Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் நினைவுகளில் நானிருக்க...27

  • Thread Author
அத்தியாயம்….27

“நான் செங்கோடையனை கூட பார்ப்பேன்.” தான் சொன்னதையே ஜீரணம் செய்துக் கொள்ள முடியாது அதிர்ச்சியுடன் இருந்தவனின் முகம் பாராது தன் மனதில் இருப்பதை அனைத்தையும் சொல்லி முடித்து விட வேண்டும் என்று நினைத்தவளாய் சொல்ல ஆராம்பித்தாள்.

வீரேந்திரனின் முகம் பார்த்தால் நம் மனதில் உள்ளதை சொல்லாமல் போய் விடுமோ என்று நினைத்து தான், அவன் முகம் பார்க்காது சொன்னாள்.

ஆனால் வீரேந்திரனோ முதலில் அவள் சொன்னதையே என்ன இவள் சொல்கிறாள் என்று நினைத்திருந்தவன் அடுத்து அவள் சொன்ன செங்கோடையன் என்ற பெயரில்…

‘யார்…? அவன் என்று தான் வீரேந்திரன் யோசித்தான். அவன் அவ்வீட்டில் இருக்கும் போது செங்கோடையனின் அப்பா தான் பால் கரப்பவர். அதனால் அவர் மகன் பெயர் வீரேந்திரனுக்கு தெரியவில்லை.

முதலில் செங்கோடையனின் அப்பா பெயரே வீரேந்திரனுக்கு தெரியாது. அவர்கள் வேலை பால் கரப்பது. பின் வீட்டு ஆட்கள் தேவையானதை எடுத்துக் கொண்டு மீது கொடுத்தால், அதை அவர்கள் சொல்லும் இடத்திற்க்கு எடுத்துக் கொண்டு செல்வது...அவர்கள் வீட்டுக்குள் கூட வந்தது கிடையாது.

அப்படி இருக்க...மணிமேகலை சொன்ன செங்கோடையனை இவளோட காலேஜில் படித்தவனா…?ஆனால் பெயர் ஏன் இப்படி இருக்கு, என்ற யோசனையில் வீரேந்திரன் மணிமேகலையை பார்த்தான்.

மணிமேகலையோ தொடர்ந்து… “அப்புறன் டீக்கடை விஜயன்.” என்று சொல்லி அவள் பட்டியல் நீளவும்…

இப்போது வீரேந்திரனுக்கு பொறுமை பறந்து… “சிட்டு...இரு இரு.” என்று சொல்லி மணிமேகலையின் பேச்சை தடை செய்தவன்.

“முதல்ல இந்த செங்கோடையன் விஜயன் எல்லாம் யார்…?” என்று கேட்டான்.

“செங்கோடையனை தெரியாதா..?” என்று அதிர்ச்சியுடன் மணிமேகலை கேட்க…

“ரொம்ப நெருங்கிய சொந்தமோ..?” என்று யோசித்தவனுக்கு மூளையில், ஒரு வேலை இவள் பெரிய மனிஷீ ஆன அன்று குச்சி கட்டினானே….அவனாய் இருப்பானோ…

ஒரு சில படத்தில் கூட பார்த்து இருக்கானே… அந்த பையன் குச்சி கட்டுவான். இவள் அவனை பார்த்து கண்கள் இரண்டும் பட பட என்று அடித்துக் கொள்ளும். அப்போ இவளுக்கு அப்பவே பட பட என்று அடிச்சிதா…?

நாம தான் சின்ன பெண். சின்ன பெண். என்று நினைத்து அசமஞ்சமா இருந்துட்டோமோ…?’ என்று நினைத்து..

“செங்கோடையன் யாரு…?” என்று கேள்வி கேட்டவன். மணிமேகலையின் பதிலை எதிர் பாராது… “நீ வயதுக்கு வந்த அன்று குச்சி கட்டினானே அவனா…?” என்று தன் மனதில் இருக்கும் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள கேட்டான்.

“அவங்க பெயர்.அவங்க பெயர்…?” என்ன என்பது போல் அப்போது தான் யோசனையில் மணிமேகலை ஆழ்ந்து போனவளை, அதனுள் மூழ்கி போகாது தடுத்து நிறுத்தியவன் மனதில்…

“அப்பாடா அவன் இல்ல.” என்று கொஞ்சம் நிம்மதி உண்டாயிற்று.

“அப்போ செங்கோடையன் யாரு…?” என்று வீரேந்திரன் திரும்பவும் கேட்கவும்…

“நம்ம அப்பத்தா வீட்டு பால்காரர் பழனியப்பன் மகன், அவருக்கு பிறகு செங்கோடையன் தானே பால் கரந்தாங்க.” என்று சொல்லி செங்கோடையன் கரந்த பாலையே வீரேந்திரன் வயிற்றில் வார்த்தது போல் செங்கோடையன் யார் என்று சொல்லி முடிக்கவும்..

அப்போது தான் ‘அப்பாடா…’ என்று ஒரு ஆழ மூச்சு எடுத்து விட்டு கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

“இப்போ பால்காரன் தண்ணீர் காரனை பத்தி எல்லாம் ஏன் எடுக்குற…?” என்று எப்போதும் பேசாத கடு கடு பேச்சாய் மணிமேகலையை பார்த்து எரிந்து விழுந்தான்.

“தண்ணீக்காரனை எல்லாம் பாக்கல.” என்று மணிமேகலை சொன்னதை அப்போது தான் உன்னிப்பாக அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது போல் அவளை கூர்மையுடன் பார்த்த வீரேந்திரன்..

“எதுக்கு அவனை பாக்கல…?”

இவள் என்ன அர்த்தத்தில் அவனை பார்த்தேன். இவனை பார்த்தேன் என்று சொல்லுகிறாளோ…?என்று நினைத்து தான் வீரேந்திரன் இப்படி கேட்டது.

ஆனால் மணிமேகலை அதற்க்கும் பதிலாக… “அவங்களுக்கு என் அப்பா வயசு இருக்கும். அது தான் பாக்கல.” என்ற பேச்சு நகரும் விதத்தில்..

“ஓ நீ சொன்ன இவங்க எல்லாம் நீ சைட் அடிச்ச பசங்களா…?” என்று வீரேந்திரன் கேட்டதும், இது வரை அவன் முகத்தை பார்க்காது குனிந்து கொண்டு இருந்தவள் வீரேந்திரனின் இந்த கேள்வியில்…

கண்கள் கலங்க… “எனக்கு அது அப்போ தப்பா தெரியல வீர் அத்தான். ஆனா இப்போ நீங்க யாரையும் பாக்கம நல்லவரா இருக்க...நான் மட்டும் இப்படி. என்னை நினச்சா எனக்கே அசிங்கமா இருக்கு வீர் அத்தான்.” என்று சொன்னவளின் முகத்தில் தெரிந்த அந்த குற்றவுணர்வில் வீரேந்திரனின் உதடு தன்னால்…

“நான் யாரையும் பாக்கலேன்னு யார் சொன்னா…?” என்ற வீரேந்திரனின் பேச்சில், சட்டென்று அவன் முகத்தை பார்த்த மணிமேகலை…

அந்த முகத்தில் அவன் சொன்னது நிஜமா என்பது போல் பார்த்தவள்… அதை அவன் வாய் மூலமாகவே தெளிவு படுத்திக் கொள்ள…

“நிஜமாவா வீர் அத்தான்.” என்று கேட்ட மணிமேகலையின் குரலில் எதில் இருந்தோ விடுபட்ட உணர்வு.

“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு சிட்டு…” என்று மணிமேகலையிடம் வீரேந்திரன் பதில் கேள்வி கேட்டாலும் மனதில்…

“அடி பாவீ புருஷன் மத்த பெண்ணை பார்த்ததில் சந்தோஷப்பட்ட முதல் பெண் இவளா தான் இருப்பா…’ என்று நினைத்தவன் மனதில் கேள்வி கேட்டது…

;அப்போ உன் மனைவி நான் பார்த்தேன் என்று சொன்னதில் உனக்கு வருத்தம் இல்லையா…?’ என்று அவன் மனசாட்ச்சி கேள்வி கேட்டது…

அதற்க்கு உடனே… ‘எந்த ஒரு ஆண் மகனுக்குள்ளும் தன் மனைவி தன்னை மட்டுமே பார்க்க வேண்டும். பார்த்திருக்க வேண்டும். பார்க்க வேண்டும் என்று தான் நினைப்பான். அந்த மனபோக்கு தான் எனக்கும்.

ஆனால் இந்த மனபோக்கையும் மீறி, அவள் மீது எனக்கு இருக்கும் காதல் அதிகம். அவள் முகம் இப்படி குற்றவுணர்வில் இருப்பதை என் காதல் மனது தாங்காது. அதை போக்க தான் என் மனதில் என் சிட்டு இருக்கா என்ரு எப்போது தெரிந்ததோ…

அன்றில் இருலிருந்து தன் நண்பர்கள்… “அந்த பிகர் சூப்பரா இல்லை.” என்று கேட்டால்...அதற்க்கு பதில் சொல்ல அவன் அந்த இடத்தில் இருக்க மாட்டான்.

தான் உன்னை எப்போதும் நினைத்தேனோ அப்போ இருந்து நான் ஒரு பெண்ணையும் பார்க்கவில்லை என்று சொன்னால், கண்டிப்பாக மணிமேகலைக்கு...நான் இவனுக்கு தகுதி இல்லை என்று நினைத்து விடுவாள்.

இப்போதே அவள் மனதில் என்ன என்ன தாழ்வு மனப்பான்மை இருக்கோ என்று தெரியவில்லை. அதோடு இதையும் சேர்ந்துக் கொள்ள வேண்டுமா..என்று நினைத்து தான் அவன் அப்படி சொன்னது. ஆனால் அதற்க்கு தன் சிட்டுவின் இந்த மகிழ்ச்சி வீரேந்திரனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அதனால்.. “ஓ உனக்கு நான் வேறு பெண்ணை பார்த்தா பரவாயில்லையா…? இது தெரியாம உன்ன வெச்சிட்டு நான் எப்படி சைட் அடிக்கன்னு நினச்சி...இந்த ஒரு மாதமா யாரையும் பாக்காம விட்டுடேனே…” என்று வருந்துவது போல் சொன்னவனின் பேச்சில்…

“நான் பார்த்தேன்னு தான் சொன்னேன். அதே போல நீங்களும் பார்த்திங்க...பார்த்ததுக்கு பார்த்தது சரியா போயிடுச்சி...இனி யாரையும் பாக்க கூடாது. நான் இருந்தாலும் சரி. நான் இல்லேன்னாலும் சரி. உங்க மனசு என்னை தான் நினைக்கனும். உங்க கண்ணு என்னை மட்டும் தான் பார்க்கனும்.இல்லேன்னா…” என்று இழுத்தவளின் பேச்சை ரசித்தவனாய்…

அவளை தன் மார்பில் மீது போட்டுக் கொண்டவன்… “இல்லேன்னா என் சிட்டு என்ன செய்வ…?” என்று கேட்டவனுக்கு பதிலாய் நிமிர்ந்து அவனை பார்த்த சிட்டு தான் என்ன செய்வாள் என்பதை வாயில் சொல்லாது அவனின் வாயை கடித்து வைத்தவள்…

“இது தான் செய்வேன்.” என்று சொன்னவளின் பேச்சை விட...அவளின் கடியை மிக ரசித்த வீரேந்திரன்…

“ஓ அப்போ நான் வேறு பெண்ணை பார்த்தா... என் சிட்டு இது போல் கடிச்சி வைக்கும்.” என்று கேட்டவன்…

மிக மிக உல்லாசமாய்… “அப்போ பார்த்துட வேண்டியது தான்.” என்று சொன்னது தான்…

“வீர் அத்தான்.” என்று மணிமேகலை அவனின் பெயரை கடித்து துப்ப….

“நீ என் உதட்டை தானே சிட்டு கடித்து வைப்பேன்னு சொன்ன. இப்போ என் பெயரை கடிக்கிற வேணாம். கல்யாணத்துக்கு பின் இது போல் பார்ப்பது தப்பு. அதனால முதல்ல கொடுத்த தண்டனை தானே சரியானது.” என்ரு சொல்லி வாகாய் மணிமேகலைக்கு தன் உதட்டை காண்பித்தான்.

“வீர் அத்தான்…” இப்போ மணிமேகலை மீண்டும் சிணுங்க..இப்போது அவர்கள் இருந்த நிலையும், அவளின் சிணுங்களையும் கேட்டவனுக்கு...

“சிட்டும்மா இப்போது பேசி தான் ஆகனுமா…?” என்று ஏக்கமாக கேட்டான்.

வீரேந்திரன் தன்னை பார்க்கும் பார்வையிலும், அவனின் குரலிலும் … தெரிந்த தாபத்தில் மணிமேகலையுமே...இன்று பேசிட வேண்டுமோ என்று ஒரு நிமிடம் யோசித்தாள்.

பின் … “இல்லை பேசி தான் ஆகவேண்டும். இப்போவே இந்த வீர் அத்தான் என்னை என்ன என்னவோ பேசி பேச்சு வேறு எங்கு எங்கேயோ போயிடிச்சி…” என்று நினைத்த மணிமேகலைக்கு, அப்போது தான் ஒன்று உரைத்தது.

நான் இந்த பேச்சை ஆராம்பிக்கும் போது இருந்த மனநிலை, இப்போது இல்லை. பார்ப்பது தவறு இல்லை என்று என் வீர் அத்தானே சொல்லி விட்டாரே…

நான் பொய்மையில் இந்த வாழ்வை வாழ கூடாது. முதல் ரகசியத்தை சொல்லி விட்டேன். ஆனால் அடுத்து இது போல் சாதரணம் விசயம் இல்லையே..

இதை சொன்னால் இதோ அவன் மேல் என்னை படுக்க வைத்திருக்கிறானே...இனி இந்த மார்பின் மீது படுக்கும் வாய்ப்பு கூட இல்லாது போய் விடும். நாளை குடிவைக்கும் என் பெற்றோரோடு கூட என்னை அனுப்பி விடலாம் என்று யோசித்தவளின் மனதில்…

‘இது சொல்ல தான் வேணுமோ...இப்போது நன்றாக தானே போய் கொண்டு இருக்கு...இது போல் நான் சந்தோஷமாக இருந்தது இல்லை.நான் உண்மை சொல்கிறேன் என்று நான் என் மகிழ்ச்சியை நானே கெடுத்துக் கொள்ள பார்க்கிறேனோ...என்று அவள் நினைத்த மறு நொடி…

‘ம்...இல்ல. நான் என் வீர் அத்தானுக்கு உண்மையா இருக்கனும்.நான் அவர் மீது வைத்திருக்கும் காதலை விட...அவர் என் மீது வைத்திருக்கும் காதல் அதிகம். கண்டிப்பா என்னை அப்படி எல்லாம் விட்டு விட மாட்டார்.’ என்று நினைத்தவளுக்கு அப்போது தான் ஒன்று தோன்றியது…

நான் என் வீர் அத்தானை காதலிக்கிறேன்..ஆமா நான் என் வீர் அத்தானை ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன்… அவரோடவா...என்று நினைத்தவளுக்கு பதில் அவள் மனசாட்சியே…

‘இல்லை. இதிலும் உன் வீர் அத்தான் தான் உயர்ந்தவன்.” என்று எடுத்துரைத்தது.

“என்ன சிட்டு...லைட்டா அணைச்சிடட்டுமா…?” என்று கேட்டுக் கொண்டே அவளை அணைத்தான்.

வீரேந்திரனின் இந்த அணைப்பிலும் காமத்தோடு காதலே முதன்மையாக இருந்தது. மணிமேகலையின் முகத்தில் வந்து போன முகபாவத்தில்…

‘வேண்டாம் சிட்டு. எனக்கு எல்லாம் தெரியும். நீ எதையும் சொல்லி நீயே கஷ்ட படுத்திக்க வேண்டாம்.’ என்று சொல்லி விடலாம். ஆனால் சொல்லிய பின்...அடுத்து அவளின் மனநிலை என்னவாக இருக்கும்...அவனால் இது தான் என்று கணிக்க முடியாத்தால் தான் அவளின் கவனத்தை திசை திருப்ப எப்போதும் செய்யும் முறையை கைய்யாண்டான்.

ஆம் இது எப்போதும் செய்யும் முறைதான். முதல் நாள் அந்த இரவில் அவன் நினைத்தும் பார்க்கவில்லை. அன்றே தங்கள் இல்லறத்தின் முதல் அடியை எடுத்து வைப்போம் என்று…

அதுவும் சிட்டுவே வந்து தன்னை அணைக்கவும், வீரேந்திரனும் தன்னை மறந்தான் என்பதை விட இவ்வுலகையே மறந்து அவளுள் மூழ்கி விட்டான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

ஆனால் அடுத்து அடுத்து இரவில் தன் சிட்டு தன்னை பேச விடாது இந்த அறைக்கு வந்ததும் அதே வகையை கைய்யாளவும்...அவனுக்கு ஏதோ பொறித்தட்டுவது போல் இருந்தது.

அதுவும் உறவின் முடிவில் அவள் கேட்கும்… “நீங்க சந்தோஷமா இருக்கிங்கலா…?” என்ற அந்த வார்த்தையில்...தன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதுவே தான் அவள் எண்ணமாய் இருக்கிறது என்பது புரிந்து விட்டது.

ஆனால் ஏன் என்று அவனுள் எழுந்த கேள்விக்கு விடையாக… ஒரு சமயம் ஜானை நினைத்து புழுங்குகிறாளோ...என்று சந்தேகம் வந்தது.

அந்த சந்தேகம் போக போக ஊர்ஜிதம் ஆகவும். அடுத்து அடுத்து அவள் முதல் அடி எடுத்து வைப்பதற்க்கு முன், அவளுக்கு எந்த யோசனையும் இல்லாது செய்ய வைத்தவன் அந்த உறவின் முடிவில்…

அவள் கேட்காத கேள்விக்கு பதிலாய்… “சிட்டும்மா நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா பீல் பண்றேன். நீ என்னுடன் சந்தோஷமா இருக்கியாடா…?”என்ற அந்த கேள்வியை தனதாக்கிக் கொண்டான்.

அதற்க்கு அவள் என்ன சொல்வாள். தன் மகிழ்ச்சியை வார்த்தைகளாய் சொல்லாது செயலாய் நிரூபிப்பாள். ஆனால் வீரேந்திரனுக்கு இதே போல் செல்வது சரியில்லையே…

என்னவோ அவள் என்னை சந்தோஷப்படுத்தவே பிறந்தவள் போல் நடந்துக் கொள்வது அவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை.

அவள் தனக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை. முதலில் அதை அவள் உணர வேண்டும். அதற்க்கு அவள் தன் மனதை திறந்தால் தான் உண்டு என்று நினைத்தவனுக்கு…

இன்று அவளின் அந்த மனம் திறத்தில் மக இலகுவாக இருக்க வேண்டும் என்று தான், வீரேந்திரன் அப்படி பேசி அவளை அதை சாதரனமாக உணர வைத்தான்.

ஆனால் இப்போது மணிமேகலையின் முகத்தில் தோன்றிய உணர்வில்..இது ஜான் பற்ரியது என்பது அவனால் உணர முடிந்தது.

அதை சொல்ல அவள் படும் கஷ்டத்தை பார்த்தே வேண்டாம். அவள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்து தான் பழைய படியே அவளை திசை திருப்ப வீரேந்திரன் முயற்ச்சித்தான்.

ஆனால் இம்முறை… “இல்ல வீர் அத்தான். நான் இதை சொல்லியே ஆக வேண்டும்.” என்று சொன்னவள்.

ஒரு நீண்ட பெரும் மூச்சை இழுத்து விட்டவளாய்… “நான் நம்ம கல்யாணத்துக்கு பத்து நாள் முன் வேறு ஒருத்வங்கல கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னேன்.” என்று சொன்னவள் பயந்து போய் வீரேந்திரனை பார்த்தாள்.

ஆனால் முன் போல் நான் ஆம்பிளைங்களை பார்ப்பேன் என்று சொன்ன போது இருந்த அதிர்ச்சியில் ஒரு சதவீதம் கூட காட்டாது ஏதோ கதை சொன்னது போல்…

“அடுத்து…” என்று வீரேந்திரன் கேட்ட கேள்வியில்...இவன் நாம் சொன்னதை சரியாக புரிந்துக் கொண்டானா என்பது போல் பார்த்தவள்…

“வீர் அத்தான்.” என்று எழுத்து நிறுத்தியவளின் பேச்சில்..

“ம் அடுத்து சொல் சிட்டு...அவன் தான் உன்னிடம் பழகினான். நீ உனக்கு தெரியாம வீட்டில் கல்யாணம் பேசியதில்..நீ போய் அவன் கிட்ட கல்யாணம் செய்ய கேட்ட…

அவன் வீட்டில் உன்னை மருமகளா ஏற்க சம்மதம் தான். ஆனால் திடிர் என்று என்று தெரியல அந்த கல்யாணம் நின்னுடுச்சி..சரியா…?”

மணிமேகலையின் கஷ்டம் உணர்ந்தவனாய் தானே சொன்னவன்…

ஆனால் உனக்கு தெரியாதது எனக்கு ஒன்னு தெரியும் அது என்னன்னா…? அந்த ஜானுவுக்கு காதலிக்கும் போது தெரியாத ஒன்னு உன்னை கல்யாணம் செய்யும் போது தெரிஞ்சி இருக்கு…” என்று சொல்லி விட்டு நிறுத்தியவன்..

மணிமேகலையில் அதிர்ந்த முகத்தை தடவிய வாறே… “நீ அவனுக்கு ஸ்டுடண்டாம்..உன்னை கல்யாணம் செய்துகிட்டா...மத்தவங்க அவனை வேறு மாதிரி பார்ப்பாங்கலாம்.

அவன் உன்னை எப்படி கல்யாணம் செய்துக்க முடியும் சிட்டு..என் மனைவி உன்னை அவன் இல்ல வேறு யாருமே காதலியாகவும், மனைவியாகவும், பார்க்க முடியாது. அந்த பார்வை எனக்கு மட்டுமே சொந்தமான பார்வை. புரியுதா…?

இதை சொல்ல தானே நீ இப்படி யோசிச்சே...நீ அவனை விருப்ப பட்டு கல்யாணம் செய்துக்க விரும்பல..அது எனக்கு நல்லா தெரியும் சிட்டு. நீ மட்டும் அவனை விரும்பி இருந்தா...நீ இந்தியா வந்து இருக்கவே மாட்ட எனக்கு நல்லா தெரியும்.” என்று சொல்லி விட்டு தன் கை தடவலை இன்னும் மென்மையாக ஆக்க.. அதில் அவள் கண்ணில் இருந்து வந்த கண்ணீரும் துடைத்து விட்டது.

ஆனால் … “எனக்கு ஒன்னும் மட்டும் தான் விளங்கல…?” என்ற வீரேந்திரனின் கேள்வியில் அவனை என்ன என்று மணிமேகலை பார்க்க…

“அப்படி அந்த நாட்டில் இருந்து தான் ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம். அதுவும் விருப்பம் இருக்கா இல்லையான்னு கூட தெரியாது...ஒருவனை கல்யாணம் செய்யும் அளவுக்கு….”

வீரேந்திரனின் இந்த கேள்விக்கு மணிமேகலை அளிக்கும் பதிலை கேட்டு...வீரேந்திரன் என்ன ஆவானோ….?
 
Top