Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் நினைவுகளில் நானிருக்க....29...2

  • Thread Author
அன்றும் பேச்சு எங்கோ ஆராம்பித்து அது எங்கே செல்லும் வேலையில் அந்த இடத்திற்க்கு வந்தனர்… வரலட்சுமியும் கமலக்கண்ணனும்…

அவர்களை பார்த்த வீரேந்திரன்…”என்ன அத்தை மாமா..உங்களுக்கு எங்களை எல்லாம் பார்க்க எல்லாம் நேரம் இருக்கா என்ன…?”

எப்போதும் பிசியாக இருக்கும் தன் அத்தை மாமாவை பார்த்து வீரேந்திரன் கேட்க… அதற்க்கு சங்கரி… “இது ஆடி மாசம் வீரா...அது தான் அண்ணன் அண்ணி காத்து இங்கு வீசுது.” என்று கலட்டா செய்த படி அவர்களை உபசரித்துக் கொண்டும் இருந்தார்.

அப்போது வீரேந்திரனின் தந்தை வரலட்சுமியின் யோசனை படிந்த முகத்தை பார்த்து… “என்னம்மா தங்கச்சி என்ன யோசனை…? இந்த அண்ணன் கிட்ட சொல்ல கூடிய விசயமா இருந்தா சொல்லும்மா…” என்று சொல்ல..

“அய்யோ அண்ணா ..உங்க எல்லோர் கிட்டயும் ஆலோசனை கேட்க தான் வந்தேன்னே...அது வசீகரனுக்கு அடுத்த மாசம் கல்யாணம் லே அதுக்கு நீங்க தான் சாப்படு செய்யனுமுன்னு அவங்க வீட்டில் இருந்து ஒருத்தரை தவிர எல்லோரும் வந்து கேட்டாங்க…நான் உங்க கிட்ட கேட்டு சொல்றதா சொல்லி இருக்கேன்.” என்று வரலட்சுமி சொல்லி முடித்த அடுத்த நொடி…

வீரேந்திரன்… உங்க நளபாகத்தை பார்த்து வந்ததை எப்போதும் தவர விட கூடாது அத்தை. அதுவும் இப்போ வந்த இடத்தில் தான் நீங்க உங்க திறமைய நிரூபிக்கனும்.” என்ற வீரேந்திரனின் பேச்சை அனைவரும் அமோதித்தனர்.

வரலட்சுமி தன் கணவன் முகம் பார்க்க, அவர் கண் அசைவில் சரி என்ற சொல்லிக்கு கட்டுப்பட்டவளாய்… “சரி வீரா நான் ஒத்துக்குறேன்.” என்று சொன்ன பின் பேச்சு அப்படி இப்படி என்று திசை மாறி கடைசியாக… தெய்வநாயகி வசுவிடம் வந்து நின்றது.

“வசுவும் வாசுவும் காதலிச்சி தானே கல்யாணம் செய்துக்கிட்டாங்க. அப்புறம் என்ன அவங்க எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்காங்க.” என்று கேட்ட சங்கரி.

தன் மருமகளிடம்… “வசு உன் பிரண்ட் தானே சிட்டு நீயாவது ஏதாவது அவ கிட்ட சொல்லலாம்ல..என் இரண்டு அண்ணிகளுக்கும் இதுவே பெரிய கவலையா போச்சு.” என்று சொன்ன சங்கரிக்கு தெரியாது வசு மணிமேகலையிடம் செய்த செயல்.

மணிமேகலை யாரும் சொல்லாது யாருக்கும் தெரியப்படுத்தும் வகையிலும் நடந்துக் கொள்ளாது.. வசு வந்து பேசினால் என்ன...என்பது போல் பேச்சை முடித்துக் கொள்வாள்.

“என்ன தான் வசு என் பிரண்டா இருந்தாலும், ஒரு சில விசயத்தில் நாம் தலையிட முடியாது அத்தை.” என்று நாசுக்காய் தன் மறுப்பை தெரிவித்து விட்டாள்.

சங்கரியும்… “ஆமாம்...ஆமாம்.” என்று சொன்னவர் தொடர்ந்து…

தன் அன்னை தெய்வநாயகியை பற்றி பேசினார். “ஆனா அப்பா அம்மா கிட்ட இன்ன வரை பேசாது இருப்பாருன்னு நான் நினச்சி கூட பாக்கல.” என்று ஆதாங்கத்துடன் சொல்ல…

அதற்க்கு வீரா…. “நீங்க பேசுறிங்கலா உங்க அம்மா கிட்ட…”

“ஆ நான் எப்படி பேசுவேன். என் வரா அண்ணிக்கும் கமலா அண்ணனுக்கு செய்தது கொஞ்சமா…? நஞ்சமா…?” என்று சங்கரி கேள்வி எழுப்ப…

“அதே தான் தாத்தாவுக்கும்.” என்று அவர்களின் உரையாடல்களும் சரி வாழ்க்கையும் சரி எண்ணை விட்ட மிஷின் போல, சத்தம் போடாது மிக ஸ்மூத்தாக சென்றது.

எபிலாக்​

மூன்று வருடம் கடந்த நிலையில்…

அந்த திருமண மண்டபத்தில் முதல் வரிசையில் நடுநாயகமாய் தெய்வநாயகி அமர்ந்து இருக்க...அவர் பக்கத்தில் தெய்வநாயகியின் கணவர் என்ற உரிமையில் சங்கரலிங்கம் அமர்ந்து இருந்தாலும், அவர் தன் மனைவி பக்கம் திரும்பாது… மேடையிலேயே கண் பதித்து இருந்தவருக்கு…

கடந்த ஆண்டுகளில் நடந்த விசயங்கள் ஒவ்வொன்றாய் நியாபகத்தில் வந்து போனது. அதுவும் இன்று அவர்கள் ஊரிலேயே மூன்று ஒட்டல்கள் வைத்து நடத்தும் தன் மூத்த மருமகள் வரலட்சுமியை எண்ணும் போதே, அவர் கண்கள் கலங்கி போனது.

எப்போது அவருக்கு உண்மை நிலை தெரிந்ததோ அப்போதிலிருந்தே அவ்வீட்டில் தன் மூத்த மகன் கமலக்கண்ணனையும், மூத்த மருமகள் வரலட்சுமியையும், பார்க்கும் போது எல்லாம் கண்கள் கலங்கி தான் போகும். அன்று அவர்களை பார்த்து துக்கத்தில் கலங்கி கண்கள், இன்று ஆனந்தத்தில் கலங்கி போனது.

தன் மூத்த மருமகள் வரலட்சுமி பட்டு புடவையில் ஒரு முனையை இடுப்பில் சொறுகி கொண்டு, பம்பரமாய் மேடையில் வேலை செய்யும் பாங்கை பார்த்து வியந்து தான் போனார்.

எப்போதும் வரலட்சுமியின் முகம் பெயருக்கு ஏத்தது போல் தான் இருக்கும். ஆனால் அமைதியாக...சாந்தமாக தான் இருக்கும். இப்போதும் அந்த முகத்தில் அமைதியையும் சாந்தமும் தெரிகிறது தான்.

ஆனால் கூடவே அந்த உதட்டில் மெல்லியதான சிரிப்பு...அந்த சிரிப்பு தன் வீட்டை விட்டு போன பின்...வரலட்சுமி தனக்கு என்று ஒரு வருமானத்தை உருவாக்கிய பின்… வந்த புன்னகை. கூடவே முகத்தில் தெரியும் அந்த நம்பிக்கை…

வரலட்சுமி திருமணம் முடிந்து தன் வீட்டுக்கு வந்த நாளில் இருந்து அவள் முகத்தில் பார்த்தது கிடையாது. இப்போது கூடுதலாய் அந்த புன்னகை கூடவே தன்னபிக்கையோடு வரலட்சுமியை பார்க்கும் போது…

சங்கரலிங்கம் இதை தான் நினைத்தார். இப்பெண்னா நம் வீட்டில் இத்தனை ஆண்டு வாய் திறக்காது அமைதியாக ஏச்சையும்… பேச்சையும் …கேட்டுக் கொண்டு இருந்தது…இப்படி அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அதற்க்கு காரணம் மேடை அலங்காரத்தில் வரலட்சுமி சொன்ன பூ அலங்காரத்தில் இல்லை என்று அந்த பூக்காரனிடம்…

“ என்னிடம் எந்த பூ என்று சொல்லி அட்வான்ஸ் வாங்குனிங்க….?நீங்க எந்த பூ இங்கு அலங்காரத்துக்கு உபயோகிச்சி இருக்கிங்க…?” என்று வரலட்சுமி குரலை உயர்த்தி கேட்கவில்லை தான்.

ஆனால் அந்த குரலில் இருந்த அழுத்ததில்… “சாரி மேடம்..நீங்க கேட்ட பூ கிடைக்கவில்லை. அது தான் இந்த பூவை.” என்று தலை குனிந்த வாக்கில் சொன்ன அந்த பூக்காரனிடம்…

“பூ கிடைக்கலேன்னு எப்போ தெரியும்…?” என்று வரலட்சுமி கேட்டதற்க்கு…

“நேற்று மாலை.”

“அதை ஏன் எங்க கிட்ட சொல்லலே..நேத்து மாலை என் மாப்பிள்ளை சத்திரத்துக்கு வந்தார் தானே… அவரிடம் நீங்க சொல்லி இருக்கலாமே...இதோ இந்த பூ எங்க தோட்டத்தில் பூத்து மார்கெட்டில் வந்து அதை நீங்க வாங்கி..

அதுக்கு நான் அதிகம் காசு கொடுத்து… இப்படி ஏன் சுத்தி மூக்கை தொடுவானேன்..அதுவும் இல்லாம நாங்க கேட்ட பூ இல்லை என்றால்..எங்க கிட்ட வேறு எது என்று அபிப்ராயம் கேட்டு தானே செய்யனும்.

இதோடு அழகான பூ எல்லாம் எங்க தோட்டத்திலேயே பூக்கும். அதை வைத்து நாங்க ஏதாவது செய்ய சொல்லி இருப்போமே…” என்று கட்டன் ரைட்டாக பேசிய வரலட்சுமி …

தொடர்ந்து… “பார்க்க சின்ன பையனா இருக்க...தொழிலுக்கு நேர்மை தான் மிக மிக முக்கியம். அதை தவிர விட்டா...தொழிலை நாம தவர விடுற சூழ்நிலை நமக்கு வந்துடும்.” என்று சொல்லி சொன்னதோடு குறைந்த தொகையே அவனிடம் கொடுத்து அனுப்பினார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சங்கரலிங்கத்திற்க்கு வியப்பாக இருந்தது...எத்தனை திறமையான பெண்..

இப்பெண்ணை இத்தனை ஆண்டு சமையல்கட்டில் கட்டி போட்டு விட்டோமே...என்று மனதில் வருந்திக் கொண்டு இருக்கும் போது..

வீரேந்திரன் அவரிடம் வந்து கை பற்றிய வாறு… “வாங்க தாத்தா...உங்க பேத்தியை கூட்டிட்டு வரலாம்.” என்று கை பிடித்து எழுப்பி சென்றவனையே பார்த்திருந்த தெய்வநாயகிக்கும் கண்கள் கலங்கி தான் போனது.

ஆனால் இந்த கண் கலங்கள் சங்கரலிங்கம் போல் ஆனந்தத்தில் வந்தது கிடையாது. இழப்பில் வந்தது…

இழப்பு என்றால் சொத்தோ பத்தோ கிடையாது. தன் சொந்தம் இழந்த துக்கம்.

சொந்தம் இறந்து விட்டால் கூட, இந்த அளவு துக்கம் வருமா…?தெரியவில்லை. ஆனால் தெய்வநாயகியின் சொந்தம் என்பதை விட தன்னில் பாதி என்று சொல்லும் தன் கணவர்…

ஒரே வீட்டில் வேறு வேறு அறையில் படுத்து எழுந்து காலை முகத்தை பார்க்கும் போது, யாரோ என்பது போல் தன் கணவன் காட்டும் அந்த பார்வையை தினம் தினம் பார்த்துக் கொண்டு…

அந்த வீட்டில் இருப்பது தெய்வநாயகிக்கு நரக வேதனையே பரவாயில்லை என்று எண்ணும் படி இருந்தது.

கணவன் துணை இருந்தால் கூரை மேல் நின்று கூவலாம் என்ற பழமொழியை மெய்பிக்கும் வகையாக...அந்த வீட்டில் தெய்வநாயகி மீது அனைவரும் வைத்த அந்த மரியாதை குலைந்து இப்போது..அனைவரும் ஏதோ ஒரு பொருளை பார்ப்பது போல் கடந்து செல்லும் அவர்களின் நடவடிக்கையில் மேலும் தெய்வநாயகி உள்ளுக்குள் மரித்துக் கொண்டு இருந்தார்.

ஆனால் ஊரில் மரியாதையான பெரிய குடும்பம். அதை காட்ட இதோ முதல் வரிசையில் அமர வைத்து..அனைவரும் கேட்கும் படி…

“அம்மாவுக்கு மூட்டி வலி இருப்பதால்,இப்போது எல்லாம் அம்மா முன்ன இருந்து எதுவும் செய்யிறது இல்லை.” என்று அனைவரின் முன்னும் தன் மூத்த மகன் சொன்னதை கேட்டு எதிர்த்து பேச முடியாது..

தன் மகன் சொன்ன பொய்யைய் உண்மையாக்கும் பொருட்டு, தன் மூட்டியை தேய்த்து விட்டு கொண்டு இதோ அமர்ந்து இருக்க..தன் மொத்த குடும்பமும் மேடையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை எடுத்துக்கட்டி செய்து கொண்டு இருந்தனர்.

அதுவும் யாரை நமக்கு கீழ் இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ…அவர்களை கேட்டு தான் தன் இருமகன்களும்… மருமகள்களும்… செய்வதை வாய் அடைத்து பார்க்க மட்டும் தான் தெய்வநாயகியால் முடிகிறது.

வரலட்சுமி தன் அமைதி...திறமை..விட்டு கொடுத்து போகும் பண்பால் உறவுகள் அனைவரையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ள..இது எதுவும் இல்லாது ஆணாவம்.. சுயநலம். இவற்றை மட்டுமே கொண்ட தெய்வநாயகி இதோ உறவு இருந்தும் தனித்து…

ஒரு பக்கம் சங்கரலிங்கம் பிடிக்க மறுபக்கம் வீரேந்திரன் தன் மனைவியின் கை பிடித்து மேடைக்கு ஆடி அசைந்து வரும் போது...ஏற்கனவே அழகோடு இருக்கும் தன் மகள் .இப்போது தாய்மையின் பூரிப்பும் சேர்ந்து அழகுக்கு அழகு சேர்ப்பது போல அழகு மிளிர…

தன் கணவனின் கை பிடியில் இருக்கும் கையை உருவ பார்த்தவளிடம்…”வீரேந்திரன்… கை பிடிச்சிட்டு வா…” என்று கட்டளை இடுவது போல் சொல்லும் அந்த வார்த்தையிலும், காதலை இப்படி குழைத்து சொல்ல முடியுமா…?என்று யோசிக்கும் அளவுக்கு கண்ணீல் காதலும், உதட்டில் புன்னகையும், முகத்தில் தான் அப்பா என்ற கர்வமும் சேர்ந்து ஆண்மையின் இலக்கணமாய் திகழும் தன் கணவனின் முகத்தை பார்த்துக் கொண்டே…

கணவனின் காதலுக்கு என் காதல் ஒன்றும் குறை இல்லை என்பது போல்..ஒரு கள்ள சிரிப்போடு… “எனக்கு நடக்கும் போது வயிற்றில் கை வைத்து நடந்தே பழக்கமாயிடுச்சா… அது தான் உங்க கிட்ட இருக்கும் என் கையை நான் எடுக்க பார்த்தேன்.”

தான் இப்படி சொன்னால் அவன் என்ன சொல்வான் என்று தெரிந்தே சொன்னவளுக்கு ஏற்பவே… “உன் கை என் கிட்டவே இருக்கட்டும்...உன் வயிற்றுக்கும் என் மகவுக்கும் என் கை இருக்கு..” என்பது போல் தன் ஒரு கையை மணிமேகலையின் வயிற்றில் மேல் வைத்து…

“இப்போ ஓகேவா….?” என்று கேட்டான்.

எப்போதும் போல்… “ஒகே..ஒகே…” என்று சொல்லி விட்டு வெட்கம் முகத்தில் படர மேடையில் போட்டு இருந்த அந்த இருக்கையில் அமர்ந்ததும்...இதோ இந்த தொலைவு தன் மனைவி நடந்ததே பெரிய விசயம் என்பது போல்..

“சிட்டும்மா ஒன்னும் பிரச்சனை இல்லையே...என்ன மூச்சு வாங்குது…?” என்று கேட்ட வீரேந்திரன் அவள் பதில் எதிர் பாராது... ஏற்கனவே தன் பைனான்ஸ் ஆட்களின் ஒருவனிடம் கொடுத்து வைத்திருந்த ஜீசை… மணிமேகலையில் வாயில் ஊற்றி..

“இப்போ பரவாயில்லையா…?” என்று கேட்டான்.

அவன் ஒரே வாயில் ஊற்றிய ஜூசை குடிக்க முடியாது குடித்த பின் தான் அவளுக்கு மூச்சு இன்னும் வாங்கியது. இருந்தும் அவனிடம்..

“ஒகே தான்.” என்று சொன்னாள்.

இல்லை என்றால் மேடையிலேயே டாக்டரை அழைத்து வந்து ஒரு வழி செய்து விடுவான் தன் வட்டிக்கார அத்தான் என்று நினைத்து அவனை பார்த்து புன்னகை சிந்தியவள்..

கூடவே பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த தங்கள் பைனான்சில் வேலை பார்க்கும் அந்த அடியாளை முறைக்கவும் தவரவில்லை.

மணிமேகலையின் முறைப்பில்… “சார் நான் கீழே இருக்கேன். நீங்க ஏதாவதுன்னா கூப்பிடுங்க.” என்று சொன்னவன் வீரேந்திரனின் பதிலை கூட எதிர் பாராது ஒடியே விட்டான்.

“ஏன்டி அவனை பார்த்து ஊரே பயந்து ஓடும். அவன் உன்னை பார்த்து பயந்து ஓடுறான்..நீ என்ன அவ்வளவு பெரிய ரவுடியா…?” என்று கேட்டவனின் முகத்தில் தெரிந்த அந்த பாவத்தில்..

“அய்யோ வட்டிக்கார...கேமிரா எல்லாம் இங்கு தான் இருக்கு இப்போ போய்...சீ.”

அவர்களின் அந்தரங்க நேரத்தில் வீரேந்திரன் வாயில் இருந்து ஒரு முறையாவது… “நான் உன்னை என்னவோ நினச்சேன்டி...ஆனா இப்படி..ரவுடி கணக்கா…” தன் முதுகில் இருந்த கீரலின் எண்ணிக்கையில் கேட்டு வைத்து இன்னும் வாங்கி கட்டிக் கொள்வான் என்பது வேறு விசயம்.

கணவனின் இந்த பேச்சில் ஏதேதோ நியாகம் வந்து அவள் கன்னத்தை மேலும் சிவக்க வைத்ததால், புகைப்படத்தில் இன்னும் அழகாக விழுந்தால் வட்டிக்காரனின் சிட்டு…

இதை எல்லாம் தெய்வநாயகி முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தார் என்றால்...வசுந்தரா..கடைசி இருக்கையில் தன் அம்மாவின் பக்கத்தில் அமந்துக் கொண்டு மணிமேகலையை ஏக்கத்தோடு பார்த்திருந்தாள்.

ஏக்கத்திற்க்கு காரணம் நாம் மணிமேகலையிடம் உண்மையா இருந்து இருந்தால்...இன்று யாரோ போலா இருந்து இருப்போமா…? அவள் பக்கத்தில் அவளுக்கு வைக்கும் சந்தனம் அவள் கன்னத்தில் கூட கூட..அதை துடைத்து விட்டுக் கொண்டு, அந்த வயதுக்கே உறிய கதைகள் பேசி… என்று நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு கண்கள் கலங்கி தான் போனது.

யாரும் பார்த்து விட போகிறார்கள் என்று பயந்து கண்ணீரை துடைப்பதற்க்குள்… “அழேதா அழாதே..” என்று தன் கண்ணீரை துடைத்து விட்ட தன் மகனின் பிஞ்சு கரத்தை எடுத்து அதில் முத்தம் இட்டவள்..

“அம்மா அழல ராசா..அழல…” என்று சொன்னவள்..

“அத்தைய பார்…?” என்று தன் மகனின் கவனத்தை மேடையின் பக்கம் திசை திருப்பி விட்டாள் வசுந்தரா...மகன் சரணுக்கு இரண்டரை வயது தான் ஆகிறது.

ஆனால் இந்த வயதிலேயே பக்குவப்பட்ட தன் மகனை..எதையும் கூர்ந்து கவனிக்கும் அந்த செயலை பார்த்து ஒரு பக்கம் மச்கிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.

வசுந்தரா இக்குழந்தையை அவள் பெற்று எடுப்பதற்க்குள் பட்ட அவமான்ங்கள் தான் எவ்வளவு...ஒரு சில சமயம் நினைப்பாள்...இந்ட்gஹ குழந்தை உண்டான உடனே கலைத்து இருந்தால் இந்த அவமானம் எல்லாம் நமக்கு வந்து இருகாதே என்று…

ஆனால் இப்போது தன் ஒரே ஆறுதலோடு...இந்த வாழ்க்கையின் ஒரே பிடிப்பும் தன் குழந்தை தானே...குழந்தை அப்படியே பார்க்க அச்சு அசல் வாசுதேவன் போலவே இருந்தான்.

மனைவி மேல் இல்லாத பாசம் கணவனுக்கு மகன் மேல் வந்து விட்டது. கணவனுக்கு மட்டும் அல்லாது அக்குடும்பதுக்கே என்று கூட சொல்லலாம்...தன்னை அவமான சின்னமாய் எண்ணும் குடும்பம்...அந்த அவமானத்திற்க்கு கிடைத்த பரிசான...இக்குழந்தை மட்டும் அவர்களுக்கு பொக்கிஷமாய் தெரிகிறது. என்ன உலக நியதியோ…

நியதி.. இதை நான் நினைக்க கூட தனக்கு தகுதி இல்லை. என்னை என்னை மட்டுமே நட்போடு இருந்து தன் அந்தரங்கத்தை எல்லாம் பகிர்ந்துக் கொண்டவளுக்கு நான் என்ன கொடுத்தேன் துரோகம்…

அதே போல் தன் கணவனுக்கு காதலோடு தன் உடலையும் கொடுத்ததிற்க்கு தனக்கு கிடைத்த பரிசு துரோகம். துரோகத்திற்க்கு துரோகம் சரியாக போய் விட்டது என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டு…

தன்னை எதிரில் பார்க்கும் போது மணியின் அந்த சின்ன சிரிப்பும்… “எப்படி இருக்கிங்க அண்ணி..குழந்தை எப்படி இருக்கான்…?” என்று யாரோ போல் அந்த நலம் விசாரிப்புக்கு…

தானும்… “நல்லா இருக்கேன்...நீ எப்படி இருக்க...?” என்று கேட்டாள்.

சின்ன சிரிப்போடு … “நல்லா இருக்கேன்.” என்று சொல்லி கடந்து செல்பவளை தடுக்க முடியாது...இதோ எப்போதும் போல் மூன்றாம் மனுஷியாய் இருந்து அவள் விழாவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

வசுந்தரா கண் கலங்குவதை பார்த்த அவள் அம்மா.. “சும்மா சும்மா அழாதடீ..யாராவது பார்த்தா அதுக்கும் வயிறு எரிஞ்சி பார்க்குறா பாருன்னு சொல்ல போறாங்க.” என்று தன் அன்னை வார்த்தையை கேட்டதும், வசுந்தராவின் கண்கள் கலங்குவது தன்னால் நின்று விட்டது.

ஆம் சொல்வார்கள் தான். சொல்வதற்க்கு இல்லை. ஏன் தன் கணவனே சொல்வான். தனக்கு இது போல் விழா செய்யாததால் மணியை பார்த்து பொறாமை படுகிறேன் என்று… ஆம் அவளுக்கு இது போல் விழா செய்யவில்லை

சரண் பிறப்பதற்க்குள் இவனின் பிறப்பின் ரகசியம் அனைவருக்கும் தெரிந்து விட்டது. “சந்தி சிரிச்சதை விழா எடுத்து கொண்ட்டனுமா…?” என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்கள்.

திருமணம் முடிந்து நான்கு மாதம் மட்டுமே அவள் தன் கணவன் வீட்டில் இருந்தது. பின் அங்கு பேச்சை கேட்க முடியாது அம்மா வீட்டிற்க்கு வந்து விட்டாள்.

பின் குழந்தை பிறந்து தான் அவனை பார்க்க அனைவரும் வந்தது. அது என்னவோ தெரியவில்லை ஆடு பகை குட்டி உறவு என்பது போல்..தன்னை பிடிக்காதவர்கள் அனைவருக்கும் தன் குழந்தையை பிடித்து விட்டது. அதன் ஒரு காரணம் தான் இப்போது தான் கணவன் வீட்டில் குடும்பமாய் இருப்பது.

தன் குழந்தை தான் தன் பிடிப்பு என்று மனதில் நினைத்த வசுந்தரா குழந்தையை பிடித்து இருந்த கைய் தன்னால் அழுத்தத்தை கூட்ட…

“அம்மா வலிக்குது.” என்று குழந்தை சொல்வதற்க்கும் அந்த இடத்தில் வாசுதேவன் வருவதற்க்கும் சரியாக இருந்தது.

“ யார் மேல இருக்கும் கோபத்தை என் குழந்தை மேல் காட்டுற…?” என்று கத்தியவன் குழந்தையிடம்…

“வா சரண் நாம அத்தை கிட்ட போகலாம்.” என்று குழந்தையை தூக்கி போனவன்...ஒரு பார்மால்டிக்காக கூட…

“நீயும் வா…” என்று அழைக்காது போனவனின் முதுகையே பார்த்திருந்த வசுந்தராவுக்கு சிரிப்பு தான் வந்தது.

இதே மணிமேகலையை அவளின் திருமணத்திற்க்கு முன் நடத்தியது என்ன…?இப்போது அதுவும் மணியின் அம்மா சொத்து வேண்டாம் என்று அனைத்தும் அவர்களிடம் கொடுத்து விட்டு போனவர்கள்..அப்படியே இருந்து இருந்தால் இவர்கள் இந்த அளவுக்கு மதிப்பு கொடுத்து இருப்பார்களா…? என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது மணிக்கும் அவளின் அம்மாவுக்கும் கொடுத்த மதிப்பே தனி தான் என்பது போல் இவர்களின் மொத்த குடும்பமும் கொடுக்கிறார்கள்.

வரா அத்தையின் கேட்டரிங் வளர்ந்ததோடு மணிமேகலையும் இரண்டு வருடமாய் அரசாங்கம் அனுமதிபெற்று...பள்ளியை ஆராம்பித்து இப்போது அது ஒரளவுக்கு நல்ல முறையில் நடப்பதில் இன்னும் இவர்களுக்கு பெருமை பிடி படவில்லை.

அதுவும் மணியின் இரண்டு சித்திகளும்… “எங்க மணி..எங்க மணி.” என்ற அந்த பேச்சை கேட்க கேட்க..இவர்கள் மணியை முன் எப்படி நடத்தினார்கள் என்று நினையாது இருக்க முடியவில்லை.

மொத்தத்தில் உறவே ஆனாலும், நாம் நடந்துக் கொள்வதிலும்..நாம் என்ன செய்தோம்...என்ன செய்கிறோம்...எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பொறுத்தே நம் மரியாதை இருக்கிறது. இதை வசுந்தரா புரிந்துக் கொண்டாள் தான் …என்ன காலம் கடந்து புரிந்துக் கொண்டதால் அவளுக்கு எந்த பயனும் இல்லாது போய் விட்டது.

விழா முடிந்த இரவு… “நீ போய் தான் ஆகனுமா சிட்டு..அது என்ன பிரசவம் அம்மா வீட்ல தான் பார்க்கனும். குழந்தை கொடுக்க தெரிந்த எங்களுக்கு அதை வெளியே வர வழைக்க தெரியாதா…?” என்று வீரேந்திரன் கேட்ட ஏடாகூடமான கேள்வியில்…

“அய்யா எப்போ டாக்டருக்கு படிச்சாரு...பிரசவம் பார்க்க…?” என்று வீரேந்திரனிடம் கேட்க…

அவளிள் காலில் உள்ள விரலை ஒவ்வொன்றையும் இழித்து சுலுக்கு எடுக்கும் போது, அவனின் ஒவ்வொரு இழுப்பிற்க்கும் அவனின் சிட்டு...மெழுகாய் கரைய..

“என் கை தான்டி உனக்கு சரியான வைத்தியம். உனக்கு வலி வரும் போது என் கை பட்டாளே போதுமடி… உனக்கு சுகபிரசம் ஆகிடும்” என்று சொன்னவனின் பேச்சிலும் சரி அவனின் கை வண்ணத்திலும் சரி அந்த வட்டிக்காரனின் சிட்டு கிரங்கி தான் போனாள்.

பின் வீரேந்திரன்… “நான் சீரியஸாவே கேட்குறேன்டி நாளைக்கு உன் அம்மா வீட்டுக்கு போக போறியா…?” என்று கேட்டவனின் முகம் ஒரு முழ நீளத்திற்க்கு நீட்டிக் கொண்டு இருந்தது.

“ஏங்கே நான் எங்கே போக போகிறேன். இங்கு இருக்க தோட்ட வீட்டுக்கு தானே போக போறேன். அதுக்கு நீங்க இந்த அலப்பறை பண்ணுவீங்களா…?இதை யாராவது கேட்டா சிரிப்பாங்க.” என்று தன் கணவனை பல விதத்தில் சமாதானப்படுத்தியே...தன் அம்மா வீட்டுக்கு போனாள்.

“என்ன மச்சி பொண்டாட்டிய அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு ரொம்ப ஹாப்பியா இருக்க போல… “ என்று வீடியோ காலில் பேசிய ஜானை முறைத்த வீரேந்திரன்..

“என் பெண்டாட்டி அம்மா வீட்டுக்கு போனது இருக்கட்டும்… அம்மா வீட்ல இருக்க உனக்கு மனைவியா வரப்போறவளை முதல்ல தேடு.” என்ற வீரேந்திரனின் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லாது அமைதியாக இருப்பவனை பார்த்து வீரேந்திரன் சந்தேகத்துடன் பார்த்தான்.

“நீ அமைதியா இருப்பதை பார்த்தா அம்மா வீட்ல இருக்க உன் வருங்கால மனைவி கூடிய சீக்கிரம் உன் வீட்டுக்கு வந்துடுவா போல…” என்று கிண்டல் செய்தும் ஜான் அமைதியாக இருப்பதை பார்த்து…

வீரேந்திரன் … “என்ன பிரச்சனை ஜான். அந்த பெண் ஒத்துக் கொள்ள வில்லையா…?” என்று கேட்டான்.

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த ஜான் வீரேந்திரனின் இந்த கேள்விக்கு… “இந்த தடவை நான் அவசரப்பட விரும்பல வீரா...நான் முதல்ல நடந்ததை கடக்கவே எனக்கு மூன்று ஆண்டுகள் ஆயிடுச்சி…

இந்த முறை எல்லாம் யோசிச்சி தான் செய்யனும். அந்த பெண்ணும் இந்தியா தான். அதுவும் சென்னை..அம்மாக்கு வேற நாளு அக்கா தங்கச்சியா...அது தான் முதல்ல அவ குடும்ப விவரம் கேட்டுக்கனும்…

அடுத்து எனக்கு அந்த பெண்ணை பிடிச்சி இருக்கு தான். ஆனால் அந்த பிடித்தம்...எவ்வளவு வலுவானதுன்னு எனக்கு தெரியனும் என்பதை விட தோனனும்.

அதற்க்கு அடுத்து அந்த பெண் வீட்டில் கல்யாணம் செய்ய போறாங்கன்னு அவசர அவசரமா என்னை ஏத்துக்க கூடாது. விருப்பம்..இதில் அவள் விருப்பம் முதல்ல முக்கியம் வீரா…” என்ற ஜானின் பேச்சில் வீரேந்திரனுக்குய் தலை சுற்றி தான் போயிற்று…

“ஏன்டா உங்க அம்மாக்கு இவ்வளவு சகோதரி இருந்தாங்கலே..உங்க அப்பாக்கு ஒரே ஒரு சகோதரி இருந்து இருந்தா..இந்நேரம் நீயும் உன் மனைவிய பிரசவத்திற்க்கு அம்மா வீட்டுக்கு அனுப்பி இருப்ப…” என்று வீரேந்திரனின் ஜானின் பேச்சு தொடர்ந்தது..

அதே போல் ஜான் ஆசை பட்ட பெண் யார்….?அந்த பெண்ணுக்கு நம் ஜானை பிடிக்குமா…?அவர்கள் காதல் ஊடலை அடுத்த கதையில் சொல்கிறேன் வாசகர்களே…

வீராவுக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன்..

நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும் என்று தெரிவித்துக் கொண்டு உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்….
 
Active member
Joined
Apr 2, 2025
Messages
41
Nalla kadhai.. thirumbi padidhadhil magizhchi... John ku neenga vera story ezhudhuningala mam??? Enaku theriyala athan...
 
Top