்க வருடக்கணக்காகும் என்ற நினைப்பில்…
“ஒழுங்கா சாப்பிடு. கண்ட கண்ட ஓட்டல்ல சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காதே...எதுன்னாலும் நீயே சமச்சி சாப்பிடு.” என்று சொல்லிக் கொண்டு வந்தவருக்கு என்ன தோன்றியதோ…
“நான் படுக்க போறேன். வயசான காலத்துல நேரம் சென்டு படுத்தா என் உடம்பு தான் கெடும்.” என்று சொல்லி சென்று விட்டார்.
அய்யனும்…. ஒரு முறைக்கு இரு முறை “ பார்த்து சூதனமா நடந்துக்க. நான் அம்புட்டு தான் சொல்வேன்.” என்ற சொல்லோடு அமைதி காத்தார்.
விடியற்காலை மூன்று மணி விமானத்திற்க்கு, வீட்டில் இருந்து முன் இரவு பதினொன்று மணிக்கே கிளம்ப வேண்டும் என்பதால், அவ்வீட்டில் அந்த இரவு நேரத்திலும், அனைத்து அறையின் விளக்குகளும் ஜெகஜோதியாக எரிந்துக் கொண்டு இருந்தது.
சித்தி மார்களும் சித்தப்பாக்களும்… “பார்த்து குடும்ப கவுரவம் கெடாம பார்த்துக்க.” என்று சொல்லி விட்டு, கை கட்டி நின்றுக் கொண்டனர்.
வரலட்சுமியோ மகளுக்கு தேவையான அனைத்தும் கைகள் அது பாட்டுக்கு பார்த்து… பார்த்து… எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாலும், கண்கள் அவ்வப்போது தன் மகளை தொட்டு தழுவிய வண்ணமே இருந்தது.
அதை பார்த்த மணிமேகலைக்கு… ‘இப்போவாவது தன்னிடம் இந்த அம்மா மனம் திறந்து பேசலாம் இல்லையா...குறைந்த பட்சம் இவர்கள் சொன்னார்களே, குடும்ப மானம் அதை பத்தியாவது வாயை திறந்து சொன்னால் கூட போதும் என்று இருந்தது.
எதையும் வெளியில் சொல்லாது எப்படி இவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தவளுக்கு, நீ மட்டும் என்னவாம்…அவளின் மனசாட்சியே அவளின் தவறை எடுத்துரைத்தது.
ஆ நான் வசு கிட்ட சொல்றேன். ஆனா அம்மா ...என்று யோசித்தவளுக்கு அப்பா கிட்ட சொல்வாங்களோ என்று நினைத்தவள் உடனே இருக்கவே இருக்காது. அப்பா கிட்ட அம்மா தேவைக்கு பேசி தான் அவள் பார்த்து இருக்கிறாள்.
தன் பெற்றோர்களின் வாழ்க்கையே அவளுக்கு ஒரு புரியாத புதிர் தான் என்று மணிமேகலை நினைத்து கொண்டவள்...தன் அப்பா அம்மாவை பற்றிய நினைப்பை இப்போதைக்கு தள்ளி வைப்போம்.
தான் அடுத்து தனியாக போகும் அமெரிக்கா வாழ்க்கை எப்படி இருக்க போகிறதோ என்று நினைத்தவளின் மனது, லேசாக கொஞ்சம் ஆட்டம் கண்டது.
கனவு, லட்சியம், ஆசை என்று, தான் அமெரிக்கா செல்ல ஆயிரம் காரணம் சொன்னாலும், இந்த ஊரை விட்டு எங்கும் போகாத தான் எப்படி சமாளிக்க போகிறோம் என்று தன் கவலையில் ஆழ்ந்தவளை…
“தைரியமா இரு எல்லாம் நல்ல படியா நடக்கும். உன் கவனம் மொத்தமும் உன் படிப்பில் மட்டும் தான் இருக்கனும்.”
மணிமேகலையை விமானம் நிலையம் வரை கொண்டு செல்ல வந்த வீரா, அவளின் லக்கேஜை எடுக்கும் போது அவளின் முகபாவனையை பார்த்து சொன்னான்.
அதுவும் படிப்பில் மட்டும் தான் கவனம் இருக்கனும், என்று சொல்லும் போது கவனம் என்ற வார்த்தையில் வீரா அதிக அழுத்தத்தை கொடுத்தானோ என்று மணிமேகலை நினைத்தாலும், அந்த நேரத்தில் அவன் அவளிடம் பேசிய வார்த்தைகள் அவளுக்கு கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது என்பது உண்மை.
தான் சொன்னதற்க்கு எப்போதும் தலையாட்டும் மணிமேகலை அந்த தலையாட்டலும் விடையாக தனக்கு கிடைக்காததால்… திரும்பவும் “என்ன புரியுதா…?” என்று கேட்டான்.
“ம் புரியுது. பார்த்து நடந்துக்குறேன்.” என்று முதன் முறை மணிமேகலை வீராவின் முகத்தை பார்த்து சொன்னாள்.
கமலக்கண்ணன் எப்போதும் போல் மகள் கிளம்பும் போது தன் கவலையை முகத்தில் காட்ட வில்லை என்றாலும், அவர் கண்கள் கலங்கி, ஒரு வித அலைப்புறுதலுடன், அங்கும் இங்கும் அலைபாய்வதை பார்த்து…
அவரை கட்டிக் கொண்டவள்… “கவலை படாதிங்க அப்பா. என் இந்த முடிவு நமக்கு ஒரு விடிவா இருக்கும்.” என்று அனைவரின் முன்நிலையில் தான் அவர் பாஷையில் சொன்னாள்.
ஆனால் வராவுக்கு தவிர, அங்கு இருப்பவர்களுக்கு அது புரியாது போனது. புரிந்து இருந்தால்…
வீரா யாரும் வேண்டாம் நானே வழி அனுப்பிட்டு வர்றேன் என்று சொல்லி அனைவரையும் வீட்டில் விட்டு, மணிமேகலை வீரா மட்டும் அமர்ந்திருந்த அந்த கார், விமான நிலையம் நோக்கி சென்றது.
அவள் போக வேண்டிய விமானத்தின் நேரம் வந்து விட… வீரா அவள் கை பற்றி.. “டேக் கேர்.” என்ற அந்த வார்த்தையில் மணிமேகலையின் கண்கள் தன்னால் கலங்க… “தேங்ஸ்.” தன் கைய் பற்றிய கையில் தன் மறுகையை வைத்தவள், சொன்ன அந்த பேச்சில், வீரா எதுக்கு தேங்ஸ் என்று நினைத்து குழம்பி பின் தெரிந்து…
“எனக்கு உன் கிட்ட இருந்து தேங்ஸ் வேண்டாம்.” என்ற சொல்லோடு மணிமேகலையை வழி அனுப்பி வைத்தான்.