அத்தியாயம்….14
மணிமேகலை ஜான் விக்டரை கைய் பேசியில் அழைப்பு விடுக்கும் போது நேரம் இரவு பதினொன்னை கடந்து இருந்தது.நேரத்தை எல்லாம் பார்க்கும் நிலையில் மணிமேகலை இல்லை.
ஆனால் மணிமேகலையிடம் இருந்து அந்த நேரத்திற்க்கு தன்னை அழைத்ததை பார்த்து ஜான் விக்டர் பதறி போனவனாய்…
“மேகலை என்ன பிரச்சனை. உனக்கு ஏதும் இல்லையே...?” என்று மிக பட படப்பாக கேட்டான்.
ஜான் விக்டரின் இந்த படப்பட்டப்பான பேச்சி, அப்போது தான் நேரத்தை பார்த்த மணிமேகலை தன் தலையிலேயே கொட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.சே இவ்வளவு நேரம் கடந்து போய் ஒரு ஆண்மகனை அழைக்கிறனே… என்னை பத்தி ஜான் சார் என்ன நினச்சிப்பார். என்று உள்ளுக்குள் மணிமேகலை கொஞ்சம் குறுகி போனவளாய்…
“சாரி சார். நான் டைம் பாக்காம போன் பண்ணிட்டேன்.உங்க தூக்கத்த டிஸ்ட்டப் பண்ணிட்டேனா சார். திரும்பவும் சாரி.” என்று சொன்னவளின் பேச்சை காதில் வாங்காது.
“அதை விடு மேகலை. என்னை எந்த டைமுலேயும் நீ அழைக்கலாம். என்ன பிரச்சனை…?அதை முதல்ல சொல்.” என்று ஜான் விக்டர் கேட்டான்.
சிறிது நேரம் மணிமேகலையின் பக்கம் இருந்து எந்த பேச்சு சத்தமும் இல்லாது…வெறும் மூச்சு காற்று இழுத்து விடும் அளவுக்கு ஓசை மட்டும் தான் கேட்டுக் கொண்டு இருந்தது.
இப்போது ஜான் விக்டர் வாய் திறக்கவில்லை. எது என்றாலும் அவளே சொல்லட்டும். ஏதோ பிரச்சனை அது மட்டும் ஜான் விக்டருக்கு தெரிகிறது. இல்லை என்றால் இந்த நேரத்தில் தன்னை அழைத்து இருக்க மாட்டாள் என்று நினைத்துக் கொண்டவனின் மற்றொரு மனதோ… உன்னை இது வரையில் எந்த நேரத்திலும் அழைத்தது இல்லையடா… என்று எடுத்துரைத்தது.
ஜான் விக்டர்… ‘பிரச்சனை என்னவாக இருக்கும் என்று யோசித்தானே தவிர...திரும்ப அவளிடம் என்ன என்று கேட்கவில்லை.
அவளோடு பழகிய இத்தனை நாட்களில்..அவளே நினைத்தால் தான், வாய் திறந்து பேசுகிறாள். எது என்றாலும், அவள் நினைத்தால் மட்டும் தான் சொல்வது.
அதை மட்டும் தான் அவன் கேட்டுக் கொண்டு இருக்கிறான். முதல் முறை தன் அன்னையிடம் தன் குடும்பத்தை பற்றி சொன்னதோடு சரி…
அடுத்து பேச்சு வாக்கில் அவள் குடும்பத்தை பற்றியோ குடும்ப உறுப்பினர்கள் பற்றியோ அவள் பேசியது கிடையாது. தான் ஏதாவது கேட்டால் கூட பேச்சை மாற்றுவது போல பேசி விடுவாள்.
இதில் மட்டும் கிடையாது. எதிலும் அவளிடம் விசயம் வாங்குவது கடினம் என்று நினைத்த ஜான் விக்டர். அவளே சொல்லட்டும் என்று அமைதி காத்தான்.
அவன் நினைத்தது சரி என்பது போல் மணிமேகலையே…
“சார் நீங்க என்னிடம் பழகுவது…” என்று பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு ..பின் என்ன நினைத்தாளோ திரும்பவும்… “ என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கிற எண்ணத்தில் தானே பழகினிங்க… நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…?” என்று மணிமேகலை சட்டென்று கேட்டு விட்டாள்.
இப்போதும் ஜான் விக்டர் அமைதி காத்தான் தான். ஆனால் இந்த அமைதிக்கு காரணம் அதிர்ச்சி. ஆமா ஜான் விக்டர் இது போல் அவள் கேட்பாள் என்று அவன் சிறிதும் நினைத்து கூட பார்க்கவில்லை.
ஜான் விக்டரிடம் இருந்து எந்த வித பதிலும் இல்லாது போக திரும்பவும் மணிமேகலையே… “அப்போ சும்மா இங்க இருப்பவங்க போல...டேட்டிங்…”
ஜான் விக்டர் அவளை அடுத்த வார்த்தையை மணிமேகலையை பேச விடாது… “முதல்ல நீ சொன்ன கல்யாணம் செய்துக்க நினச்சி தான் பழகினேன்.” என்று அவசரஅவசரமாக சொன்ன ஜான் விக்டர்.
பின் மிக நிதானமாக… “உன்னிடம் மட்டும் இல்லை. நான் இது வரை எந்த பெண்ணிடமும் டேட்டிங் அந்த எண்ணத்தில் பழகினது இல்லை.” என்று சொன்னவன்…
தொடர்ந்து… “இன்னும் கேட்டா நான் பெண்களிடம் ரொம்ப பழகினது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.”
இந்த விசயங்கள் அனைத்துமே சோனாலி புன்னியத்தில், மணிமேகலைக்கு ஏற்கனவே தெரியுமே… தான் கேட்டது ஒரு வகையில் மணக்க கேட்டது போல தான்.
அவள் எதிர் பார்த்தது தான் கேட்ட உடன் ஜான் சார் மகிழ்ந்து போவார். உடனே …”சரி.” என்பார் என்று தான்.
ஆனால் தான் கேட்டதற்க்கு எந்த வித பதிலும் சொல்லாது அமைதி காக்கவும் , நாம் அவசரப்பட்டு கேட்டு ஜான் சாரின் பார்வையில் மதிப்பு இழந்து போய் விட்டமோ என்று நினைத்து தான் அப்படி கேட்டாள்.
இப்போது ஜான் விக்டரின் பதிலில். “அப்போ அடுத்த மாசத்துக்குள்ள கல்யாணம் செய்துக்கலாமா…?” என்ற மணிமேகலையின் அவசரத்தில்…
ஜான் விக்டர் புரிந்துக் கொண்டது. அவள் வீட்டில் அவளுக்கு திருமண ஏற்பாடு செய்து விட்டார்கள். அதுவும் அடுத்த மாசத்தில்…
இவள் பயிற்ச்சியே அடுத்த மாசம் தானே முடிவடைக்கிறது. ஓ அப்போ அதை கணக்கு செய்து தான் அவள் கல்யாணம் முடிவு எடுத்து இருக்காங்க.
என் கணிப்பு படி மாப்பிள்ளை இந்தியாவில் இருப்பவனாக தான் இருக்க வேண்டும். மணிமேகலையின் ஆசை தான் அவனுக்கு தெரியுமே…
உடனே முடிவு எடுத்து விட்டான். அவனுக்கு இவ்வளவு சீக்கிரம் மணிமேகலையை திருமணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை.
எதிர் பார்க்காதது கையில் கிடைக்கும் போது அதை கெட்டியாக பிடித்துக் கொள்வது தான் புத்திசாலி தனம். தான் ஒரு புத்திசாலி என்பதை ஜான் விக்டர் நிரூபித்தான்.
மணிமேகலையிடம் எதற்க்கு இந்த அவசர திருமணம். உன் வீட்டில் ஒப்புதல் பெற வேண்டாமா...என்று எதுவும் கேட்காது.
மணிமேகலை கேட்டதற்க்கு… “சரி.” என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தான்.
ஜான் விக்டர் ஏன்..?எதற்க்கு…?என்று காரணம் கேட்பார். நாம் என்ன சொல்வது என்று குழம்பி இருந்தவளுக்கு ஜான் விக்டரின் இந்த ஒப்புதல், மணிமேகலைக்கு ஒரு நிம்மதியை கொடுத்தது எனலாம்.
எனினும் சந்தேகம்...ஜான் விக்டர் எதற்க்கு சரி என்றார் என்று..அதனால் திரும்பவும் … “நீங்க சரின்னு சொன்னது கல்யாணத்துக்கு தானே…” என்று உறுதி படுத்திக் கொள்ள கேட்டாள்.
“நான் சரின்னு சொன்னது உன்னை கல்யாணம் செய்துக்க தான் மேகலை. அதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். இன்னும் கேட்டா இந்த கல்யாணத்தை நான் ரொம்ப ரொம்ப ஆவலா எதிர் பார்க்கிறேன்.” என்று ஜான் விக்டர் கொடுத்த நீண்ட விளக்கத்தில் தான் மணிமேகலை ஒருவாறு அமைதியானாள்.
பின் தயங்கி… “ஆன்டி..அங்கிள் …” என்று அடுத்து என்ன பேசுவது என்று மணிமேகலை தயங்கி தன் பேச்சை நிறுத்தினாள்.
ஜான் விக்டர்… “உன் ஆன்டி...அங்கிளுக்கும்...நம்ம கல்யாணம் ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை தான் கொடுக்கும்.” என்று சொல்லி மணிமேகலையின் பேச்சை முடித்து வைத்தவன்…
“சரி நேரம் ரொம்ப ஆயிடுச்சி. தூங்கு. நான் மார்னிங் உன்னை வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.” என்று சொன்ன ஜான் விக்டருக்கு அடுத்து அவளிடம் காதல் மொழி பேச ஏனோ முடியவில்லை.
இந்த கல்யாணம் முடிவானால் மேகலை தன்னோடு இருப்பாள். அதை நினைத்து அவனுக்கு சந்தோஷமே...ஆனால் இந்த கல்யாணம் என்ற உடன் இந்த ஹார்மோன்ஸ் எல்லாம் கன்னா பின்னா என்று வேலை செய்யுமாமே...ஆனால் ஜான் விக்டருக்கு அது எல்லாம் வேலை செய்யவில்லை போலும்…
காலையில் இந்த விசயத்தை தன் அன்னை தந்தையிடம் சொல்ல வேண்டும். சர்ச்சில் பாதிரியாரை பார்க்க வேண்டும். கல்யாணத்திற்க்கு உண்டான பதிவை கொடுக்க வேண்டும். என்று அடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்று நினைவிலேயே தூங்கி போனான்.
“மேகலையும் நானும் அடுத்த மாசம் கல்யாணம் செய்துக்க போறோம்.” என்று எப்போதும் சாப்பிடும் போது பேசிக் கொள்ளும் சமயத்தில் இவ்வள்வு பெரிய விசயத்தை ஒரு செய்தியை சொல்லும் மகனை அதிர்ந்து பார்த்தார் வில்சன் விக்டர்.
ஆனால் அதற்க்கு எதிர் பதமாய் மலர் விழியோ… “நீ உன் விருப்பத்தை மணிக்கிட்ட சொல்லிட்டியா ஜான்.” என்று ஆவளோடு கேட்டார்.
இதற்க்கு ஜான் என்ன பதில் சொல்வான். பதில் சொல்லாது யோசிப்பவனை வில்சன் விக்டர் சந்தேகத்துடன் பார்த்தார்.
பின்.. “நீ அந்த பெண்னை போஸ் பண்றியா ஜான்…?” என்ற தந்தையின் கேள்வியில்.. கோபம் கொண்ட ஜான் விக்டர்…
நேற்று இரவு தனக்கும் மணிமேகலைக்கும் நடந்த பேச்சு வார்த்தைகள் அனைத்தையும் சொல்லி முடித்தவன்…
“நான் உங்க மகன் டாட்...ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துக்க மாட்டேன்.” என்றும் சொன்னான்.
“ஒரு பெண்ணின் சூழ்நிலையை தனக்கு சாதகமா பயன் படுத்திக்கிறது கூட தப்பு தான் ஜான். எனக்கு என்னவோ அந்த பெண் யாரையோ ஏமாத்த தன்னையே ஏமாத்திக்கிறாளோன்னு தோனுது ஜான்.
அந்த பெண்ணுக்கு உன் மீது காதல் இல்ல ஜான். மரியாதை தான் இருக்கு. அவள் பார்வையில் நீ ஜான் சார் மட்டும் தான்.” என்று வில்சன் விக்டர் சொன்னார்.
“எனக்கும் அது தெரியும் டாட்.” என்ற ஜான் விக்டரின் பேச்சில் வில்சன் விக்டர் அதிர்ந்து போய் மகனை பார்த்தார்.
திரும்பவும் ஜான் விக்டர்… “மேகலைக்கு என் மீது காதல் இல்லை. மரியாதை இன்னும் அவ மனசுல நான் அவரோட சார தான் பாக்குறா...” என்ற ஜான் விக்டரின் பேச்சில்..
“அப்போ எதுக்கு ஜான் இப்படி அவசர அவசரமா அவளை கல்யாணம் செய்துக்க பாக்குற..கொஞ்சம் பொறுமையா உன் மனச அவளுக்கு புரிய வெச்சி அப்புறம் கல்யாணம் செய்துக்கலாம் தானே …” என்று கேட்டார்.
“இல்ல டாட். அது என்னவோ அவளுக்கு என் மீது காதல் என்ன..?குறைந்த பட்சம் இந்த வயசுல வர்ற ஈர்ப்பு கூட அவளுக்கு என் மீது வரல... என்னை அவள் காதலித்து தான் நான் அவளை கல்யாணம் செய்துக்கனுமுன்னு நினச்சா..அது இந்த ஜென்மத்துக்கு முடியாது.
அதான் அவள் கேட்டதும் நானும் உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். எனக்கு தெரியும் டாட். நான் செய்யிறது தப்புன்னு...ஆனா மேகலைய பார்த்திலிருந்து...அவ நம்ம வீட்ல இருக்க வேண்டிய பொண்ணுன்னு என் மனசு சொல்லுது டாட்.” என்ற மகனின் பேச்சில் வில்சன் விக்டர் ஆடி தான் போனார்.
தெரியாதவனாய் இருந்தால் சொல்லலாம். நீ செய்வது தப்புன்னு...ஆனா எனக்கு நான் செய்வது தப்பு. எனக்கு வேற வழி இல்ல என்று சொல்லும் மகனிடம் அவர் என்ன என்று சொல்வார்.
இருந்தும்… “ஏதுன்னாலும் கொஞ்சம் யோசிச்சி செய் ஜான். இது உன் வாழ்க்கை மட்டும் இல்ல. எங்க சந்தோஷம் நிம்மதி...எல்லாம் உன் மகிழ்ச்சியில் தான் இருக்கு.” என்று ஒரு தந்தையாய் தன் மகனின் வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்ற ஆதாங்கத்தில் சொன்னார்.
பின் அனைத்திற்க்கும் தன் மகனுக்கு பக்க பலமாய் இருந்தார். பாதரியாரிடம் பேசியதில் இருந்து கல்யாண புடவை கல்யாணத்திற்க்கு வேண்டியதை அனைத்தும் வாங்கும் வேலை அமெரிக்காவில் கலிப்போனியாவில் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கும் அதே வேளயில்…
இந்தியாவில் கிருஷ்ணகிரியில்… உள் இருக்கும் கிராமத்தின் அந்த பெரிய வீட்டில் வீடு முழுவதும் உறவு முறை கூட்டம் நிரம்பி வழிந்துக் கொண்டு இருந்தது.
பங்காளி முறையில் இருக்கும் ஒருவர்… “கல்யாணத்துக்கு சாமி கும்பிடுறது எல்லாம் பெண் இருக்கும் போது தான் செய்வாங்க...நீங்க ஏன் மணி இல்லாம செய்யிறிங்க…?” என்று உறவு முறையில் இருக்கும் ஒருவர் வம்பு பேச இருப்பர்.அந்த ஒருவர் தான் இவர்.
அதற்க்கு தெய்வநாயகி தன் வெண்கல குரலில்… “ அவளுக்கு படிப்பு அடுத்த மாசம் தான் முடியுதே...அதுக்கு அப்புறம் பார்த்து தான் பறக்க டிக்கட் போட்டுட்டு வருவா…
என் பேத்தி என்ன உங்க பேத்தி மாதிரி பக்கத்து டவுனில் போய் படிக்குதுன்னு நினச்சிப்புட்டிங்கலா...எல்லாத்துக்கும் ஓடியாற...நம்ம ஜாதி ஜனத்துல படிக்காத படிப்ப என் பேத்தி படிக்கிறா...” என்று மணிமேகலையை பற்றி பெருமை பீத்திக் கொண்டு இருந்தார் தெய்வநாயகி… இதை எல்லாம் கேட்க தான் நம் மணிமேகலைக்கு கொடுத்து வைக்கவில்லை.
எப்போதும் தன் பேத்தியை பெருமையாக பேசாதே தெய்வநாயகியின் இந்த பேச்சை கேட்டு ஊரே ஆச்சிரிப்பட்டதோடு, வீடும் ஆச்சரிப்பட்டு தான் போனது.
கொஞ்சம் நாளாகவே தெய்வநாயகியின் பேச்சில் பேத்தியை பற்றி பீத்தல் இருக்க தான் செய்தது. வீடோடு பேசிய பேச்சை கேட்கும் போதே...இரு மருமகள்களுக்கும் காதில் புகை கிளம்பும்.
இன்று ஊரே கேட்கும் படி பேசிய அத்தையின் பீற்றலில் தன் மகன் வாசுதேவை திட்டிக் கொண்டு இருந்தார் அந்த வீட்டின் இரண்டாம் மருமகள்.
“ஏன்டா பொம்பள பொண்ணு அங்கு போய் படிக்கனுமுன்னு நின்ச்சி இருக்கு. ஆம்புள பையன் உனக்கு ஏன்டா அந்த நினப்பு வரல…” பாவம் முப்பதை தொட இருக்கும் நேரத்தில் கேட்டால் அவன் என்ன சொல்வான். அப்போதைக்கு பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு அன்னையை பார்க்க தான் முடிந்தது.
“சரி படிப்பு தான் இப்படி போச்சி...காதலாவது வெளிநாட்டு பொண்ணா பத்து பண்ணியா...இதே ஊரு இதே தெருவு...சீ பொறந்ததும் இங்கே… வாக்கப்பட்டதும் இங்கே…இப்போ சம்மந்தம் பேச போறதும் இங்கே...எல்லாம் என் தலையெழுத்து.” என்று தலையில் அடித்துக் கொண்டே அந்த பக்கம் நகர்ந்து போனதும் தான் வாசுவுக்கு உயிரே வந்தது.
பின் மனதில்… ‘நல்ல வேள மணி ஆசைப்பட்ட படி அங்கயே வேலை பார்த்துட்டு அங்கே இருக்கும் ஒருவனை கல்யாணம் செய்துட்டு பெரியப்பா பெரியம்மாவை அமெரிக்காவுக்கு கூட்டிட்டி போகல…
அப்படி மட்டும் நடந்து இருந்தது… என் அம்மா அவ்வளவு தான், என் சாப்பிட்டில் என் அம்மா விசம் வெச்சி கொன்னு போட்டாலும் போட்டு இருப்பாங்க. என் வசு புன்னியத்தில் நான் தப்பிச்சேன்.” என்று நினைத்துக் கொண்டான்.
ஆம் வசுந்தரா மணிமேகலை படிக்க வெளிநாட்டுக்கு சென்றதும், வாசுவை பார்க்க முடியாது போய் விட்டது. வாசு மாதத்திற்க்கு ஒரு முறை தான் சனி ஞாயிறுகளில் ஊருக்கு வருவான்.
வந்ததும் தன் வண்டியை எடுத்துக் கொண்டு அடுத்த வீதியில் இருக்கும் வசுவின் வீட்டை சுற்றி சுற்றி வட்டம் அடிப்பான்.
அப்படி வட்ட மடிக்கும் போதே தன் வண்டியின் ஆரனையும் சேர்த்து தான் அடிப்பான். அவன் எதிர் பார்த்தது போல் வசு வெளியில் வந்து பார்த்ததும் அவளின் முக தரிசனத்தை தரிசித்து விட்டு, வீட்டுக்கு வந்த்தும் முதல் வேலை நாயை கூட்டிக் கொண்டு முன் பக்க தோட்டத்தில் நிற்பது தான்.
வசு எந்த ஹாங்கில் நிற்பாள் என்று வாசுவுக்கு நன்கு தெரியும். அவளுக்கு தன்னை தெரியும் படியும். தான் அவளை பார்க்கும் படியுமான பொசுஷனில் நின்றுக் கொண்டு விடுவான்.
பின் அவன் எதிர் பார்த்தது போல...ஏதாவது சாக்கு சொல்லி வசு இங்கு வந்து விடுவாள். இப்படி வெறும் பார்வை பரிமாற்றமாய் இருந்த அவர்களின் காதல்…
மணிமேகலை வெளி நாட்டுக்கு படிக்க சென்ற பின் ...பார்ப்பது கூட முடியாது போனது.
அப்போது தான் வாசு உணர்ந்தான் வசு என்றும் வேண்டும் என்பதை, அதை செயல்படுத்த எப்போதும் போல் ஊருக்கு வந்ததும் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வசுவின் வீதியில் வட்டம் இட்டான்.
வெளி வந்த வசு எப்படி பார்ப்பது என் று கையைய் பிசைந்து தவித்து நிற்கையில்… வாசு சைகையில் கோயிலில் என்று சொல்லி விட்டு சென்று விட்டான். அவன் சைகையை புரிந்துக் கொண்ட வசு செருப்பை மாட்டிக் கொண்டு கோயிலை நோக்கி சென்றாள்.
அது மதியம் நேரம் என்பதால் கோயில் நடையை சாத்தி இருந்தார்கள். எங்கே வாசு என்று சுற்றி பார்த்தவளுக்கு, பின் குளத்தில் வாசு கள் எரியும் சத்தத்தில், அங்கு நோக்கி சென்றது மட்டுமே அவள் அறிவாள்.
அவளின் வாயை அடைத்து விட்டு யாரும் பார்க்கா வண்ணம் மறைவில் வசுவை கொண்டு சென்ற வாசு...வசுவிடம் தன் காதல் பகிர்வதற்க்கு முன் தன் முத்தத்தை பதித்து விட்டான்.
வாசு அவன் முத்தத்தில் திகைத்து போய்… “என்ன செய்யிறிங்க விடுங்க யாராவது பாக்க போறாங்க…” என்று சொல்லியும் அவள் உதட்டை விடாது இருந்தவன் ஒரு கட்டத்திற்க்கு மேல்...அவள் மூச்சு விடவில்லை என்றால் நிலமை மோசமாகும் என்பதை உணர்ந்த பின் தான் வாசு வசுவை விடுவித்தான்.
வசுவுக்கு வாசுவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே மிக கூச்சமாக இருந்தது.அவளுக்கு வாசுவை பிடிக்கும் தான். ஆனால் இப்படி...அவள் யோசிக்கும் போதே அவளின் வசுவின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்த வாசு..
“நீ என்னை காதலிக்கிற தானே…?” என்று தன் காதலை சொல்லாது அவள் காதலை கேட்டான்.
அதற்க்கு வசுந்தரா… “ஆமாம்.” என்று தலையாட்டவும்..
“அப்போ ஏன் இந்த முத்தத்துக்கு இப்படி கில்டியா பீல் ஆகுற...இதுக்கே இப்படின்னா...இன்னும் எவ்வளவோ இருக்கே அதுக்கு என்ன செய்வ…” என்று கேட்டவனை அதிர்ந்து போய் தான் பார்த்தாள் வசுந்தரா…
“வசு நீ என்னை உண்மையா காதலிக்கிற தானே…” என்று திரும்பவும் கேட்டான்.
“உங்கல இரண்டு மாசம் பாக்காதது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா…?” என்று அந்த பேச்சின் மூலம் தன் காதலை வசு வெளிப்படுத்தினாள்.
“அதுக்கு தான் நான் ஒரு ஐடியா வெச்சி இருக்கேன்.” என்று சொன்னவன் தன் திட்டத்தை சொல்ல ஆராம்பித்தான்.
“மணி வீட்டில் யார் கிட்டேயும் பேசுறது கிடையாது. அதனால நீ உன் வீட்டில் மணி என் கிட்ட சொல்லி உனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்ய சொன்னதா சொல். நான் உனக்கு வேலைக்கு ரெடி பண்ணிட்டேன். அதுவும் என் ஆபிசிலேயே…என்ன புரிஞ்சுதா…?” என்ற வாசுவுக்கு தன் தலையாட்டல் மூலம் சம்மதம் தெரிவித்தாள் வசுந்தரா…
அவர்கள் திட்டப்படி சென்னையில் ஒரே ஆபிசில் தான் கொஞ்ச நாள் வேலை பார்த்தார்கள். பின் ஒரே ஆபிஸ் என்ற நிலை தான்டி ஒரே வீடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, பின் இப்படியே ஒரு ஆண்டும் ஆறு மாதமும் கடந்த நிலையில் தான், வசுவுக்கு ஒரு நல்ல இடத்தில் சம்மந்தம் அமைந்திருப்பதாய் வீட்டில் இருந்து செய்தி வந்தது.
வாசுவும் வசுவும் திருமணம் செய்தாக வேண்டும். அதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நிலையில் தான் இருந்தனர். நாள் கணக்காய் இருந்த நாட்கள் மாதக்கணகாய் மாறி போனால்...அவ்வளவு தான் என்ற நிலையில் இருந்தனர் வசுவும் வாசுவும்… பின் ஒரு முறை சொன்ன பொய் வீட்டில் தொடர்ந்தது.
ஆம் வீட்டில் வாசுதேவன் தன் அப்பத்தாவிடம் “மணிக்கு அவ பிரண்டே இங்கு மருமகளா வரனும் என்று ஆசை.” என்று சொல்லி மென்று முழுங்கி நின்றான்.
அதற்க்கு தெய்வநாயகி… “எப்போது இருந்துடா நீ மணி ஆசையெல்லாம் நிறைவேத்த ஆராம்பிச்ச…?” அதே வீட்டில் இருக்கும் தெயநாயகிக்கு தெரியாதா…?யார் ஆசை இது என்று…
“எனக்கும் ஆசை தான்.” என்று சொன்னதும்…
“ம் அத சொல்லு முதல்ல...இதுக்கு ஏன் நீ மணிய பிடிச்சி இழுக்குற…” என்று தெய்வநாயகி கேட்டார்.
“இல்ல அப்பத்தா அவளுக்கும் ஆசை தான். இது வசு தான் என் கிட்ட சொன்னா…” என்று வாசுதேவனின் இந்த பேச்சை தெய்வநாயகி நம்பினார்.
ஏன் என்றால் சிறு வயதில் இருந்தே இது இரண்டும் தானே ஒன்னா சுத்துதுங்க...மணி யாரோடும் அவ்வளவு பழக மாட்டாள். பேசவும் மாட்டாள். பேசும் ஒரே தோழி வசுந்தரா தான். அப்போ தன் மனதில் நினைத்ததை சொல்லி இருப்பாள் என்று நம்பினார் தெய்வநாயகி.
“சரிடா வசுவும் நம்ம இனம் தான். இடமும் நமக்கு சமமா இல்லேன்னாலும் பரவாயில்ல தான். ஆனால் வீட்டில் வயசு பெண்ணை வெச்சிட்டு பைய்யனுக்கு பண்றது அவ்வளவு நல்லா இல்லேன்னு தான் நான் சொல்லுவேன்.
முதல் தடவை அவ கிட்ட கேட்காம கல்யாணம் பண்ண பேசினேன். இப்போ வெளிநாட்டுக்கு போய் எல்லாம் ;படிச்சி இருக்கு…
அதுக்கு ஏத்தாப்பல மாப்பிள்ளை பார்க்கனும். அதுக்கு எந்த மாதிரி படிச்ச பையன் தேவைன்னு மணி கிட்ட கேட்டு மாப்பிள்ளை பார்த்து அவளுக்கு முதல்ல முடிச்சிட்டு, அடுத்த முகூர்த்த்த்திலேயே உங்களோடதை முடிச்சிடலாம்.” என்ற தெய்வநாயகியின் இந்த பேச்சில், சாதரணமாக இருந்து இருந்தால் வாசுவுன் மகிழ்ந்து தான் போய் இருப்பான்.
ஆனால் இப்போது தெய்வநாயகியின் பேச்சில் மகிழும் நிலையில் வாசு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ‘என்னது மணிக்கு மணியே கேட்டு மாப்பிள்ளை பாக்க போறிங்கலா...?அப்போ எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆனா மாதிரி தான்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
அவனுக்கு தான் மணியின் கனவை பற்றி வசுவின் மூலம் தெரிந்து வைத்திருந்தானே...அப்போது அவனுக்கு அது பெரிய விசயமாக தெரியவில்லை. அவள் வாழ்க்கை அவள் விருப்பம். அதோடு அவள் பெற்றோரை எங்கும் அழைத்து செல்ல அவளுக்கு உரிமை இருக்கிறது.
அப்போது இப்படி தான் நினைத்தான். ஆனால் அவளுடைய கனவு தன் காதலை தகற்க்கும் என்றால், அவள் கனவை தகர்த்தெறிய வாசு சிறிதும் யோசிக்கவில்லை.
அப்பத்தா மணியிடம் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க கேட்டாள். கண்டிப்பாக தன் கனவை பற்றி சொல்ல மாட்டாள். ஏதாவது தான் சாக்கு சொல்வாள். பின் அங்கு வேலை வாங்கி இங்கு வர மறுத்தால்...தன் காதல் ..என்பதை விட தன் குழந்தை இது தான் அவனுக்கு பெரியதாக தோன்றியது.
அதனால் உடனே வாசு… “மணிக்கு மாப்பிள்ளை எல்லாம் பாக்கதேவையில்லை.” என்று வாசுதேவன் சொன்னது தான் தாமதம்…
“என்ன அவளும் யாரையாவது விரும்புறாளா…” என்று சொல்லிக் கொண்டே…
“ஏய் வரா…” என்று கத்தி அழைத்து விட்டார்.
“அய்யோ அப்பத்தா அது விரும்பவும் எல்லாம் இல்ல. மணிக்கு நம்ம வீராவை பிடிக்குமுன்னு வசு சொன்னா..
என் விருப்ப ..படி என் கல்யாணம் நடந்தா ..நாம ஒரே ஊரில் ஒரே குடும்பத்தில் இருப்போமுன்னு மணி அடிக்கடி சொல்வான்னு வசு சொன்னா…” என்று வாசுவின் பேச்சு அனைத்தும் தெய்வநாயகிக்கு நம்பும் படி தான் இருந்தது.
ஒரு ஆறு மாதமாகவே வீரா அடிக்கடி இங்கு வருவது. அதுவும் வரலட்சுமியிடம்… “அத்தை அத்தை…” என்று பேசுவது… போகும் போது கமலக்கண்ணனின் கைய் பற்றி செல்வது.
கூடவே தன் மகள் சங்கரி வரும் போது எல்லாம் முதலில் தன் அண்ணன் மகளை மணி இல்லை சிட்டு என்று மட்டும் அழைப்பவள்… இப்போது எல்லாம் மணியை பற்றி பேசும் போது, வாய் நிறைய மருமகள் என்று ஒரு உரிமையுடன் சொல்வது… இப்படி அனைத்தையும் நினைத்து பார்த்த தெய்வநாயகி இது உண்மை என்றே நம்பினார்.
நம்பியதை செயலாக்க...தன் பேரனை அழைத்து… “உனக்கு மணியை பிடிக்குமா…?” என்ற அம்மத்தாவின் கேள்வியில்...நம்ம அம்மா தான் ஏதோ சொல்லி இருக்காங்க...என்று தப்பாய் புரிந்துக் கொண்டு…
“அம்மத்தா இது பற்றி சிட்டு விருப்பத்தை தெரிஞ்சிட்டு ...அப்புறம் உங்க கிட்ட பேசலாமுன்னு நினச்சிட்டு இருந்தேன் அம்மத்தா...ஆனா இந்த அம்மா இப்படி உலறி வைப்பாங்கன்னு நினைக்கல…” என்று வீரேந்திரன் பேச்சுக்கு…
“உங்க அம்மா உலறலடா வாசு தான் சொன்னான்.” என்ற தெய்வநாயகியின் பேச்சில்…
“வாசுவா வாசு என்ன சொன்னான்…? நான் அவன் கிட்ட எதுவும் சொல்லலையே…” என்று சொன்னதற்க்கு..
“நீ அவன் கிட்ட இது என்ன எதுவும் சொன்னது இல்லேன்னு எனக்கு தெரியும் வீரா...மணி உன் மீது விருப்பமுன்னு வசு கிட்ட சொல்லி இருக்கா...வசு வாசு கிட்ட சொன்னான்.” என்ற தெய்வநாயகியின் பேச்சு...வீரேந்திரனுக்கு இன்னும் குழப்பத்தை தான் ஏற்படுத்தியது.
‘வசுவும் வாசுவும் பேசினாங்கலா...? அதுவும் இதை பற்றி…?ஏன்…?” மனதில் நினைத்ததை தன் அம்மாத்தாவிடம் கேட்டு விட்டான்.
“ஓ நான் இதை சொல்லலே… வசுவும் வாசுவும் விரும்புறாங்கலாம். அது தான் வாசுவுக்கு எல்லாம் தெரியும்.” என்று சொன்னார்.
வீரேந்திரன் மனதில் மணிக்கு தன்னை பிடிக்கும். தன் சிட்டுக்கு தன்னை பிடிக்கும் என்ற பேச்சே வேறு எதுவும் யோசிக்க விடாது செய்தது. இதே காதல் அவன் கண்ணை மறைக்கவில்லை என்றால் யோசித்து இருப்பானோ…
வேலைக்கே மணியின் பெயரை உபயோகித்தவர்கள்...அவர்கள் காதலுக்கு தங்களை உபயோகித்து இருக்க மாட்டார்களா…?குறைந்த பட்சம் சந்தேகமாவது பட்டு இருப்பான்.
ஆனால் ஆசை கொண்ட மனது..தன் மனதுக்கு சாதகமானதை மட்டும் நினைக்க வைத்தது. அதன் விளைவு எப்போது என்ன..?என்று மட்டும் பேச்சை வைத்துக் கொள்ளும் வாசுவின் எதிரில் போய் நின்றான்.
“சிட்டுக்கு என்னை பிடிக்குமுன்னு சொன்னாளா…?” என்று ஆர்வமுடன் தன்னை கேட்கும் வீரேந்திரனை வாசுதேவன் சந்தேகத்துடன் பார்த்தான்.வாசு இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தன் அப்பாத்தாவிடம்… “மணி வீராவின் மீது விருப்பம் .” என்று சொல்ல காரணம்...தன் பேரன் என்றால் அப்பத்தா ஒத்துக் கொள்வார்கள் என்று தான்.
ஆனால் அதை வசுவிடம் சொல்லும் போது தான்… அவள் சொன்ன… “வீராவுக்கும் விருப்பம் இருக்கனும்ல…” என்று கேட்டதும் தான் வாசு….
“அய்யோ இதை நான் நினைக்கலையே…” என்று சொல்லி மண்டையில் குட்டிக் கொண்டான்.
வாசுவுக்கு வீராவை பற்றி தெரியும். தன் மீது எதையும் திணிக்க விட மாட்டான். அதே போல் தான் மற்றவர்களின் மீது எதையும் திணிக்க மாட்டான். வீரா வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்வது என்று கவலையாகி விட…
“சரி விடு வாசு. பார்க்கலாம். நீங்க நினச்ச படி நடந்தா பரவாயில்ல.இல்லேன்னாலும் நாம கல்யாணம் செய்து தான் ஆகனும் வாசு.” என்று வசு சொன்னதும்..
வாசுவும் …”சரி.” என்பது போல் அவள் கையை பற்றிக் கொண்டவனுக்கு, வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டால் தனக்கு எதிராய் என்ன என்ன திரும்பும் என்று நினைக்கும் போதே அவனுக்கு மலைப்பாய் இருந்தது.
அப்படி மலைத்தி போய் நின்றவனின் முன் போய் ஆர்வமாய்… “சிட்டுக்கு என்னை பிடிக்குமா…?” என்ற வீராவின் கேள்வியே இவனுக்கு எவ்வளவு அவளை பிடிக்கும் என்று தெரிந்து போக.. பின் என்ன வாசு பக்கா வாய் காயை நகர்த்தி இதோ. கல்யாணத்திற்க்கு சாமி கும்பிடும் நிலையில் கொண்டு வந்து நிறுத்து விட்டான்.
***************************************************************கலிபோனியாவில்…
“தோ பாரு மணி சர்ச்சில சில பார்மால்டிஸ் எல்லாம் இருக்கு அதை எல்லாம் நாங்க பாத்துக்குறோம். ஈவினிங் ரிசப்ஷனுக்கு ட்ரஸ்ஸாவது நீ வந்து எடுக்க வேண்டாமா…?” என்று ஆதாங்கத்துடன் மலர்விழி கைய் பேசியில் மணிமேகலையிடம் கேட்டார்.
மலர் விழி மணிமேகலையிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே இந்த பெண் என்ன…?இப்படி எதிலும் ஆர்வம் இல்லாம இருக்கு. தன் கணவர் சொன்னது போல் இவங்க கல்யான வாழ்க்கை எப்படி அமையும்…?
தன்னோட கல்யாணத்தப்ப தன் நிலையோடு மணிமேகலையின் நிலை ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லையே… அந்த நிலையிலும் வில்சன் கைய் பற்ற நான் எவ்வளவு ஆசையாக இருந்தேன்.
ஆனால் இந்த பெண் திருமணத்திற்க்கு தேவையானதை வாங்க கூட எல்லாம் நீங்கலே வாங்குகன்னு சொல்லிட்டா…
இப்போ ரிசப்ஷனுக்கு ட்ரஸ் எடுக்கவும் நீங்களே எடுங்கன்னா என்ன அர்த்தம்…? அதனால் திட்ட வட்டமாய் மலர் விழி மணிமேகலையிடம் “நீ வந்து தான் ஆகவேண்டும்.” என்று சொல்லி விட்டார்.
அதன் படி அன்று இந்தியவர்களின் உடை இருக்கும் அந்த பெரிய மாலில் வில்சன் விக்டரின் குடும்பம் காத்திருக்க… மணிமேகலை சோனாலியோடு வந்து சேர்ந்தாள்.
ஜான் விக்டர் தான் மணிமேகலையை பார்த்ததும் கண்கள் மின்ன… “ மேகலை.” என்று அழைத்துக் கொண்டே அவள் பக்கத்தில் போய் நின்றுக் கொண்டான்.
மணிமேகலை எப்போதும் போல்… “ஜான் சார்.” என்று அழைப்பில் ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள்.
இவர்களை பார்த்துக் கொண்டே தான் மலர்விழி அனைவருக்கும் தேவையான துணிகளை எடுத்துத்தது. சோனாலிக்கும் அழகிய லெகங்கா எடுத்துக் கொடுத்தார். அனைத்தும் கைய் பாட்டுக்கு செய்துக் கொண்டு இருந்தாலும், அவரின் மனது ஏதோ தவறு செய்கிறோமோ..இந்த கல்யாணத்தால் ஜான் சுகப்படுவானா...?தவறு செய்கிறோமா…? என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது…
சில் என்று உடையும் சத்தமும்..கூடவே மணிமேகலையின்…, “அச்சச்சோ…” என்ற பேச்சும் தன் நினைவில் இருந்து கலைந்தவராய் என்ன என்று பார்த்தார்.
அங்கு ஒரு சிறு குழந்தை தன் கையில் வைத்திருந்த கண்ணாடி க்ளாஸில் இருந்த ஜூசை மணியின் உடையில் கொட்டி விட்டு...பாவம் போல் நின்றுக் கொண்டு இருந்தாள்.
மணி குழந்தையின் முகத்தை பார்த்து… “இட்ஸ் ஓகே…” என்பது போல் அக்குழந்தையின் கன்னத்தை தட்டி அவளை அனுப்பியவள்…
ஜானிடம்… “வாஷ் பண்ணிட்டு வர்றேன்.” என்று சொல்லி தன் கைய் பேசியை தன்னை பார்த்துக் கொண்டு இருந்த மலர் விழியிடம் … “இதை வெச்சிக்கோங்க ஆன்டி.” என்று சொல்லி கொடுத்து விட்டு சென்றாள்.
இது வரை குழப்பத்தோடு இருந்த மலர் விழி… மணிமேகலை கொடுத்து சென்ற கைய் பேசியில் அழைத்த அவள் அன்னையின் அழைப்பில்...மலர் விழியின் முகத்தில் குழப்பம் போய் அங்கு பதட்டம் குடிக் கொண்டது.
அந்த பேசியில் இடம் பெற்று இருந்த புகைப்படத்தை சோனாலியிடம் காண்பித்து… “.
“இ…து யா...ர்…?” என்று கேட்டாள். அந்த அழைப்பில் தெளிவாக மணிமேகலை அம்மா...என்று தான் பதிவு செய்து வைத்திருந்தாள். இருந்தும் யாரையாவது அம்மா என்று பதிவு செய்து இருந்தால்...இருக்க வேண்டும் என்று நினைத்து மலர்விழி கேட்டார்.
ஆனால் மலர்விழியின் அந்த எதிர் பார்ப்பை பொய்யாக்கும் வகையாக… “இவங்க மணியோட அம்மா ஆன்டி.” என்று சொன்ன சோனாலி கூடுதல் தகவலாய்…
“மணி அவங்க அம்மா மாதிரியே இருக்கா…” அந்த வார்த்தையை மலர்விழியின் காதில் கேட்காது அவர் நினைவு தப்பி தரையில் வீழ்ந்திருந்தார்.