Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் நினைவுகளில் நானிருக்க...29

  • Thread Author

அத்தியாயம்….29

“எப்படி இருக்க ஜான்…?” என்று வீரேந்திரன் தன் கைய் பேசி மூலம் நலம விசாரித்துக் கொண்டு இருக்க….பேசியின் அந்த பக்கம் இருந்த ஜானின் பக்கத்தில் இருந்து எந்த பதிலும் வராது இருக்க…

“ஜான்..ஜான் யூ...ஆர்...ஒகே…?” என்று மீண்டும் மீண்டும் கேட்ட வீரேந்திரனுக்கு பதிலாய்…

“ம் நல்லா இருக்கேன் வீரா...நீங்க எப்படி இருக்கிங்க…?” என்று பதிலுக்கு நலம் விசாரித்த ஜானுக்கு அடுத்து பேச்சை எந்த திசையில் கொண்டு செல்வது என்று தடுமாறி அமைதி காத்தான்.

சாதரணமாக ஜான் பேச்சுக்கு தடுமாறுபவன் கிடையாது. அவன் பேச்சு எப்போதும் மடை திறந்த வெள்ளம் போல் தான் வரும். அவன் பேச்சு திறமை தான் அவனின் கற்பிக்க வந்த போது அவனுக்கை கை கொடுத்தது.

எந்த வித மாணவ… மாணவியர்களையும்… தன் பேச்சு திறமையின் மூலம், எளிதாய் அவன் தன் வசப்படுத்தி விடுவான்.

பல நாடு, பலதரப்பட்ட மாணவர்கள் வந்து படிக்கும் கல்லூரி அது...ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பர். மற்ற ஆசியர்கள் ஒதுங்கி போகும்...ஒதுக்கி தள்ளும் மாணவனையும் தன் பேச்சின் மூலம் நல் வழிக்கு கொண்டு வந்து விடுவான்.

அப்படி பட்ட ஜான் அடுத்து என்ன பேசுவது…?என்று யோசித்தான். தான் ஏதாவது பேச போய் அது வேறு விதமாக போய் விடுமோ என்ற பயம் தான் ஜானுக்கு… தன் நிலை யாருக்கும் வரக்கூடாது.

இது வரை தன்னோடு அதிர்ஷ்ட்டம் செய்தவர்கள் யாரும் இல்லை என்று நினைத்திருந்த ஜானின் மனம், எப்போது மணிக்கும் தனக்கும் இருக்கும் உறவு முறை தெரிந்ததோ...அன்றே...அவனின் மனம் மரித்து போய் விட்டது.

அவன் அந்த சூழ்நிலையை கைய்யாள மிக மிக தவித்து போனான். ஒரு சில சமயம் தற்கொலை செய்துக் கொள்வோமா என்று கூட யோசித்தான். அதுவும் தங்கள் உறவு முறை காலம் கடந்து தெரிந்து இருந்தால்…? அதை நினைத்து பார்க்கவே அவனால் முடியவில்லை.

தன் தாய் தந்தை மட்டும் அன்று தனக்கு துணையாக இல்லாதிருந்தால், இன்று அவன் இல்லை அது மட்டும் நிச்சயம்.

கடந்ததை நினைத்து வருந்தியவனின் காதில் வீரேந்திரனின்… “ஜான் போனது போகட்டும். நடந்ததில் உன் தவறு எதுவும் இல்லை. நான் அப்போவும் இதை தான் சொன்னேன். இப்போவும் இதை தான் சொல்றேன். ஜான் அதில் இருந்து வெளியே வாங்க.. புது இடம். புது சூழ்நிலை, உங்கல பழைய நிலைக்கு கொண்டு வரும்.

சொல்ல முடியாது உங்க சரி பாதிய நீங்க அங்கே பார்த்தாலும் பார்க்கலாம். உங்க வாழ்க்கை உங்கல போலவே நல்லா அமையும் ஜான்.” என்று சொன்னவனின் குரல் ஜானின் மனது ஏற்க ஒரு பக்கம் முயற்ச்சி செய்தாலும்,

மறுபக்கம் அவனின் மனம்..வீரேந்திரனை பற்றிய அலசலில் ஈடுப்பட்டது. வீரா அன்றும் தன் நிலை உணர்ந்து தன் மனதுக்கு ஆறுதலாக தான் பேசினான்.

இன்றும் தங்கள் தொழிலான ஓட்டலை துபாயில் தொடங்க இருப்பதை கேள்வி பட்டு...அதுவும் அதை முழுவதை நான் எடுத்து நடுத்துகிறேன் என்று தெரிந்தும் ..இதோ என்னை அழைத்து விட்டான். ஆனால் என்னால் தான் அவனிடம் சகஜமாக பேச முடியவில்லை.”

ஆனால் பேசியின் மறுப்பக்கத்தில் பேசிக் கொண்டு இருந்த வீரேந்திரனுக்கு ஜானின் தயக்கம்...அவனின் மனம் புரிந்தவனாய்...ஜான் அதிகம் பேசவில்லை என்றாலும் அவன் பேசினான்.

“கலிபோனியாவில் இருக்கும் பிரான்சு எல்லாம் உங்க அப்பா ஒருவரால் பார்த்துக்க முடியுமா ஜான்…? வயசாயிடுச்சே அவரால் தனியா பார்த்துக்க முடியுமா…?” என்று வீரேந்திரன் கேட்டதற்க்கு…

“வீரா அவரை வயசாயிடுச்சின்னு மட்டும் சொல்லிடாதிங்க. அதுவும் அவர் காதில் விழும் படி. அவ்வளவு தான் நீங்க.” என்று சொன்ன ஜானின் பேச்சும் சரி, குரலிலும் சரி…முன் இருந்த அந்த தயக்கம் இல்லாது இருக்க..

ஓ இவனுடைய எனர்ஜி இவன் அப்பா அம்மா தானா…?என்று அறிந்த வீரேந்திரன் அதை ஒட்டியே தன் பேச்சை தொடர்ந்தான்…

“ஏன் ஜான். அவருக்கு வயசு ஒரு ஐம்பத்தைந்து இருக்கும் தானே…?” என்று ஜானின் தந்தையை தன் பேச்சில் சேர்த்துக் கொண்டு வீரேந்திரன் பேசினான்.

“நீங்க சொன்னதோட ஒரு வயசு கூட தான். ஆனா அப்பா இப்போவும் இளமையா தான் உணர்வாரு...அதன் காரணம் அம்மா...அம்மாவும் அப்பாவும் அவ்வளவு ஆத்மார்த்தமான தம்பதிங்க வீரா…

நான் பார்த்ததிலே பெஸ்ட் கபுல் யாருன்னு கேட்டா... நான் டக்குன்னு சொல்வேன்...மை டாட் அம்மா…” என்று சொன்ன ஜான் ஏதோ கனவுலகில் மிதப்பது போல் தன் பேச்சை தொடர்ந்தான்.

“சின்ன வயசுல இருந்தே...டாடிக்கு அம்மா மேல அப்படி பட்ட ஒரு லவ் வீரா...அம்மா கூட சில சமயம் சொல்வாங்க. பையன் எதிர்க்க என்ன இது போல் பேச்சுன்னு...ஆனா அதுக்கு டாட்...நம்மல பார்த்து அவனும் அவன் வாழ்க்கையை அமச்சிக்கட்டும் என்று.

அந்த சொல் என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன் வீரா...இங்கு எல்லாம் பதினாறு வயசுலேயே டேட்டிங் போக ஆராம்பிச்சிடுவாங்க.

ஆனா நான் இன்னை வரை…நோ...இதுக்கும் எனக்கு நிறைய லவ் ப்ரபோஸ் வந்து இருக்கு...டேடிங்கும் கூப்பிட்டு இருக்காங்க..

அவங்களிடம் என்னுடைய பதில் நோ தான். அதுக்கு காரணம் என் டாட்...அம்மா...அவங்கல பார்த்து வளர்ந்த நான், அவங்க வாழ்வது போல நானும் வாழனும் என்று ஆசை பட்டேன்.

அதான் முதல்ல பெல்ல என் க்ளாசுல பார்த்ததும்… இந்த பெண் என் அம்மா போல இருக்காளே...நினச்ச செகண்ட் என் மைன்ல வந்தது…

அவங்க போல வாழ்க்கை வாழனும் என்றால்...அம்மா போல பெண் கிடச்சா தான் சரியா இருக்கும். அப்போ மணி தான்…நான் நினச்சது சுத்த பைத்தியக்கார தனம் என்று இப்போ தோனுது வீரா…

அம்மா போல பெண்ணும் இருப்பா...அப்போ மணி என் அம்மா போலேன்னா...எனக்கு தங்கை போலேன்னு நினைக்கல பாரேன். அன்னைக்கு நான் கொஞ்சம் யோசிச்சி இருந்தா…

எல்லாரும் எவ்வளவு சந்தோஷமா இருந்து இருக்கலாம். என்னுடைய அந்த பைத்தியக்கார தனத்தால...எங்க அம்மாவுக்கு கிடைக்க வேண்டிய அம்மா வீட்டு உறவு கடைசி வரை கிடைக்காமயே போயிடுச்சி வீரா…

அதுவும் நீங்க சொன்னிங்கலே வரா பெரிம்மா பத்தின விசயம். அதை கேள்வி பட்டதில் இருந்து என் மனசு ரொம்ப அறிச்சி திங்குது வீரா…

நான் நான் மணி கிட்ட அது போல...சே..சே...இன்னைக்கு என் பெரியம்மாவுக்கு செய்ய வேண்டியது அனைத்தையும் ஒரு மகனா செஞ்சு இருப்பேன் வீரா… எல்லாம் போயி..

அம்மாவுக்கு வரா பெரியம்மாவை பத்தி கேள்வி பட்டதில் இருந்து...அவங்க முகத்தை என்னால பார்க்க முடியச்ல வீரா...அதுவும் மனசுல இருக்கும் கஷ்டத்தை சொல்லி அழுதா கூட பரவாயில்ல…

அவங்க கஷ்டபடுறத நான் பார்த்தா எங்கே என் வேதனை இன்னும் கூடுமோன்னு நினச்சி, என் எதிரில் ரொம்ப சாதரணமா காட்டிக்க அவங்க படுற கஷ்டத்தை தான் என்னால பாக்க முடியல வீரா…

டாடி கிட்ட தனியா இருக்கும் போது சொல்லி வேதனை படுவாங்க போல...அவங்க ரூமுல இருந்து வெளிவரும் போது, அம்மா கண் இரண்டும் சிவந்து போய் இருக்கும். நானும் எனக்கு தெரிஞ்சதை காட்டிக்காம இருந்துப்பேன்.

என்னால எல்லோருக்கும் கஷ்டம் வீரா..இதோ ஒரு நண்பனாய் நீ...உன்னிடம் கூட எனக்கு பேச ஏதோ ஒரு தயக்கம் வீரா…”

மடை திறந்த வெள்ளம் போல் பேசியவனின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த வீரா… “உனக்கு என்னிடம் பேச என்ன தயக்கம் ஜான்…? நான் என்னை அறியாம உன் மனது வருந்துவது போல ஏதாவது பேசினேனா…?” என்று வீரா கேட்டான்.

“சேச்சே நீ என்னிடம் அது போல் பேசியது இல்ல வீரா...நீ பேசி இருந்தா எனக்கு இந்த குற்றவுணர்ச்சி கொஞ்சமாவது போய் இருக்கும் போல…” என்று ஜான் சொன்னதற்க்கு…

“அது என்ன சிட்டுவும் நீயும் எப்போ பாரு குற்றவுணர்ச்சி குற்றவுணர்ச்சின்னே சொல்லிட்டு இருக்கிங்க…?” என்று வீரா சொல்லவும்…

சட்டென்று ஜான்… “அவ ஏன் அது போல பேசுறா...என்ன ஆச்சு வீரா பெல் ஒகே தானே…?” என்று பதட்டத்துடன் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே ஜானின் குரல் மெல்ல மெல்ல தேய்ந்து பின்…

“சாரி வீரா...சாரி...நான் ஏதோ ஒரு இதுவுல மணிய பத்தி கேட்டுட்டேன்.” என்று வருந்தியவனின் பேச்சை இடையிட்டு தடுத்து நிறுத்தினான் வீரா…

“மணிய பத்தி கேட்டதுல என்ன தப்பு ஜான்...?நீ என்ன மனநிலையில் இருக்கேன்னே எனக்கு தெரியல...இப்போ சொல்றேன் கேட்டுக்கோ ஜான். மணிய பத்தி விசாரிக்க எல்லா உரிமையும் உனக்கு இருக்கு…

மணி உன்னோட பெரியம்மா மகள்..அதோட உன்னோட ஸ்டுடண்ட். அவள பத்தி நீ அக்கறை படுவதில் தப்பே இல்ல. ஒகேவா…” என்ற வீரேந்திரனின் பேச்சில் ஆசுவாசம் அடைந்த ஜான்…

“இப்போது பெரியம்மா பெரியப்பா எப்படி இருக்காங்க வீரா…?” என்று கேட்டான்.

வீரா தன்னிடம் பேசும் போதே முதலில் பெரியம்மா பெரியப்பாவை பற்றி தான் விசாரிக்க எண்ணினான். ஆனால் வீரா ஏதாவது நினைத்து விடுவானோ என்று பயந்து கேட்காது விட்டதை… வீராவின் இப்பேச்சு விசாரிக்க வைத்தது.

“அவங்களுக்கு என்ன ஜான் சும்மா ஜம்முன்னு இருக்காங்க. அத்தை சமையல் எப்போவும் நல்லா தான் இருக்கும். நான் கூட உன் கிட்ட சொல்லி இருக்கேனே ...நான் என் கல்லூரி படிக்கும் போது கூட நாங்க எல்லாம் ஒரே வீட்டில் தான் இருந்தோம் என்று.

அப்போ சமையல் எல்லாம் பெரிய அத்தை தான். நல்லா சமைப்பாங்க.ஆனா இப்போ தான் அவங்களோட முழு சாமர்த்தியமே தெரியுது ஜான்.

இப்போ எங்களுக்கு அந்தமான கல்யாண சத்திரம் மட்டும் இல்லாது, டவுனில் இருக்கும் மூன்று நாளு கல்யாண சத்திரத்தில் கல்யாணம் செய்யிறவங்க கூட வரா அத்தை கிட்ட தான் சாப்பாடு செய்ய சொல்லி வர்றாங்க.

நான் வாங்கி அவங்க குடியிருக்கும் தோப்பு வீட்டை அவங்க காசு கொடுத்து வாங்கிட்டாங்க ஜான். அதோட பக்கத்துல வந்த விவசாய நிலத்தையும் கொஞ்சம் வாங்கி அதுல காய்கறி பயிருட்டு...அவங்க சமைக்கிறதுக்கு அதுல இருந்தே எடுத்துக்குறாங்க..இப்போ என் சிட்டு கூட என்னை கவனிக்காம அவங்க அம்மா கூட சமையல்ல உதவி செய்ய போயிடுறா… இப்போ என் நிலமை தான் கொஞ்சம் மோசமா இருக்குன்னா பாரேன்.” சலிப்பது போல் பேசினாலும், வீராவின் பேச்சில் பெருமையே மித மிஞ்சி காணப்பட்டது.

அப்போது ஜான்… “வீரா நீங்க பெல்ல பத்தி பேச உரிமை இருக்கிறதாலே கேட்குறேன். அவ ரொம்ப அறிவாளி பொண்ணு...நீங்க அவள இப்படி வீட்டில் வெச்சி இல்லாம அவள் கால்ல நிற்பது போல செஞ்சா நல்லா இருக்கும்.

அவ ஆசையே அவ வருமானத்தில் அவள் அப்பா அம்மாவை மரியாதையோட வெச்சிக்கனும் என்பதே...அவளின் இந்த ஆசைய தான் நான் எனக்கு சாதகமா பயன் படுத்திக்க பார்த்தேன்.

அவ என் கிட்ட சம்மதம் சொன்னப்ப நீ தான் மாப்பிள்ளைன்னு அவளுக்கு தெரியாது. அவள் எண்ணம் இது தான் அந்த நாட்டுக்கு போனா...திரும்ப அதே அடிமை வழ்க்கை தான் வாழனும். அதனால இங்க இருக்கனும். தன்னோடு தன் அப்பா அம்மாவையும் அழச்சிக்கனும் இது தான் அவள் ஆசை. இப்போ..இப்போ…” என்று அடுத்து என்ன பேசுவது என்பது போல் யோசித்து தன் பேச்சை ஜான் நிறுத்த…

“நீங்க சொல்வது சரி தான் ஜான். அவ அப்பா அம்மாவை அவ பார்த்துக்கனும் என்று ஆசை பட்டா…ஆனா இப்போ அவ அப்பா அம்மாவே நாளு பேரை பார்த்துக்கும் சூழ்நிலையில் இப்போ இருக்காங்க. இப்போ அத்தை மாமாக்கு இது தானே பெருமை…?” என்று கேட்டவன்…

பின்… “ஆ அப்புறம் என்ன கேட்ட ஜான் அவ கால்ல நிக்கனும் என்று தானே...நான் சொன்னதை நீங்க சரியா கவனிக்கலேன்னு நினைக்கிறேன். அவள் அப்பா அம்மாவுக்கு உதவியா...இப்போ உதவியா இருக்குறவ அவங்க காலத்துக்கு பின் அதை முழுவதும் அவள் செய்வா...இப்போ அவள் கால்ல தானே நிக்கிற ஜான்…?” என்று கேள்வி எழுப்பிய வீரேந்திரன் பின் அவனே…

“ஒரு சமயம் அமெரிக்காவுல போய் படிச்சிட்டு இது போல அடுப்படியில் கிடக்கனுமா என்று ஏதாவது கவுரவ குறச்சலா நினைக்கிறிங்கலா ஜான்…?” என்று ஜானின் மனம் அறிய கேட்க…

“எங்க குடும்ப தொழில் என்ன வீரா…? ஓட்டல்...அதே தான் இப்போ பெரியம்மா அவங்க மகள் செய்யிறாங்க. அதுல கவுரவம் என்ற வார்த்தை எங்கு இருந்து வந்தது வீரா...

எங்க அம்மா அடிக்கடி ஒரு பழ மொழி சொல்வாங்க..வாழை அடி வாழை என்று...அம்மாவின் அப்பா சமையல் செய்பவர்...அதே போல் அவங்க இரண்டு பெண் என் அம்மா வரா பெரியம்மா சமையல் செய்பவங்க...வரா பெரியம்மா பொண்ணு அதை விடுத்து வேறு ஒன்னு பார்த்தா தான் நாம் ஆச்சரியப்படனும் வீரா…

நீங்க சொன்னது போல் நான் சரியா கவனிக்கலேன்னு தான் நினைக்கிறேன். நீங்க பெல் அவங்க அம்மாவுக்கு உதவியா போறான்னு சொன்னதும், வீட்டில் போர் அடித்ததால் இப்படி போனான்னு நினச்சிட்டேன். இப்போ புரியுது அடுத்த நளபாகம் நம்ம பெல்லுன்னு…” என்று சொன்னவனின் பேச்சில்.

சிரித்த வீரா பின் அமைதியான குரலில்.. “ஜான் நான் சொன்னது நியாபம் இருக்கட்டும். புது நாடு… புது நட்பு… உன்னை கண்டிப்பா மாத்துமுன்னு நான் நம்புறேன். அதோடு எந்த மாற்றமும் முதல்ல நம்மில் இருந்து ஆராம்பிக்கனும் என்று சொல்வாங்க.

முதல்ல நீ அதுல இருந்து வெளியே வா...நடந்ததில் யாரோட தப்பும் இல்ல. அத முதல்ல புரிஞ்சுக்கோ… அடுத்து இரண்டு வருடம் கழித்து… எனக்கு போன் போட்டு உன்னுடைய கல்யாணத்திற்க்கு என்னை அழைக்கனும்.” என்று கட்டளையோடு வீரேந்திரன் சொல்ல…

“அப்போ இரண்டு வருஷம் உனக்கு நான் போன் போட கூடாதா வீரா…” என்ற கேள்விக்கு…

“நீ எப்போ என்றாலும் அழைக்கலாம். ஜான்.” என்ற பேச்சோடு அவர்களின் உரையாடல் முடிவு பெற்றது.

வீரேந்திரன் சொன்னது போல் இப்போது எல்லாம் வரலட்சுமியும் கமலக்கண்ணனும் படு பிசியாகி விட்டனர். கமலக்கண்ணன் தன் மனைவிக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்தார். காய்கறி பறிக்கும் போது மேல்பார்வையிட்டு, எந்த சத்திரத்திற்க்கு எது எது எந்த எந்த அளவு கொண்டு செல்ல வேண்டுமோ அனைத்தையும் ஒழுங்காக அது அது சேர வேண்டிய இடத்திற்க்கு சேர்பித்து விடுவார்.

அதே போல் பலசரக்கை வாங்கும் பொருப்பும் நம் கமலக்கண்ணன் வசம் தான். வருமானம் பெருகுவது போல் வரலட்சுமியின் கமலக்கண்ணன் அவர்களின் அந்நியோனியமும் பெருகலாயிற்று..

முதலில் எல்லாம் விரலட்சும்மிக்கு தன் கணவன் அவர் வீட்டிலேயே இருப்பது தான் பிடிக்காத ஒன்றாய் இருந்தது.ஏன் இது போல் இருப்பவர்கள் வசதி இல்லாத போதும் என்ன என்ன செய்கிறார்கள்.

இவர் இப்படி இருக்கிறாரே என்று நினைத்து தான் வரலட்சுமி வருந்தியது. இப்போது அதற்க்கு உண்டான காரண காரியம் தெய்வநாயகி வாய் மூலமே தெரிந்ததில் இருந்து அனைத்தும் மாறி போய் ஒரு குழந்தைக்கு தாய் எப்படி முதலில் இருந்து ஆராம்பித்து கற்று கொடுப்பாரோ அது போல் கணவனுக்கு அனைத்தும் கற்று கொடுத்து இன்று...கமலக்கண்ணன் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்று அனைவருக்கும் நிரூபித்து விட்டார் நம் வரலட்சுமி.

வீரேந்திரன் வீட்டில் அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் அனைவரும் காலை உணவை முடித்த பின் சாவுகாசமாய் பேசிக் கொண்டு இருக்கும் போது சங்கரி வீரேந்திரனிடம்..

“ஆனாலும் உனக்கும் உன் பாட்டனுக்கும் நெஞ்சு அழுத்தம் அதிகம் தான்டா…” என்று இந்த வார்த்தையை சங்கரி எத்தனை தடவை சொல்லி இருப்பார் என்று சொன்ன அவருக்கும் தெரியாது, கேட்கும் வீராவுக்கும் தெரியாது. எண்ணில் அடங்கா அளவுக்கு சொல்லி விட்டார்.

அப்போது கூட வீரா வாய் திறக்காது ஒரு புன்னகை மட்டும் சிந்தியவனாய் தன் தாயை பார்க்க..அதை பார்த்து இன்னும் சங்கரிக்கு கோபம் ஏற…

“ஏன்டா என் அப்பா தான் பத்து வருடம் முன் உன் கிட்ட உன் அம்மத்தாவை யாரோ மிரட்டுறாங்கன்னு நினைக்கிறேன்.

அவள் அம்மா வீட்டு வேலையாளுன்னு யாரோ ஒருத்தான் மூன்று தடவை வந்தான். அந்த மூணு தடவையும் உன் அம்மத்தா முகம் ஒரு மாதிரி ஆயிடுச்சி…

அதே போல் அவன் வந்து போன உடனே பீரோவில் இருக்கும் பணம் லட்சக்கணக்கில் குறஞ்சி போயிடுது. அதுக்கு உன் அம்மத்தா கிட்ட இருந்து ஒழுங்கான பதில் இல்லேன்னு எங்க அப்பா சொன்னதும்…

நீயும் உன் அளவுக்கு ஆள வெச்சி விசாரித்ததில், வீட்டுக்கு வந்து போனவன் அம்மாவுக்கு பிரசவம் பார்த்தவங்களோட மகன்.

அம்மாவுக்கு குழந்தை இறந்து பிறந்ததால வேலைக்காரி குழந்தையை, இவங்க குழந்தைன்னு எடுத்துட்டு வந்தாங்கன்னு...அவன் அப்போவே எல்லாத்தையும் சொல்லி இருக்கான். நீயும் அவனை மிரட்டி இனி இந்த பக்கம் தலைய வெச்சி படுக்க கூடாதுன்னு நல்லா மிரட்டி அனுப்பின…

எல்லாம் சரி தான். ஆனா அதை யாரு கிட்ட இல்லேன்னாலும் என் கிட்டவாவது சொல்லனுமுன்னு உனக்கு தோனுச்சா...ஆனாலும் உனக்கு இந்த நெஞ்சழுத்தம் இருக்க கூடாதுடா…” என்று சங்கரி எத்தனை முறை சொன்னாலும், அத்தனை முறையும் எதுவும் பேசாது இது போலவே சிரித்துக் கொண்டே அமர்ந்து இருப்பான்.

அப்போதும் சங்கரி விடாது ஏதே பேசிக் கொண்டு தான் இருப்பார். சில சமயம் இந்த பேச்சில் தன் மருமகளையும் கூட்டு சேர்த்துக் கொள்வார்.

அப்போது மட்டும் சங்கரி சொல்லும் உன் வகையில் அவனை மிரட்டி என்னும் போது…

அதற்க்கு மணிமேகலை … “அது என்ன நாசுக்கா உன் வகைன்னு அடியாளை வெச்சி...அதாவது உங்க மகன் அடியாளை வெச்சி அவங்க சொத்தை எல்லாம் எழுதி வாங்குறார்.” என்று தன் அத்தையிடம் முதல் முறை வீரேந்திரனை போட்டு கொடுக்கும் போது…

“என்னடா சிட்டு சொல்றா…?” என்று சங்கரி தன் மகனை மிரட்ட…

“அம்மா அவ சொல்றான்னு..அவ படிக்கும் போது என்னிடம் கடன் வாங்குனவனை என் ஆளு…” என்று அவன் சொல்லிக் கொண்டு வரும் போது இடையில் புகுந்து…

“அத்தை வெரும் ஆளு கிடையாது. இவருடைய அடியாள்.” என்று எடுத்து கொடுக்க…

“ஆமா அம்மா என்னுடைய அடியாள் இவள் சொல்ற அந்த நல்லவன் மிக மிக நல்லவனை அடிக்கும் போது பார்த்துட்டு…

அவன் என்னவோ அப்பாவீ போலவும்...நான் என்னமோ பாவீயோ பாவீ போலவும் நினச்சிட்டு இருக்கா…” என்று தன் அன்னையிடம் பேசிக் கொண்டு இருந்தவன்..

இப்போது மணிமேகலையை பார்த்து… “ஏன்டி அவன் என்ன செஞ்சான் தெரியுமா...வீடு கட்ட கடன் வாங்கினான். அதுவும் யார் பெயரில் அவன் மச்சினிச்சி பெயரில்…

மனைவி பிரசவத்துக்கு உதவிக்கு வந்த மச்சினிச்சிய...அவளுக்கே உதவி அதாவது பிரசவத்துக்கு உதவி தேவைப்படும் அளவுக்கு செஞ்சிட்டு...அவளை தனியா அதுவும் சொந்த வீட்டில் தான் வைக்கனும் என்று அவன் மனைவியோடு வாழும் வீட்டை என்னிடம் அடமானம் வெச்சி… கடன் வாங்கி மச்சினிச்சிய மாடியில் குடிவெச்சி மனைவிய வீதிக்கு கொண்டு வந்துட்டான்.

என்னிடம் வாங்கின காசுக்கு வட்டியும் கட்டல .அசலையும் கொடுக்கல..அப்போ அவன் அடமானம் வெச்ச வீட்டை பார்க்கும் போது தான் அவன் போஷி எல்லாம் தெரிஞ்சது.

அது தான் அடிச்சி உதச்சி அவன் மச்சினிச்சிக்கு கட்டின வீட்டை எங்க பைனான்சுக்கு எடுத்துட்டு, அடமானத்தில் இருக்கும் அவன் மனைவி வீட்டை அவங்க கிட்ட கொடுத்தேன்.” என்று சொன்னவன்…

“ஏன்டி நான் உண்மையில் மனைவிக்கு மரியாதை செய்து இருக்கேன். இதுக்கு நீ என்னை…” என்று சொல்லிக் கொண்டு வந்தவன் தான் கேட்கும் விசயம் அனைவரின் முன்னும் கேட்க முடியாது என்று...ஜாடையில் அப்புறம் கொடு டீ என்பது போல் சைகை செய்தான்.
 
Top